Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொது - தனியார் கைகோர்ப்பின் 10 வருட வெற்­றியை கொண்­டாடும் Deutsche Post DHL குழுமம் மற்றும் ஐ.நா.
2016-02-28 11:47:24

உலகின் முன்­னணி சரக்­கியல் நிறு­வ­ன­மான Deutsche Post DHL குழுமம் மற்றும் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபை அலு­வ­லகம் (UNOCHA) மற்றும் ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தி திட்­டங்கள் (UNDP) ஆகி­ய­வற்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஐக்­கிய நாடுகள்  ஆகி­யன இணைந்து அனர்த்த தயார்­ப­டுத்தல் இடங்­களில் முன்­னெ­டுத்த முயற்­சி­களின் ஒரு தசாப்த கால வெற்­றியை அண்­மையில் கொண்­டா­டி­யது. 

 

 

இந்த பங்­காண்­மை­யா­னது, விமான நிலை­யங்கள் மற்றும் தனி­ந­பர்­களை அனர்த்­தங்­களில் போது தயார் நிலையில் வைத்­தி­ருக்­கவும், பேரிடர் ஏற்­பட்ட பகு­தி­க­ளி­லுள்ள விமான நிலை­யங்­களில் சரக்­கி­யல்­களை சிறப்­பாக மேலாண்மை செய்­வ­தையும் குறிக்­கோ­ளாக கொண்­டுள்­ளது.

 

இதற்­கான முத­லா­வது புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியுயோர்க் நகரில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

“ஐ.நாவு­ட­னான கூட்டு முயற்­சிகள் பத்து வரு­டத்தை கொண்­டா­டு­வ­தை­யிட்டு நான் மிகவும் பெரு­மை­ய­டை­கிறேன். அனர்த்த தயார்­நிலை மற்றும் அனர்த்த நிவா­ர­ணங்­களின் போது எம் முயற்­சி­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்­கி­ய­வர்­க­ளுக்கு இந்த தரு­ணத்தில் நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறேன்.

 

எமது தனிச்­சி­றப்­பு­மிக்க பொது - தனியார் முயற்­சி­யா­னது அத்­தி­யா­வ­சி­ய­மாக உத­விகள் தேவைப்­ப­டு­வோ­ருக்கு விமான நிலை­யங்­களில் ஆத­ரவை வழங்கும் நேர்­ம­றை­யான கூட்டு முயற்­சி­யாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது.

 

UNOCHA மற்றும் UNDP போன்ற உலக அங்­கீ­காரம் பெற்ற பங்­கா­ளர்­களின் ஒத்­து­ழைப்­புடன் சர்­வ­தேச உத­விகள் சமூ­கத்­திற்கு எமது சரக்­கியல் நிபு­ணத்­து­வத்தை பகிர்ந்து கொண்­டமை குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

 

எதிர்­வரும் ஆண்­டு­க­ளிலும் இத்­த­கைய நேர்­ம­றை­யான அனு­ப­வத்தை விரி­வு­ப­டுத்த நான் எதிர்­பார்த்­துள்ளேன்” என Deutsche Post DHL குழு­மத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஃபிராங் எப்பல் தெரி­வித்தார். 

 

GARD நிகழ்ச்சித் திட்டம் இன்று வரை இலங்கை, அர்­மே­னியா, பங்­க­ளாதேஷ், டொமி­னிகன் ரிபப்ளிக், எல் சல்­வாடோர், இந்­தியா, இந்­தோ­னே­ஷியா, ஜோர்தான், லெபனான், மெக்­க­டோ­னியா, நேபாளம், பனாமா, பெரு, பிலிப்பைன்ஸ் மற்றும் துருக்கி உள்­ள­டங்­கிய 15 நாடு­களில் 30 உள்­நாட்டு விமான நிலை­யங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த GARD திட்­ட­மா­னது அசல் பரிந்­து­ரைகள் மற்றும் அவர்­க­ளது நடை­முறை செயல்­பா­டுகள் குறித்து மதிப்­பாய்வு செய்ய பின்­தொடர் பயிற்சி பட்­ட­றை­க­ளையும் வழங்கி வரு­கி­றது.

 

ஆர்­மே­னியா, லெபனான் மற்றும் இந்­தோ­னே­ஷியா போன்ற நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன், 2016 ஆம் ஆண்டில் GARD மற்றும் GARD Plus பயிற்சி பட்­டறை தொடர்கள் ஹொண்­டூராஸ், மொரி­சீயஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

 

‘அனர்த்த அபா­யங்கள் குறித்து நாம் சுட்­டிக்­காட்­டா­விட்டால் வறுமை ஒழிப்பு மற்றும் நிலை­பே­றான அபி­வி­ருத்தி இலக்கு போன்­ற­வற்றை அடை­வது சாத்­தி­ய­மற்­றது என்­பது தெளி­வா­கி­றது.

 

இதற்கு பொது - ­த­னியார் துறையினருடன் இணைந்த சமூக அணுகல் தேவைப்படுகிறது. UNDP, Deutsche Post DHL மற்றும் OCHA ஆகியவற்றுக்கிடையேயான பங்காண்மை அத்தகைய அணுகல் முறைகளில் ஒன்றாகும்’ என UNDPபணியகத்தின் கொள்கை மற்றும் திட்ட ஆதரவு பிரிவின் உதவி செயலாளர் நாயகமும், பணிப்பாளருமான மங்டி மார்டினஸ் சொலிமன் தெரிவித்தார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.