Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஸிகா அச்சுறுத்தலை மீறி கோலாகலமாக நடைபெற்ற சம்பா திருவிழா
2016-02-12 13:24:12

பிரே­ஸிலின் புகழ்­பெற்ற ரியோ டி ஜெனெய்ரோ களி­யாட்ட விழா கடந்த 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திக­தி ­வரை ரியோ டி ஜெனெய்ரோ மற்றும் சாஓ பௌலோ நக­ரங்களில் நடை­பெற்­றது.

 

 

இந்த விழாவின் ஒரு பகு­தி­யான சம்பா நடன ஊர்­வ­லங்­களில் பங்­கு­பற்­று­வ­தற்கும் பார்­வை­யி­டு­வ­தற்கும் தினமும் 20 இலட்சம் பேர் ரியோடி ஜெனீரோ நகர வீதி­களில் திர­ளு­வது வழக்கம்.

 

மத ரீதி­யான பின்­ன­ணி ­கொண்ட ரியோடி ஜெனெய்ரா களி­யாட்ட விழா 1823 ஆம் ஆண்டு முதல் வரு­டாந்தம் நடை­பெ­று­கி­றது.

 

 

தற்­போது உலகின் மிகப்­பொ­ரிய களி­யாட்ட விழா­வாக இது விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.  

 

ரியோ ஊர்­வலம், மற்றும் சம்பா ஊர்­வலம் என அழைக்­கப்­படும் சம்பா நடன ஊர்­வ­லங்கள் கவர்ச்சி நட­னங்­க­ளுக்குப் பெயர் பெற்­றவை.

 

 

நடன மங்­கைகள் மிகக் குறைந்த ஆடை­க­ளுடன், சில­வேளை ஆடை­களே இல்­லாமல் ஆப­ர­ணங்­க­ளாலும் பொடி பெயின்ற் எனும் வர்ணப் பூச்­சு­களால் மாத்­திரம் உடலின் அந்­த­ரங்கப் பாகங்­களை அரை­கு­றை­யாக மறைத்­துக்­ கொண்டு நட­ன­மா­டு­வ­துண்டு.  

ஆனால், இந்த நடன ஊர்­வ­லங்கள் சாதா­ரண குத்­தாட்டம் அல்ல. இவை கடு­மை­யான போட்­டி­களின் ஒரு பகு­தி­யாகும்.

 

 

இந்­ ந­ட­னங்­களும், இந்த ஊர்­வ­லத்தில் இடம்­பெறும் பல்வேறு வகை­யான அலங்­கார ஊர்­திகள், பாரிய பொம்­மை­களும் சம்பா பாட­சா­லைகள் எனும் விசேட பாட­சா­லை­களால் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றன.  

 

பார்­வை­யா­ளர்­க­ளுக்கு  இந் ­ந­ட­னங்கள் வெறும் கவர்ச்சி நட­ன­மாகத் தோன்­றி­னாலும் நடனக் கலை­ஞர்­களைப் பொறுத்­த­வரை போட்­டிக்­கு­ரிய இந் ­ந­ட­னங்­க­ளுக்கு நடு­வர்­களால் புள்­ளிகள் வழங்­கப்­பட்டு பரி­சுகள் வழங்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

 

இதனால் ஆட்­டத்­திலும் கவர்ச்­சி­யிலும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக தூள் ­ப­றக்கச் செய்­கின்­றனர் நடனக் கலை­ஞர்கள்.

 

இவ் ­வ­ருட ஒலிம்பிக் விளை­யாட்டு பிரே­ஸிலில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் கால்­பந்­தாட்டத் தொனிப்­பொ­ரு­ளிலும் நடனங்கள் நடை­பெற்­றன. 

 

 

ஸிகா வைரஸ் பிரேஸில் உட்­பட தென் அமெ­ரிக்க நாடு­களில் வேக­மாக பர­வு­வ­தாக அறி­விக்­கப்­பட்­ட­ போ­திலும், கர்ப்­பி­ணிகள் உட்­பட மில்­லியன் கணக்­கான மக்கள் இவ் ­வி­ழாவை காண்­ப­தற்கு திரண்டிருந்தனர்.  

 

ஸிகா விழிப்புணர்வு பிரசாரங்களும் இவ் விழாவின் போது மேற்கொள்ளப்பட்டன.

 

மற்றும் ஒருவர் உடல் முழுவதையும் மூடும் வகையிலான நுளம்பு வலைக்குள் இருந்தவாறு இவ் விழாவில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.