Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சர்வதேச மருந்தாளர்கள் தினம் இன்று
2015-09-25 10:46:17

ஒரு மருந்தை கண்­டு­பி­டித்­தலில் தொடங்கி நோயாளரின் நோயை குணப்­ப­டுத்தி அதன் பின்னும் அந் நோயாளி ஆரோக்­கி­ய­மாக வாழ பல வழி­க­ளிலும் மருந்­தா­ளர்கள் துணை புரி­கின்­றனர். 

 

மருத்­துவத் துறையில் மருத்­துவர், மருத்­துவ தாதி மற்றும் ஆய்வு கூட உத்­தி­யோ­கத்­தர்­களை பற்றி உங்­க­ளுக்கு­ தெ­ரிந்­தி­ருக்கும். ஆனால் மருந்­தா­ளர்­களை தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை, அப்­ப­டியே தெரிந்­தி­ருந்­தாலும் அதி­க­மாக ஆழ­மாக தெரிந்­தி­ருக்­காது.

 

ஒரு நோயா­ளியின் நோயை கண்­டு­பி­டித்தல் எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதை விட முக்­கி­ய­மா­னது அந்­நோயை  குணப்­ப­டுத்­தலும், கட்­டுப்­ப­டுத்­தலும் ஆகும். இங்­கேதான் மருந்­தா­ளர்கள் முக்­கிய பங்காற்று­கின்­றனர்.

 

ஒரு மருந்தை கண்­டு­பி­டித்­தலில் தொடங்கி தாயா­ரிப்பு, பாது­காப்­பாக பக்­க­வி­ளை­வுகள் குறைந்த அளவில் குறித்த நேரத்தில் ஒரு நோயா­ளிக்கு சென்­ற­டையும் வரை மருந்­தா­ளர்கள் பங்காற்­று­கின்­றனர்.

 

அது மட்­டு­மன்றி இவ் வேளை­களில் எதிர்­பா­ராத சில பக்­க­வி­ளை­வுகள் ஏற்­படின் அதனை உட­னுக்­குடன் பதிவு செய்து நிவர்த்­தியும் செய்­கின்­றனர். 

 

எயிட்ஸ், புற்­றுநோய், காச நோய், நீரி­ழிவு நோய் போன்ற நோயா­ளி­க­ளுக்கு மத்­தியில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி அவர்­களின் மன ஆற்­றுப்­ப­டுத்­தலிலும் முக்­கிய பங்கை வகிக்­கின்­றனர். 

 

மருந்­தாளர் தேர்ந்­தெ­டுக்கும் துறைக்கேற்ப அவ­ரு­டைய சேவை மாறு­படும். மருந்­தா­ளர்கள் அளப்­ப­ரிய சேவையை வழங்கி வரு­கின்­றனர்.

 

ஒரு நோயா­ளிக்கும் மருத்­து­வ­ருக்கும் இடையில் மருந்­தா­ளரின் சேவை மிக முக்­கி­ய­மா­னது. 

 

ஒரு மருந்­தாளர் மருந்தின் வினைத்­திறன், அதன் பயன்­பாடு, பக்க விளைவு, மருந்து பாவிக்கும் முறை, அளவு, காலம் பற்றி நன்கு அறிந்து வைத்­தி­ருப்­ப­தோடு மருத்­து­வ­ரினால் வழங்­கப்­படும் மருத்துவரின் மருந்துச் சிட்டைக்கு ஏற்ப மருந்தை நோயா­ளிக்கு வழங்­கு­வது மட்­டு­மன்றி தேவை­யான ஆலோ­ச­னை­களையும் வழங்கி நோய் சிகிச்­சைக்கு முக்­கிய பங்­காற்­று­கின்றார். 

 

சுகா­தார சேவையின் ஒரு பகு­தி­யா­ளர்­க­ளான மருந்­தா­ளர்­களின் சேவையை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் கொண்­டா­டப்­படும் தினம் தான் சர்­வ­தேச மருந்­தா­ளர்கள் தினம். 

