Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
SLAHAB தேசிய விருதுகள் விழா 2016 இல் பங்காளராக இணையும் ‘Dermacolor’ மற்றும் ‘Basicare’
2016-02-23 14:47:53

இலங்­கையின் சுகா­தாரம் மற்றும் அழ­கு­கலை பரா­ம­ரிப்பு துறையில் முன்­னோ­டி­யான My Chemist  குழு­மத்தின் விசேட சருமம் மற்றும் அழகு பரா­ம­ரிப்பு வர்த்­தக நாமங்­க­ளான  ‘Dermacolor’ மற்றும் ‘Basicare’ ஆகி­யன பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி காலை 9 மணிக்கு கல­தாரி ஹோட்­டலில் இடம்­பெ­ற­வுள்ள இலங்கை சிகை­ய­லங்­காரம் மற்றும் அழ­கு­க்கலை நிபு­ணர்கள் சங்­கத்தின் (SLAHAB) 19ஆவது வரு­டாந்த தேசிய விரு­துகள் வழங்கும் நிகழ்வில் இணை பங்­கா­ள­ராக இணைந்து கொண்­டுள்­ளன.

 

சிகை மற்றும் அழ­குக்­கலை நிபு­ணர்கள் தங்கள் திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான மிகப்­பெ­ரிய தேசிய போட்­டி­களுள் ஒன்­றான இந் நிகழ்வு சர்­வ­தேச மட்­டத்தில் தொழிற்றுறை மற்றும் தரங்­களை மேம்­ப­டுத்தும் நிகழ்­வாக அமைந்­துள்­ளது.

 

இந்த வருடம்  நாடு­மு­ழு­வ­து­மி­ருந்து 100 இற்கும் மேற்­பட்ட சிகை மற்றும் அழ­கு­க்கலை நிபு­ணர்கள் சர்­வ­தேச தரம் கொண்ட குழுக்கள் முன்­னி­லையில் தமது திற­மை­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

 

பதிவு செய்­யப்­படும் போட்­டி­யா­ளர்­க­ளுக்கு இத்­து­றையைச் சேர்ந்த புகழ்­பெற்ற சிகை மற்றும் அழ­குக்கலை நிபு­ணர்­க­ளினால் இல­வ­ச­மாக பயிற்­சிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. 

 

சர்­வ­தேச கட்­டுப்­பா­டு­க­ளுக்­குட்­பட்ட, இந்த போட்­டியில் பெண்கள் பேஷன் தின சிகை­ய­லங்­காரம், ஆண்கள் Progressive Cut மற்றும் Style, இரவு நேரத்­திற்­கேற்ற பெண்கள் சிகை­ய­லங்­காரம், பெண்­க­ளுக்­கான ஃபேண்­டஸி நக அலங்­காரம், தனி­நபர் பெண்கள் மண­மகள் சிகை­ய­லங்­காரம் மற்றும் தனி­நபர் பெண்கள் மண­மகள் முக ஒப்­பனை என 13 பிரி­வுகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

 

 

இந் நிகழ்வின் விரு­துகள் வழங்கும் வைபவம் அதே தினத்­தன்று மாலை 6 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. “உள்­நாட்டு சிகை மற்றும் அழ­கு­கலை நிபு­ணர்கள் தங்கள் படைப்­பாற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய மகத்­தான வாய்ப்­பாக இது­வுள்­ள­துடன், அவர்கள் சர்­வ­தேச மட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான மைல்­கல்­லா­கவும் உள்­ளது” என SLAHAB இன் ஸ்தாப­கரும், தலை­வ­ரு­மான நயனா கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

 

‘SLAHAB தேசிய விரு­துகள் 2016 இற்கு இணை அனு­ச­ரணை வழங்கி இலங்­கையின் அழகு மற்றும் சிகை பரா­ம­ரிப்பு துறையின் வளர்ச்­சிக்கு பங்­க­ளிப்பு வழங்­கு­வ­தை­யிட்டு My Chemist குழுமம் மகிழ்ச்­சி­ய­டை­கி­றது.

 

My Chemist குழு­மத்தின் இரு முன்­னணி வர்த்­த­க­நா­மங்­க­ளான ‘Basicare’ மற்றும் ‘Dermacolor’ ஆகி­யன எந்­த­வொரு பேஷன் விரும்­பி­க­ளுக்கும் பொருத்­த­மான புதுப்­பா­ணி­யான மற்றும் நவ­நா­க­ரீ­க­மான தோற்­றத்தை வழங்­கக்­கூ­டிய விசேட சரும மற்றும் அழகு பரா­ம­ரிப்பு உற்­பத்­தி­களை வழங்கி வரு­கி­றது” என My Chemist International இன் பணிப்­பாளர் சரத் ஜய­சே­கர தெரி­வித்தார்.

 

இந் நிகழ்வில் SLAHAB  இனால்  ‘Pride & Glory’ எனும் புதிய சஞ்­சிகை அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.