Saturday  22 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
விலங்கு நல்வாழ்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் விலங்­கு­களின் பாது­காப்பு தொடர்பில் இலங்­கை­யினால் மேற்­கொள்­ளப்­படும் தனிச்­சி­றப்­புக்­கு­ரிய முதல் நட­வ­டிக்கை என Otara Foundation பாராட்டு
2016-02-28 11:51:50

விலங்கு நல்­வாழ்வு வரைபுச் சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதை ஒட்­டாரா பவுண்­டேஷன் அமைப்பு வர­வேற்­றுள்­ள­துடன், சரி­யான திசையில் எடுக்­கப்­பட்­டி­ருக்கும் மேற்­படி நட­வ­டிக்­கை­யா­னது சட்­ட­மாக்­கப்­ப­டு­வ­தற்­கான ஆத­ரவை தான் வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. 

 

இது தொடர்­பாக அவ்­வ­மைப்பு விடுத்த அறிக்­கையில், “இச்­ சட்­ட­மூலம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­மைக்­காக ஜனா­தி­பதி, பிர­தமர், கிரா­மிய பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் ஆகி­யோ­ருக்கு அவர்கள் சட்­ட­மூ­லத்­தினை ஆத­ரிப்­பதில் வெளிப்­ப­டுத்­திய அர­சியல் விருப்­புக்­கா­கவும் மற்றும் விலங்கு நல­வாழ்வு சட்­ட­மூ­லத்­தினை இன்­றைய நிலைக்கு கொண்டு வரு­வ­தற்கு தமது ஒத்­து­ழைப்­பி­னையும் கவ­னிப்­பி­னையும் நல்­கிய அரச அதி­கா­ரி­க­ளுக்கும் நிறு­வனம் நன்­றியை தெரி­வித்துக் கொள்­கி­றது.

 

சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­திலும் விரைந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­திலும் இவர்­களின் ஒத்­து­ழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் நம்­பு­கிறோம்" அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

 

மேற்­படி சட்­ட­மூ­லத்­தினை தயா­ரித்து 2006 இல் அர­சாங்­கத்­திடம் பதிந்­து­ரை­களை செய்­தி­ருந்த இலங்கை சட்ட ஆணைக்­கு­ழு­விற்கும் இந் ­நி­று­வனம் பாராட்­டு­களை தெரி­வித்துக் கொள்­கி­றது.

 

இம்­ மாற்­றத்­திற்­கான முன்­னெ­டுப்­பினை ஒரு தனி­நபர் சட்­ட­மூ­ல­மாக 2010 இல் நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்த வண. அத்­து­ர­லியே ரத்­தின தேரர் உள்­ளிட்ட தமது நிலைத்து ஆத­ர­வினை வழங்­கி­ய­வர்­க­ளுக்கும் நிறு­வனம் தனது நன்றி தெரி­வித்­துள்­ளது.

 

அத்­துடன் 1012 தொடக்கம் இச் ­சட்­ட­மூ­லத்­திற்­கென இடை­வி­டாது ஆத­ரவு தேடிய விலங்­கு­நல சட்ட ஆவண மனு­தா­ரர்­க­ளுக்கும் அதே­வேளை சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­காக விண்­ணப்­பங்­களில் எப்­ப­மிட்ட 28000 பேர்­க­ளுக்கும் Otara  நிறு­வனம் பாராட்­டு­களை தெரி­வித்துக் கொள்­கி­றது.

 

இது­வரை கிடைத்­துள்ள வெற்­றி­க­ளுக்­கெல்லாம் அடிப்­ப­டை­யாக விளங்­கி­யது அங்­கீ­கா­ரத்தை நோக்­கிய அவர்­க­ளது அர்ப்­ப­ணிப்பும் கடப்­பாட்­டு­ணர்­வுமே என்று நிறு­வனம் மேலும் தெரி­விக்­கி­றது.

 

Aminal Nepal, PETA Asia, Fondation Brigitte Bardot ஆகிய சர்­வ­தேச நிறு­வ­னங்கள் வழங்­கிய ஒத்­து­ழைப்­புகள் பற்­றியும் நிறு­வனம் குறித்­து­ரைக்க விரும்­பு­கி­றது. சட்­ட­வாக்க வரைபு நிறை­வேற்­றப்­பட்டு சட்­ட­மாகும் வரையில் நீண்­ட­செ­யன்­மு­றைகள் காத்­தி­ருக்­கின்­றன.

 

மேற்­படி சட்ட மூலத்தின் முன்­னேற்­றத்தில் பங்­கு­கொண்டு எமது முயற்­சி­களில் பங்காளிகளாக  செயற்பட்டு நிற்க முன்வருமாறு கருணையுணர்வு மிக்க குடிமக்களை நாம் வேண்டிநிற்கிறறோம்" என்று நிறுவனம் ஒரு அறிக்கை மூலம் கோரியுள்ளது. கடந்து செல்லவேண்டிய பல்வேறு முக்கிய கட்டங்களில் சட்டமூலம் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக தாண்டியுள்ளது.

 

அமுலாக்கம் வரையில் மேலும் நீண்ட தூரம்  செல்ல வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.