 

2009 ஆம் ஆண்டு துருக்­கியின் இஸ்­தான்புல் நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச மருந்­தக சம்­மே­ள­னத்தில் துருக்­கியின் மருந்­தா­ளர்­களின் அமைப்பு முன்­வைத்த கோரிக்­கையை சம்­மே­ள­னத்தில் பங்கு பற்­றிய அனைத்து நாடு­களும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்டு, சர்­வ­தேச மருந்­தக சம்­மே­ளனம் தொடங்­கப்­பட்ட செப்­டெம்பர் 25 (1912) ஆம் திகதியை சர்­வ­தேச மருந்­தா­ளர்கள் தின­மாக 2009 ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 

 

2010ஆம் முதல் ஒவ்­வொரு ஆண்டும் ஒரு தொனிப்­பொ­ருளை வைத்து சர்­வ­தேச மருந்­தா­ளர்கள் தினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. 

 

2015 ஆம் ஆண்­டுக்­கு­ரிய தொனிப்­பொருள் “மருந்­தாளர் உங்கள் ஆரோக்­கி­யத்தின் பங்­காளர்” என்­ப­தாகும்.

 

 பொது­வாக எமது நாட்டில் சமூக மருந்­தா­ளர்­களை தான் நம்மில் பல­ருக்கு தெரியும்  எனினும் நமது நாட்டில் ஏறத்­தாழ 80 சத வீத தனியார் மருந்­த­கங்­களில் மருந்­தா­ளர்­களோ அல்­லது மருந்­தக பயி­லு­நர்­களோ இல்­லாமல் தான் இத்­துறை இயங்­கு­கின்­றது. 

 

இது இலங்கை போன்ற வளர்­முக நாடு­களின் சாபக்­கே­டாகும். எனினும்  தற்­போ­தைய எமது நாட்டின் ஜனா­தி­பதி  சுகா­தா­ரத்­துறை அமைச்சர் மற்றும் தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­கா­ர­ச­பையின் உயர் அதி­கா­ரிகளின் தீவிர முயற்சியினால் புதிய சட்­ட­மூலம் நாடா­ளு­மன்­றத்தில் அங்­கி­க­ரிக்­கப்­பட்டு 2015 ஜூலை முதலாம் திகதி முதல் இப் புதுச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

 

இப் புதிய சட்­டத்தில் தெளி­வாக நோயா­ளி­க­ளுக்கோ வேறு நபர்­க­ளுக்கோ மருந்தை மருத்­து­வரின் சிட்டைக்கு ஏற்ப விநி­யோ­கிக்கும் உரிமை  மருந்­தாளர், மருந்­தா­ளரின் மேற்­பார்­வையில் பயி­லுநர் மருந்­தா­ளர்­கள் மட்­டுமே தகுந்த அறி­வு­ரை­க­ளுடன் விநி­யோ­கிக்க அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 

இது மருந்­தா­ளர்­க­ளுக்கு ஒரு கௌர­வத்­தையும் வெற்­றி­யையும் தரு­கின்­றது. 

 

நோயாளர் அல்­லது வேறு எவரும் மருத்­து­வரின் மருந்துச் சிட்டைக்கு மருந்தை வாங்கும் போது மருந்­த­கத்தில் காட்சிப்படுத்தபட்டிருக்கும் உரிமத்தில்  (licence) காணப்படும் புகைப்படத்தில் இருக்கும் மருந்தாளரின் மேற்பார்வையில் மருந்துகளைப் பெற்று இனிவரும் காலங்களில் மருந்தாளர்களை பெருமைப்படுத்துவோம்.

 

இதன் மூலம் இவ் ஆண்டுக்குரிய தொனிப் பொருளான “மருந்தாளன் உங்கள் ஆரோக்கியத்தின் பங்காளன்” என்பது உறுதிப்படுத்தப்படும்.

 

 
-ப.சுந்தரேசன்

மருந்தாளர்,
ஆயுட்கால உறுப்பினர், அகில இலங்கை மருந்தக சம்மேளனம்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.