Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொருளாதார ஒத்துழைப்புக்கான ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 11ஆவது அமர்வு இன்று நடைபெறுகிறது!
2016-02-24 13:00:21

பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்­கான ஈரான் - இலங்கை கூட்டு ஆணைக்­ கு­ழுவின் 11ஆவது அமர்வு இன்று புதன்­கி­ழமை காலை கொழும்பு சின­மன்­கிரான்ட் ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

 

இந்த ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­க­ளுக்­காக இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வந்த ஈரா­னிய குடி­ய­ரசின் வர்த்­தக அமைச்சர் ஹமிட் சிட்­சியன், இலங்­கைக்­கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி உட்­பட ஈரா­னிய உயர்­மட்ட வர்த்­தக பிர­மு­கர்கள் நேற்று முன்­தினம் (22) திங்­கட்­கி­ழமை மாலை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமா­ன ­நி­லை­யத்தில் வந்­தி­றங்­கினர்.

 

இவர்­களை விமா­ன­ நி­லை­யத்தில் வைத்து கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் உத்­தி­யோகபூர்வமாக வர­வேற்றார். 

 

இந்த ஆணைக்­கு­ழுவின் அமர்­வுக்கு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், ஈரா­னிய குடி­ய­ரசின் வர்த்­தக அமைச்சர் ஹமிட் சிட்­சியன் மற்றும் இலங்­கைக்­கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷெயிரி மீரானி ஆகியோர் தலைமை தாங்­குவர்.

 

ஈரான் மீதான சர்­வ­தேச வர்த்­தகத் தடைகள் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொரு­ளா­தார சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யிலும் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு, சிறந்த பொரு­ளா­தார ரீதி­யி­லான உற­வு­களை நீடிப்­ப­தற்­கான வழி­மு­றைகள் மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான தேவைப்­பா­டுகள், ஏற்­று­மதி, இறக்­கு­மதி மற்றும் முதலீடு உட்பட இதர தேவைப்பாடுகள் இக் கூட்டு ஆணைக் குழுவின் அமர்வின் போது ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.