Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்­கையில் 250 ஆவது கிளையைத் திறந்­துள்ள கொமர்ஷல் வங்கி
2016-02-24 11:37:29

இலங்கை மக்­க­ளுக்­கான வர­லாற்றுப் புகழ் மிக்க தனது சேவையின் இன்­னொரு மைல்­கல்லை கொமர்ஷல் வங்கி எட்­டி­யுள்­ளது. இலங்­கையில் அதன் 250 ஆவது கிளை அண்­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது.

 

 

கொழும்பு - 9 டொக்டர் டெனிஸ்டர் டி சில்வா மாவத்­தையில் உள்ள ஒரியன் சிற்றி கட்­டிடத் தொகு­தியில் இந்தக் கிளை திறந்து வைக்­கப்­பட்­டது. வாடிக்­கை­யாளர் வச­தி­க­ளையும் சேவை­க­ளையும் மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அதி நவீன தொழில்­நுட்­பங்­களைப் பெற்றுக் கொள்­ளுதல் மற்றும் சுற்­றா­ட­லுக்கு இசை­வான வங்கித் திட்­டத்தை ஊக்­கு­வித்தல் ஆகிய எண்­ணக்­க­ருக்­களின் கீழ் இந்தக் கிளை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 

 

இப்­பு­திய கிளையை வங்­கியின் தலைவர் தர்மா தீர­ரத்ன சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாகத் திறந்து வைத்தார். கொழும்பு-07 வார்ட் பிளேஸில் வங்கி ஏற்­க­னவே நிறு­வி­யுள்ள தன்­னி­யக்க வங்கிச் சேவை மாதி­ரியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்தப் புதிய கிளை ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

 

 

நேரடி பண வைப்­புக்கள், வங்கிக் கணக்கு திறப்­ப­தற்­கான மற்றும் கடன் பெறு­வ­தற்­கான வேண்­டுகோள் அனுப்பல், காசோலை வைப்­பீடு, இணைய வங்கி சேவை­க­ளுக்­கான வச­திகள், நிதி பரி­மாற்­றங்கள், பணம் மீளப் பெறல், பட்­டியல் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் கிளைகள் தொடர்­பான அறி­முக சேவை, வட்டி வீதம் தொடர்­பான அறி­வு­றுத்­தல்கள் என நாள் முழு­வதும் பல சேவை­களை இங்கு பெற முடியும்.

 

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குத் தேவை­யான ஏனைய வச­தி­களை வழங்க இரண்டு ஊழி­யர்­களும் இங்கு நிலை கொண்­டி­ருப்பர்.

 

“47 வரு­டங்­க­ளுக்கு முன் கொமர்ஷல் வங்கி அதன் முத­லா­வது கிளையை கலே­வலையில் நிறு­வி­யது. அன்று முதல் நினைத்துப் பார்க்க கூட முடி­யாத அள­வுக்கு அது வளர்ச்சி கண்­டுள்­ளது” என்று கூறினார்.

 

அதன் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஜெகன் துரை­ரட்ணம். “வர்த்­தக வளர்ச்­சிக்குத் தேவை­யான உயர் சிந்­த­னைகள், செயற்­பா­டுகள், தொழில்­நுட்­பங்கள் மற்றும் வாடிக்­கை­யாளர் தேவைகள் என்­ப­ன­வற்றில் நாம் மிக உறு­தி­யான அர்ப்­ப­ணத்தை தொடர்ச்­சி­யாகக் கொண்­டி­ருக்கும் அதே­வேளை வங்கி முறை­யையும் முற்­றாக மாற்றி அமைத்­துள்ளோம்.

 

மேலும் எமது சேவைகளை மக்களுக்கு வழங்கும் விடயத்தில் நாம் வாழும்  இந்தக் கிரகமானது தொடர்ச்சியான மாற்றங்களை வேண்டி நிற்கின்றது” என்று அவர் மேலும் கூறினார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.