Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கொமர்ஷல் வங்­கியின் ‘Anagi’ மற்றும் ‘Udara’ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆசிரி வைத்­தி­ய­சாலை குழுமம் வழங்கும் ஆரோக்­கிய சலுகைப் பொதிகள்
2016-02-24 12:55:59

கொமர்ஷல் வங்கி ஆசிரி வைத்­தி­ய­சா­லைகள் குழு­மத்­துடன் இணைந்து தனது வாடிக்­கை­யா­ள­ரான சிரேஷ்ட பிர­ஜைகள் மற்றும் பெண்­க­ளுக்­கென தெரிவு செய்­யப்­பட்ட நோய் கண்­ட­றியும் சேவை­க­ளுக்கு சலுகைப் பொதி­களை வழங்க முன்­வந்­துள்­ளது.

 

 

மேற்­படி இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே ஒப்­ப­மி­டப்­பட்­டுள்ள ஒரு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் பிர­காரம் பெண்­க­ளுக்­கான அனகி சேமிப்பு கணக்கு வைத்­தி­ருப்­போ­ருக்கும், உதார சேமிப்பு  நிலை­யான பண­வைப்பு கணக்­கு­களை பேணும் சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்கும் ஆசிரி வைத்­தி­ய­சா­லையின் நலன்­புரி நிலை­யங்கள் நான்­கிலும் சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

 

இச்­ சி­றப்புக் கழிவு சலு­கை­யா­னது 2016 டிசம்பர் 31ஆம் திகதி வரை கொழும்பு - 05, கிரி­மண்­டல மாவத்தை, ஆசிரி வைத்­தி­ய­சா­லை­யிலும், கொழும்பு - 10இல் உள்ள பிர­தான வைத்­தி­ய­சா­லை­யிலும், மாத்­த­றை­யி­லுள்ள இரு ஆசிரி வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் சிகிச்சைப் பெறும் உரித்­தா­ளி­க­ளுக்கு உரி­ய­தாகும்.

 

மேற்­படி சிறப்­புக்­ க­ழி­வா­னது, 40 வய­துக்கு உட்­பட்ட மற்றும் மேற்­பட்ட அனகி சேமிப்பு கணக்கை பேணி­வரும் வாடிக்­கை­யா­ளர்கள் தமது புற்­றுநோய் மருத்­துவ பரி­சோ­த­னைகள் விட­யத்­திலும் வழங்­கப்­படும்.

 

உதார கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்கள் பெண்கள் உடல்­நலப் பரி­சோ­தனை, ஆண்கள் உடல்­நலப் பரி­சோ­தனை, புற்­று­நோய்­கு­றிகாண் பரி­சோ­தனை, இரு­த­ய நோய் பரி­சோ­தனை, நீரி­ழிவு நோய் பரி­சோ­தனை என்­பன அடங்­கு­கின்­றன.

 

ஒரு அனகி டெபிட் அட்­டையை கொடுப்­ப­ன­வுக்­கென பயன்­ப­டுத்தும் போது அல்­லது ஒரு கரு­ம­பீ­டத்தில் சமர்ப்­பிக்கும் போது அல்­லது ஒரு உதார சிரேஷ்ட பிர­ஜைகள் அட்­டையை வைத்­தி­ய­சா­லையில் சமர்ப்­பிக்கும் போது கழிவு சலு­கையை ஒருவர் பெற­மு­டியும். 

 

ஆசிரி வைத்­தி­ய­சா­லைகள் நிறு­வன பிர­தம அதி­காரி டாக்டர் மஞ்­சுளா கரு­ணா­ரத்ன இது பற்றி கூறு­கையில், வாடிக்­கை­யா­ளர்­களின் நலன்­களை மேம்­ப­டுத்­து­வதில் கொமர்ஷல் வங்கி முன்­னெ­டுக்கும் இத்­ திட்டம் பாராட்­டப்­பட வேண்­டி­யது.

 

மிகப்­பெ­ரிய சுகா­தார சேவை­களை வழங்கும் தனியார் நிறு­வ­ன­மான ஆசிரி ஹொஸ்­பிட்டல், மிகப்­பெரும் தனியார் வங்­கி­யான கொமர்ஷல் வங்­கி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது பொருத்­த­மா­ன­தாகும் எனத் தெரி­வித்தார்.

 

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­திடும் நிகழ்வு கொமர்ஷல் வங்­கியின் பிர­தம செயற்­பாட்டு அதி­காரி – நிறை­வேற்று அதி­காரி எஸ்.ரெங்­க­நாதன், வங்­கியின் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ஹஸ்ரத் முனசிங்க, ஆசிரி வைத்தியசாலைகள் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் மஞ்சுள கருணாரத்ன மற்றும் ஆசிரி வைத்தியசாலையின் சந்தைப்படுத்தல் தலைவர் தசரத் ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.