Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பெண் சார­தி­க­ளுக்கு கை­கொ­டுக்கும் PickMe நிறு­வனம்
2016-02-29 10:16:03

ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சிகள் மூலம் டெக்ஸி கோரும் சேவையை  இலங்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய PickMe நிறு­வனம் தனது மற்­று­மொரு முயற்­சி­யாக பெண் சார­தி­க­ளுக்கும் கைகொ­டுக்க தீர்­மா­னித்­துள்­ளது.

 

பெண்­களின் பொரு­ளா­தாரம், வாழ்­வா­தாரம் ஆகி­ய­வற்றை கருத்­திற்­கொண்டு PickMe நிறு­வனம் பெண் சார­தி­களை தனது வலைப்­பின்­னலில் இணைத்­துக்­கொள்ள தீர்­மா­னித்­துள்­ள­துடன் தற்­போது சுமார் 12 தொடக்கம் 15 வரை­யான பெண் சார­திகள் சேவை­யாற்றி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

 

PickMe நிறு­வ­னத்தின் இப்­புது முயற்­சியை பற்றி  கருத்து தெரி­வித்த ரத்­ம­லான அத்­தி­டிய பிர­தே­சத்தில் வாழும் 33 வய­து­டைய லஸந்தா தீப்தி கூரு­கையில்  “PickMe நிறு­வ­னத்­துடன் இணைந்­ததன் மூலம் எனது வாழ்க்­கையில் சம­நி­லையை பேண முடி­கி­றது. அத்­துடன் எனது வீட்டு வேலை­க­ளையும் பிள்­ளையின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளையும் செய்து முடித்து எஞ்­சி­யி­ருக்கும் நேரங்­களில் PickMe மூலம் வழங்­கப்­படும் பய­ணங்­களை மேற்­கொள்­வதன் மூலம் எனது பொரு­ளா­தார தேவை­க­ளையும் பூர்த்­தி­செய்­துக்­கொள்ள முடி­கின்­றது” எனத் தெரி­வித்தார்.

 

அவர் மேலும் கூறு­கையில் “இந்த தொழிலின் சுவா­ர­ஸ்­ய­மான விடயம் என்­ன­வென்றால், எனக்கு கட்­டா­ய­மாக ஒரே தட­வையில் 8 மணித்­தி­யா­லங்கள்  வேலை செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் இல்லை.

 

மாறாக, எனக்கு கிடைக்கும் இல­வச நேரங்­களில் பய­ணங்­களை மேற்­கொள்­வதன் மூலம் எனது  குடும்ப வாழ்க்­கைக்கோ அல்­லது ஏனைய வீட்டு வேலை­க­ளுக்கோ எந்­த­வித இடை­யூறும் இன்றி எளி­தாக முகா­மைத்­து­வ­ப்ப­டுத்­திக்­கொண்டு இந்த தொழிலை மேற்­கொள்­ள­ மு­டியும்” என்றார்.

 

“இன்­றைய  நவீன நூற்­றாண்டில் பெண்­களின் பாது­காப்பு ஒரு கேள்­வி­கு­றி­யாக உள்ள நிலையில் PickMe மூலம் வழங்­கப்­படும் தற்­பா­து­காப்பு முறைசார் விதிகள் சார­தி­க­ளுக்கு  மற்­று­மல்­லாமல் பய­ணி­க­ளுக்கும் ஒரு பெரும் நம்­பிக்­கையை தந்­துள்­ளது.

 

பய­ணிகள் மூலம் கோரப்­படும் அனைத்து வேண்­டு­கோள்­களும் நிறு­வனம் மூலம்  கணி­னி­களில் பதி­யப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளு­டைய போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கை­க­ளையும் GPS மூலம் அவ­தா­னிக்­கவும் முடியும்.  

 

எனவே, இது  பய­ணிகள் தனி­யாக பய­ணிக்­க­க்கூ­டிய தன்­னம்­பிக்­கையை ஒரு­படி உயர்த்­தி­யுள்­ள­துடன் ஏதா­வது அவ­ச­ர­நே­ரத்தின் போது எமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் Emergency பொத்­தானை அழுத்­து­வதன் மூலம் அரு­கி­லுள்ள காவல் நிலை­யத்தை தொடர்­பு­கொள்ள முடி­யும்” எனவும் தீப்தி கூறினார் என்றார். 

 

நிறு­வனம் மூலம் வழங்­கப்­பட்­டி­ருக்கும் சாரதி புள்ளி முறையைப் பற்றி தீப்தி கூறு­கையில்,   இப்­புள்ளி முறையின் ஊடாக பய­ணி­க­ளுக்கு சார­தி­களை மதிப்­பீடு செய்­ய­மு­டி­வ­துடன் இதன் மூலம் சார­தி­களின் இங்­கிதம், கட்­டுப்­பாடு, பொறுமை போன்­ற­வற்றை நிறு­வ­னத்­திற்கும் விளக்­க­மான முறையில் குறிப்­பி­டவும் முடியும். எனவே இம்­முறை நிறு­வ­னத்­துக்கு சார­தி­களை மதிப்­பீடு செய்­வ­தற்கு உத­வு­வ­தோடு சார­தி­களை பற்­றிய தெளி­வையும் பய­ணி­க­ளுக்கு வழங்கும் எனத் தெரிவித்தார்.

 

PickMe நிறுவனம் தற்போது tuk, Mini Cab  மற்றும் Car ஆகியவற்றை குறைந்த, நடுத்தர, மேல்தர பிரிவுகளில் வழங்குவதோடு எதிர்காலத்தில் இச்சேவைகளை மேலும் அதி உயர் தரத்திற்கு உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிப்ரி ஸுல்பர் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.