Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
“இலங்­கையில் பெண்கள் யாருமே அழ­காக இல்­லையே...” : பொறி­யி­யல் ­கற்க வந்த ஆபி­ரிக்க மாண­வனின் ஆதங்கம்
2015-09-04 11:15:56

-நிலா லோக­நாதன்

 

மி­ழ­ரிடம் இருக்கும் பண்­பு­களில் முக்­கி­ய­மா­னது, தமி­ழச்­சிடா... தமி­ழண்டா... உடல் மண்­ணுக்கு, உயிர் தமி­ழுக்கு போன்ற “க்ளிஷேக்கள்”.
கல்லும் மண்ணும் தோன்­றாத காலத்தில் தோன்­றின மொழி­யா­ததால் இந்தப் பெருமை இருக்­கலாம்.


இருக்­காதா பின்ன? நுண்­ணங்­கி­க­ளெல்லாம் தமிழ் தான் கதைச்­சி­ருக்­கு­துகள்.


சரி இருக்­கட்டும். ஏனைய நாடுகள், மொழிகள், கலா­சா­ரங்­களைச் சேர்ந்­த­வர்கள் தம்மைப் பற்றி எவ்­வாறு மதிப்­பி­டு­கி­றார்கள்?


இலங்கை ஆதர் சி கிளார்க் ஆராய்ச்சி கூடத்தில், எந்­திரப் (ரோபோட்டிக்) பொறி­யியல் ஆராய்ச்­சித்­து­றையில், எங்­க­ளோடு  கடைசி வரு­டத்தில் ஒரு ஆபி­ரிக்க இளைஞன் படித்தான்.


மேற்கு ஆபி­ரிக்­காவின் நைஜீ­ரி­யா­வி­லி­ருந் வந்­தி­ருந்து அவனின் பிரச்­சினை இலங்­கையில் பெண்கள் யாரும் "வடி­வாக" இல்லை என்­பதே.
வடிவு, அழ­கு­ணர்ச்சி போன்­றவை ஆளுக்காள் வேறு­படும். இருப்­பினும் இலங்கைப் பூராவோ, கொழும்­பிலோ எந்தப் பெண்ணும் வடி­வா­யில்லை என்று சொன்னால் தூக்கி வாரிப் போடாதா?


அஃப்­ரோ­ ஏ­ஷி­யாட்டிக் மொழிக் குடும்­பத்­தின் ­மொ­ழி­களில் ஒன்­றான ஹவ்சா மொழியை தாய் மொழியாக் கொண்ட அவ­னிடம் தனது மொழி­யையும், தாய் நாட்­டையும் போற்றும் பண்பு, தமிழ்த் தேசியக் குட்­டி­களை விடவும் அதிகம். பல நேரங்­களில் எரிச்சல் வரு­ம­ள­வுக்கு ஹவ்சா மொழியின் உச்­ச­ரிப்­புக்­க­ளையும், ஆங்­கிலம் ஹவ்­சாவை எப்­படி உள்­வாங்கிக் கொண்­டது என்­ப­தையும், தன் மொழி­யி­லுள்ள அறி­ஞர்­க­ளையும் இன்­டர்நெட் லின்கில் எடுத்துக் காட்டிக் கொண்டே இருப்பான். ஹவ்சா மொழியை இல­குவில் கற்­பது எப்­படி என்­றெல்லாம் “தொடுப்பு” அனுப்­புவான்.


ஆய்வுக் குழுவில் அவ­னுடன் பெயர் வந்தால், எந்­தி­ரத்தை விட்­டு­விட்டு ஹவ்சா மொழியைப் பற்­றித்தான் எங்கள் குழு­வினர் ஆராய வேண்­டி­யி­ருக்கும்.


மொழி பற்­றியோ, மதம் பற்­றியோ யாரா­வது ஒரு பக்க நிலையைக் கதைக்கும் போது அதன் எதிர்ப்­பக்­கத்தை, மொழி­வா­தமும் மத­வா­தமும் இல்­லாத "எங்­க­ளையே" கதைக்க வைத்து விடு­வார்கள் போல சிறப்புத் தேர்ச்சி பெற்­றி­ருப்பர் சிலர். அந்த ஜென் நிலை­யி­லி­ருந்து உணர்ச்சி வசப்­ப­டாமல் இருப்­ப­தற்கு நீண்ட பயிற்சி தேவை.


கொஞ்சம் ஆழ­மாகச் சிரித்து விட்டு, எதுவும் சொல்­லாமல் கேட்டுக் கொண்­டி­ருப்பேன்.


“உங்கள் மொழி, உங்கள் மதம் பற்றி சொல்­வ­தற்கு ஒன்­று­மில்­லையா?” என்று அடிக்­கடிக் கேட்பான்.


“உங்கள் மொழி போலவே எங்­க­ளதும் நல்­லதொரு பேச்சு ஊடகம்” என்று விட்டு பேசா­ம­லி­ருப்பேன்.


“அப்போ மதம்?”


“பிறப்பால் நானி­ருக்கும் மதம் பற்றி நிறைய கர்­ண­ப­ரம்­பரைக் கதைகள் உண்டு. தவிர எனது மதத்தில் நம்­பிக்கை இல்லை” என்பேன்.


