Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஐரோப்பிய ஒன்றியம், ILO மற்றும் UNOPS ஆகியன இணைந்து மனித வள திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியாவில் முன்னெடுப்பு
2016-02-23 13:43:42

யுத்தம் நடை­பெற்ற பகு­தி­களில் மனித வள திறன்­களை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­களின் மற்­று­மொரு அங்­க­மாக, மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­ திட்­டத்­துக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய உதவி (EU-SDDP) ஊடாக, ஐக்­கிய நாடுகள் திட்ட அமு­லாக்கல் நிறு­வனம் (UNOPS) மற்றும் சர்­வ­தேச தொழில் ஸ்தாபனம் (ILO) ஆகி­யன கைகோர்த்து, மன்னார், மட்­டக்­க­ளப்பு மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களில் திறமை வாய்ந்த தொழி­லா­ளர்­களை கட்­டு­மா­னத்­து­றையில் உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வண்­ண­முள்­ளன. 

 

NAITA வின் கருத்தரங்குக்கு நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் பங்குபற்றுகின்றனர்.


 

இந்த இலக்கை எய்­து­வ­தற்­காக தேசிய பயி­லுநர் மற்றும் கைத்­தொழிற் பயிற்சி அதி­கார சபை மற்றும் தொழில்­நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் கைகோர்த்து இந் ­நி­று­வ­னங்கள் செய­லாற்றி வரு­கின்­றன.

 

மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய உதவி (EU-SDDP)  ஊடாக இந்த அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு 60 மில்­லியன் யூரோக்கள் நிதி உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

 

ஐக்­கிய நாடுகள் திட்ட அமு­லாக்கல் நிறு­வ­னத்தின் அணியில் அடங்­கி­யுள்ள பொறி­யி­ய­லா­ளர்கள் மட்­டக்­க­ளப்பு, மன்னார் மற்றும் வவு­னியா மாவட்­டங்­களைச் சேர்ந்த இந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு தமது ஆளு­மை­களை விருத்தி செய்­வ­தற்­கான வாய்ப்­பு­களை தற்­போது வழங்­கி­ய­வண்­ண­முள்­ளனர்.

 

தச்சர்கள் மதிப்பீடுகளை பூர்த்தி செய்கின்றனர். 

 


 

பங்­கு­பற்­று­நர்கள் NAITA இனால் முன்­னெ­டுக்­கப்­படும் மதிப்­பீ­டு­களை சிறப்­பாக எதிர்­கொள்­வ­தற்கு குறித்த பொறி­யி­ய­லா­ளர்கள் உத­வி­களை வழங்கி வரு­கின்­றனர்.

 

இந்த மூன்று மாவட்­டங்­க­ளி­லி­ருந்து ஐக்­கிய நாடுகள் திட்ட அமு­லாக்கல் நிறு­வ­னத்தின் மூல­மாக மொத்­த­மாக 100 ஊழி­யர்­கள் நேர­டி­யா­கவும் ஒப்­பந்த நிறு­வ­னங்கள் ஊடா­கவும் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

இந்த 100 இனங்­கா­ணப்­பட்ட நபர்­களில், 45 பேர் மதிப்­பீட்­டுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் (வவு­னி­யா­வி­லி­ருந்து 20 பேர் மன்­னா­ரி­லி­ருந்து 25 பேர்). நிர்­மா­ணத்­து­றையில் பயிற்சி என்­ப­தற்கு மேல­தி­க­மாக, வவு­னியா ஐக்­கிய நாடுகள் திட்ட அமு­லாக்கல் நிறு­வனம் மற்றும் சர்­வ­தேச தொழில் ஸ்தாபனம் ஆகி­யன தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து நிதி மற்றும் குடும்ப நிதி முகாமைத்துவம் தொடர்பில் புனருத்தாரணம் பெற்று வரும் 50 முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இந்த செயற்பாடுகளுக்கு இலங்கை இராணுவம் உதவிகளை வழங்கியிருந்தது. NAITA வின் கருத்தரங்குக்கு நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் பங்குபற்றுகின்றனர். தச்சர்கள் மதிப்பீடுகளை பூர்த்தி செய்கின்றனர். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.