Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்­கைக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்து
2016-02-29 10:20:55

அண்­மையில் ஈரான் மீதான சர்­வ­தேச வர்த்­தகத் தடைகள் நீக்­கப்­பட்­டதன் பின்பு, இலங்­கைக்கும் ஈரா­னுக்­கு­மி­டையில் முதன் முறை­யாக இரு­த­ரப்பு பரஸ்­பர வர்த்­த­கத்­தினை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

 

அதனை தொடர்ந்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தமும் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் கடந்த புதன் கிழமை நடை­பெற்ற பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­பிற்­கான ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்­கு­ழுவின் 11ஆவது அமர்வின் போதே இந்த இரு­த­ரப்பு பரஸ்­பர வர்த்­த­கத்­தினை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

 

மறுநாள் வியா­ழக்­கி­ழமை கூட்டு ஆணைக்­கு­ழுவின் 11 ஆவது அமர்வின் தீர்­மா­னங்­களை உள்­ள­டக்­கிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.    

 

ஈரா­னிய குடி­ய­ரசின் சக்தி வள அமைச்சர்  ஹமிட் சிட்­சியன் மற்றும்  கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இந்த  புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தினை கையெ­ழுத்­திட்­டனர்.  

 

இந்த அமர்வில் இரு­நா­டு­க­ளுக்­கி­டை­யி­லான வர்த்­த­கத்தை மேலும் விஸ்­த­ரிப்­பது குறித்தும் புரிந்­து­ணர்வு, சிறந்த பொரு­ளா­தார ரீதி­யி­லான உற­வு­களை நீடிப்­ப­தற்­கான வழி­மு­றைகள் மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான தேவைப்­பா­டுகள்,  ஏற்­று­மதி, இறக்­கு­மதி மற்றும் முத­லீடு உட்­பட இதர   தேவைப்­பா­டுகள் ஆரா­ய­ப்பட்­டது.

 

இரு நாடு­க­ளாலும் 2004  ஆம் ஆண்டில் கைச்­சாத்­திட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை மீளாயப்­ப­டு­வ­துடன் அதன் சலு­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது குறித்து இலங்­கையும் ஈரானும் இணங்கிக் கொண்­டனர்.

 

 ஒரு நாள் கொண்ட இவ்­வ­மர்வு  கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், ஈரா­னிய குடி­ய­ரசின் சக்தி வள அமைச்சர்  ஹமிட் சிட்­சியன் மற்றும் இலங்­கைக்­கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி ஆகி­யோரால் தலைமை தாங்­கப்­பட்­ட­துடன் இரு தரப்­பிலும் இருந்து உத்­தி­யோக பூர்வ அதி­காரம் அரச அதி­கா­ரிகள் உட்­பட 100 க்கும் அதி­க­மான பிர­தி­நி­திகள் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டனர்.

 

'பொரு­ளா­தார சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யிலும் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பொரு­ளா­தார ரீதி­யி­லான உற­வுகள் நீடித்து வரு­கின்­றது.

 

இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பல்­வேறு பொருட்கள் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

 

எவ்­வா­றா­யினும், வர்த்­தக நட­வ­டிக்­கை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான தேவைப்­பா­டுகள் இரு தரப்­பி­ன­ருக்கும் காணப்­ப­டு­கின்­றது.

 

2014ஆம் ஆண்டு நாட்டின் மொத்த வர்த்தகப் புரழ்வு 188 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது அது 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 114 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது என கூட்டு  ஆணைக்குழுவின் 11 ஆவது அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.