ஓ... எனது மதத்தை நம்பு. அது ஒரு புனிதப் பாதையைக் காட்டும் என்றான்.


ஐயோ... எந்த மதத்­தையும் நான் நம்­பு­வ­தாக இல்லை. நான் ஒரு மத மறுப்­பாளர் என்றேன்.


அதற்கு அவன், மதத்தை மறுப்­பதால் சொர்க்கம் என்­றொன்று இருப்­பதை உன்னால் அறிய முடி­யாது. என்­றான் தனது மதத்தை  ஏற்­றுக்­கொள்ள வைப்­ப­தாக சபதம் செய்தான். அதன் பின் பயிற்சியின் போது எந்­தி­ரத்தின் ஆளியை துண்­டித்து விட்டுச் சொல்லத் தொடங்­கினான்.


மதப் பிர­சா­ரத்தை விடுவோம். தனது மொழி பற்­றிய உச்ச எண்ணம் அரு­வ­ருப்பை ஊட்­டி­னாலும் தமி­ழர்­களின் அதே எண்­ணப்­பாட்டை மொழி விட­யத்தில் கொண்­டி­ருந்தான்.


நான், தமி­ழ­ரிடம் இருக்கும் அதே குணங்­குறி தான் அங்­கே­யுமா என்­பதை அறிய கேள்­விகள் கேட்­டுக்­கொண்டே இருப்பேன்.


கொலனி ஆட்சி, சாதியம், பெண் ஒடுக்­கு­முறை, வழி­பாட்டு முறைகள், ஆங்­கி­லேய ஆதிக்கம் ... இப்­படி தமிழ்­கூறும் நல்­லு­லகின் எல்லாப் பண்புக் குண­த்­தி­னூ­டா­க­வும் தான் மேற்கு ஆபி­ரிக்கா வெளி­வந்தும் வரா­மலும், மூடிக்­கட்டிக் கொண்­டு­மி­ருக்­கி­றது. ஆக இந்த எண்­ணப்­பா­டுகள் இரு­பே­ருக்கும் பொது­வா­னது தான். சிந்­த­னை­முறை கிட்­டத்­தட்ட ஒன்று தான்.


ஆனால்... அழ­கு­ணர்வு பற்­றிய பார்­வையில் அவ­னு­டைய சிந்­தனை எத்­தனை மேற்­கத்­திய உலக மய­மாக்­கத்­தி­னாலும் அடிக்க முடி­யாத நாட்­டு­டை­மை­யா­னது.


கறுத்த, பரு­ம­னான, சுருண்ட கேசங் கொண்ட, அகன்ற உத­டு­க­ளு­டைய உயர்ந்த பெண்­களே உலகில் மிக மிக அழ­கா­ன­வர்கள் என்று ஒரு எந்­தி­ர­வியல் ஆராய்ச்சியாள­னான அவன் அடித்து நம்­பு­கிறான்.


இலங்கைப் பெண்கள் அழ­கில்­லா­த­வர்­க­ளென்­ப­தையும் அடித்து நம்­பு­கிறான். (இந்த ஒரே கார­ணத்தால் அவ­னிடம் சாவ­கா­ச­மாகக் கதைக்­கலாம்)
மொழி­யையும், மதத்­தையும் மட்­டுமே தூக்கிப் பிடிப்­ப­வர்கள் அந்த வாழ்­வியல் முறையின் ஏனைய பண்­பு­களை அழித்து ஒரு இன­மா­கவும், மத­மா­கவும் மட்­டுமே அடை­யாளப் படுத்­து­கி­றார்கள். ஆயின் இவ்­வு­ணர்­வுகள் நச்சு அர­சி­யலின் ஒரு பகு­தியே.


அவ­னு­டைய அந்த அழ­கு­ணர்ச்சி பற்­றிய நம்­பிக்­கையை மட்­டு­மா­வது நான் ஏற்றுக் கொண்­டாக வேண்டும். அவ­னு­டைய உல­கைப்­பற்­றிய பார்வை தனக்குத் தெரிந்த, தான் பழக்­கப்­பட்ட ஒன்­றுடன் பிணைந்­தது.
கொழும்பில் தானிய உணவைத் தேடி வெகு இடங்கள் அலைவான். பருத்தி உடை­களை அணிவான்.


தமி­ழ­ரு­டைய தேசியப் பண்­பு­களும், பண்­பாட்டைக் கடத்­தலும் தமது தேவைகளிலும், விருப்பு வெறுப்புக்களிலும் எத்தகைய பாதிப்பைச் செலுத்துகிறது?


பண்பாட்டின் மிகச்சிறந்த தமிழரின் அழகுணர்ச்சியானது எந்தக் காலத்தில் தேசியமாக இருந்திருக்கிறது?


எங்களுக்கு அழகாக இருப்பதும், சுவையாக இருப்பதும், தோதாக இருப்பதும், தேவையாக இருப்பதும் எங்களுக்கு ஒவ்வாத எதுவோ ஒன்று. நாங்கள் தம்பட்ட மடிப்பதும், தட்டிக் கொடுத்து வளர்ப்பதுவும் கூட எங்களில் அல்லாதனவற்றையே.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.