Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிறுமிகள் 12 வயதின் பின் சிறுவர்களாக மாறுகின்றனர்
2015-09-22 10:42:26

சிறுமிகளாக பிறக்கும் பிள்ளைகள் சுமார் 12 வயதின் பின்னர் ஆணுறுப்பு வளர்ச்சியடைந்து ஆண்களாக மாறும் அதிசயக் கிராமமொன்று டொமினிக்கன் குடியரசில் உள்ளது.

 

கரீபியன் பிராந்திய நாடுகளில் ஒன்றாக டொமினிக்கன் குடியரசு உள்ளது. அந்நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள பரஹோனா மாகாணத்தின் சலீனாஸ் எனும் கிராமத்திலேயே இந்நிலை காணப்படுகிறது.

 

இவ்வாறானதொரு அபூர்வ கிராமம் இருப்பது குறித்த தகவல் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிதல்ல. 

 

1970 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜூலியன் இம்பெரெட்டோ இத்தகவலை அறிந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். 

 

தற்போது, பிரிட்டனின் பி.பி.சி.யின் உயிரியல் நிகழ்ச்சி தயாரிப்பாளரான டாக்டர் மைக்கல் மொஸ்லியும் மேற்படி கிராமத்துக்குச் சென்று, இது தொடர்பாக 'Countdown to Life: The Extraordinary Making of You' எனும் விவரண நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளார்.

 

சலீனாஸ் கிராமத்தில் பிறக்கும் பிள்ளைகள் 90 பேரில் ஒருவர் பருவமடையும் தருணத்தில் சிறுமியாக இருந்து சிறுவனாக மாறுகின்றனராம். 

 

இப்பிள்ளைகள் பிறக்கும்போது பெண்குழந்தைகள் போன்றே தோற்றமளிக்கின்றன.

 

பெண் குழந்தைகளாகவே அவை வளர்க்கப்படுகின்றன.

 

ஆனால், பருவமடையும் தருணத்தில் அப்பிள்ளைகளுக்கு ஆணுறுப்பு, விதைகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன.

 

அதன்பின் அவர்கள் ஆண்களாக வாழ ஆரம்பிக்கின்றனர்.

 

ஒரு சிலர் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டு, தொடர்ந்தும் பெண்ணாக வாழ்கின்றனராம்.  

 

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் நிலையை உள்ளூர் மக்கள் குவேடொசஸ் மற்றும் மெச்சிஹெம்ப்ரஸ் ஆகிய இரு சொற்பதங்களால் குறிப்பிடுகின்றனர்.

 

குவேடொசஸ் (Guevedoces,)  என்பதற்கு 12 வயதில் ஆணுறுப்பு என அர்த்தமாம். மெச்சிஹெம்ப்ரஸ் (machihembras) என்பதற்கு “முதலில் பெண் பின்னர் ஆண்” என அர்த்தமாம்.

 

இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கெண்ட கலாநிதி ஜூலியன் இம்பெரெட்டோ.

 

5 அல்பா ரிடக்டேஸ் எனும் நொதியக் குறைபாடு காரணமாக இவர்கள் பிறக்கும்போது ஆணுறுப்பை கொண்டிருப்பதில்லை எனக் கண்டறிந்தார்.

 

இந்த ஆய்வை பயன்படுத்தி அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமொன்று “பைனஸ்டரிட்” எனும் சக்திவாய்ந்த மருந்தொன்றையும் தயாரிக்க ஆரம்பித்தது.  

 

அண்மையில் சலீனாஸ் கிராமத்துக்குச் சென்ற பி.சி.சி.யின் கலாநிதி மைக்கல் மொஸ்லி, குவேடொசஸ் இளைஞனான ஜொனியை செவ்வி கண்டனர்.

 

தான் சிறுவயதில் பெலிசியா எனும் சிறுமியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.  

 

“நான் வைத்தியசாலையில் இல்லாமல் வீடொன்றில் பிறந்தேன்.

 

நான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

 

சிறு பருவத்தில் பாவாடை அணிந்துகொண்டு பாடசாலைக்குச் சென்றேன்.

 

எனக்கு சிறுமிகள் போல் ஆடையணிவது ஒருபோதும் பிடிக்கவில்லை.

 

சிறுமிகளுக்கான பொம்மைகளையும் நான் விரும்பவில்லை. ஏனைய சிறுவர்களுடன் இணைந்து விளையாடுவதையே நான் விரும்பினேன்” என ஜொனி தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.