Saturday  22 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
வீசா இன்­டர்­நெ­ஷனல், மாஸ்டர் கார்ட் மற்றும் அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் குளோபல் நிறு­வ­னங்கள் எபிக் லங்கா நிறு­வ­னத்தை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விற்­ப­னை­யா­ள­ராக நிய­மிக்­கின்­றன
2016-02-25 15:20:57

வீசா இன்­டர்­நெ­ஷனல் (Visa International), மாஸ்டர் கார்ட் (Master Card) மற்றும் அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் குளோபல் (American Express Global) ஆகி­ய­வற்றின் ஒன்­றி­யங்கள் - எபிக் லங்கா பிரைவேட் லிமிட்டெட்  நிறு­வ­னத்தின் ‘அணுகல் கட்­டுப்­பாட்டு சேமிப்­பக தீர்வு’ (Access Control Server Solution) சேவையை சான்­று­ப­டுத்தி அதனை தேர்ந்­தெ­டுத்­துள்­ளமை தொடர்பில் எபிக் லங்கா பிரைவேட் லிமிட்டெட் அறி­வித்­துள்­ளது. 

 

சம்பத் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்த பெர்னாண்டோவிடம்  எபிக் லங்கா நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான டாக்டர் நயன தெஹிகம நினைவுச்சின்னமொன்றை வழங்குகிறார்.

 

உலக தரம்­வாய்ந்த இந்த உற்­பத்­தி­யா­னது, பாது­காப்­பான கொடுப்­ப­னவு செயன்­மு­றைக்­காக மேற்­படி முன்­னணி கார்ட் ஒன்­றி­யங்­களால் தற்­போது சான்­ற­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

 

இணை­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­யங்கும் கொடுப்­ப­னவு பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான முப்­ப­ரி­மாண (3D) பாது­காப்பு முறை­மை­யுடன் ஒத்­தி­சைந்து செயற்­படும் இது, உல­கெங்­கு­முள்ள முன்­னணி சர்­வ­தேச வங்­கிகள், நிதி நிறு­வ­னங்­களின் விருப்­பத்­திற்­கு­ரிய ஒரு உற்­பத்­தி­யாக காணப்­ப­டு­கின்­றது. 

 

உல­கெங்கும் உள்ள மதிப்­பு­மிக்க விற்­ப­னை­யா­ளர்கள் சமூ­கத்­துடன் இணைந்து கொள்ளும் எபிக் லங்கா பிரைவேட் லிமிட்டெட் நிறு­வ­ன­மா­னது - விசா இன்­டர்­நெ­ஷனல், மாஸ்டர் கார்ட் மற்றும் அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் குளோபல் வலை­ய­மைப்­புக்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் பாது­காப்­பான கொடுப்­ப­னவு செயன்­முறை உற்­பத்­தி­களை வழங்­கு­வ­தற்­காக தனது ‘அணுகல் கட்­டுப்­பாட்டு சேமிப்­பக தீர்வு’ சேவையை விநி­யோகம் செய்­வ­தற்கு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விற்­ப­னை­யா­ள­ராக சான்­ற­ளிக்­கப்­பட்ட இலங்­கையின் முத­லா­வதும் ஒரே­யொன்­று­மான கம்­பனி என்ற சாத­னையை நிலை­நாட்­டி­யுள்­ளது. 

 

இந்த தொடர்பில் எபிக் லங்கா நிறு­வ­னத்தின் தலை­வரும் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ரு­மான டாக்டர் நயன தெஹி­கம கூறு­கையில், “இந்த சாதனை குறித்து நாம் பெரு­மிதம் அடை­கின்றோம் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.

 

எமது சேவையின் தரம் மற்றும் சிறப்­புத்­து­வத்தை ஏற்­றுக்­கொண்டு ஒப்­புதல் அளிப்­ப­தாக இது அமை­வது மட்­டு­மன்றி, ஒரு இலங்கைக் கம்­பனி சர்­வ­தேச வர்த்­தக அரங்கில் எதை அடைந்து கொள்ள முடியும் என்­ப­தையும் எடுத்துக் காட்­டு­வ­தாக அமை­கின்­றது.

 

இந்த அந்­தஸ்தை அடைந்து கொள்­வ­தற்­காக தனிப்­பட்ட ரீதியில் ஈடு­பாடு மற்றும் அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்­திய எனது ஒட்­டு­மொத்த ஆள­ணி­யி­ன­ருக்கும் பாராட்­டு­தல்கள் உரித்­தாகும்” என்றார். 

 

1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட எபிக் டெக்­னோ­லஜி குழுமம் ஆனது, இலங்­கை­யிலும் இப் பிராந்­தி­யத்­திலும் உள்ள கூட்­டாண்மை நிறு­வ­னங்­க­ளுக்கு இ-பா­து­காப்பு (E-Security) மற்றும் -கொ­டுப்­ப­னவு (E-Payment) தீர்­வு­களை சர்­வ­தேச தரா­த­ரத்­துடன் வழங்­கு­வதில் தொழில்­நுட்ப துறையில் முன்­ன­ணியில் திகழும் ஒரு நிறு­வ­ன­மாகும். 

 

ஸ்மார்ட் கார்ட்டை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இலங்­கையின் மிகப் பெரி­யதும் ஒரே­யொன்­று­மான இரு நிதி­யியல் தீர்­வு­களை வழங்கும் நிறு­வனம் என்ற சாத­னையை எபிக் டெக்­னோ­லஜி குழுமம் நிலை­நாட்­டு­கின்­றது.

 

அது­மட்­டு­மன்றி இது, 50,000 இற்கும் மேற்பட்ட EDC/POS  டேர்மினல் தொகுதிகளை ஒன்பது முன்னணி வங்கிகளுக்கு விற்பனை செய்து, நாடெங்கும் நிறுவியுள்ளது. 
 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.