Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இதுவரை இரண்டாயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ள செலிங்கோ லைஃப்பின் பிரணாம புலமைப்பரிசில்
2016-02-21 11:52:32

செலிங்கோ லைஃப்பின் பிர­ணாம புல­மைப்­ப­ரிசில் திட்டம் இம்­மாதம் இன்­னொரு மைல்­கல்லைத் தொட்­டுள்­ளது. அதன் 15 ஆவது சுற்று புல­மைப்­ப­ரிசில் பரி­ச­ளிப்­புடன் இது­வரை இந்தத் திட்­டத்­தினால் நன்மை அடைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 2000 ஐ கடந்­துள்­ளது.

 

செலிங்கோ லைஃப் பணிப்­பா­ளரும் பிரதிப் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான துஷார ரண­சிங்­க­வி­ட­மி­ருந்து ஒருவர் தனக்­கான புல­மைப்­ப­ரி­சிலைப்
பெற்றுக் கொள்­வதைப் படத்தில் காணலாம்.


 

நாட்டின் சகல பாகங்­க­ளையும் சேர்ந்த சிரேஷ்ட கல்­வி­மான்கள், அதி­கா­ரிகள், பாட­சாலை அதி­பர்கள், மாண­வர்கள் என பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்ட இந்தப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றது.

 

மேலும் 154 பேருக்கு ரூபா 10 மில்­லி­ய­னை விட அதிக பெறு­ம­தி­யுள்ள புல­மைப்­ப­ரி­சி­லாகப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. செலிங்கோ காப்­பு­றுதி கொள்­கை­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­களின் பிள்­ளைகள் கல்வி ரீதி­யா­கவும் ஏனைய செயற்­பா­டு­க­ளிலும் அடைந்­துள்ள வெற்­றியை அங்­கீ­க­ரிக்கும் வகையில் இந்தப் புலமைப் பரி­சில்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில், க.பொ.த சாதா­ரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்­சை­களில் மாவட்ட ரீதி­யாக அடைந்து கொள்ளும் வெற்றி, விளை­யாட்டு, கலை, கலா­சாரம், நாடகம் மற்றும் புத்­தாக்க செயற்­பா­டு­களில் தேசிய மட்­டத்­தி­லான சாத­னைகள் என்­பன கௌர­விக்­கப்­பட்டு அதற்­கான வெகு­ம­திகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

இந்த வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்­திய பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக உப வேந்தர் பேரா­சி­ரியர் உபுல் திஸா­நா­யக்க மிகவும் விவே­க­மான மாண­வர்கள் தமது முழு ஆற்­ற­லையும் வெளிக் கொண்டு வர புல­மைப்­ப­ரி­சில்கள் எவ்­வாறு துணை புரி­கின்­றன என்­பதை விளக்­கினார்.

 

இலங்­கையின் கீர்த்­தி­மிக்க கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளான சி.டபிள்யூ.டபிள்யூ கண்­ணங்­கர, சேர். டீ.பி.ஜய­தி­லக்க இந்­தி­யாவின் அர­சியல் சாச­னத்தை வகுத்த கலா­நிதி. டாக்டர். அம்­பேத்கார் ஆகி­யோரும் இத்­த­கைய புல­மைப்­ப­ரி­சில்­களைப் பெற்று கல்வி கற்­ற­வர்­களே என அவர் நினை­வூட்­டினார்.

 

சமூக மேம்­பாட்­டுக்கு கல்வி மிகவும் முக்­கி­யத்­து­வ­மா­னது என்­பதை வலி­யு­றுத்­திய பேரா­சி­ரியர் திஸா­நா­யக்க, இவ்­வா­றான நிகழ்­வு­களில் பங்­கேற்கும் பெற்­றோர்­களின் அள­வற்ற மகிழ்ச்­சி­யையும் தன்னால் உணர முடி­வ­தாகக் கூறினார்.

 

எல்லாப் பிள்­ளை­களும் தம்­மிடம் இருப்­ப­தை­விட இன்னும் மேல­தி­க­மாகப் பெற்று வாழ்க்­கையில் உயர் நிலைக்கு வர­வேண்டும் என்­ப­துதான் சகல பெற்­றோ­ரி­னதும் எதிர்ப்­பார்ப்­பாகும்.

 

பெற்­றோரின் இந்த அபி­லா­ஷைகள் நிறை­வேற பிர­ணாம புல­மைப்­ப­ரிசில் வழி­வ­குக்­கின்­றது என்று அவர் மேலும் கூறினார். செலிங்கோ லைஃப் பணிப்­பா­ளரும் பிரதிப் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான துஷார ரண­சிங்க உரை­யாற்­று­கையில், “இன்று வரை 110 மில்­லியன் ரூபாவை இந்தத் திட்­டத்­துக்கு அர்ப்­ப­ணித்­துள்ள செலிங்கோ லைஃப் அதை ஒரு செல­வாகக் கரு­த­வில்லை. இலங்­கையின் எதிர்­கா­லத்தின் மீது செய்­யப்­பட்­டுள்ள ஒரு முத­லீ­டா­கவே அது கரு­தப்­ப­டு­கின்­றது” என்றார்.

 

செலிங்கோ லைஃப் பிர­ணாம புல­மைப்­ப­ரிசில் திட்­டத்தின் கீழ் 2015ல் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 26 மாண­வர்­களும், க.பொ.த சா/த பரீட்­சையில் மாவட்ட ரீதியில் முத­லி­டத்தைப் பெற்ற 25 மாண­வர்­களும், 2014 க.பொ.த உயர்­தர பரீட்­சையில் மாவட்ட மட்­டத்தில் சிறந்த இஸட் புள்­ளியைப் பெற்றுக் கொண்ட 26 மாண­வர்­களும், மாவட்ட மட்­டத்தில் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் இஸட் புள்­ளி­களைப் பெற்றுக் கொண்ட 69 மாண­வர்­களும், தேசிய அல்­லது சர்­வ­தேச மட்­டத்தில் விளை­யாட்டுத் துறை, கலை, கலா­சார, நாடக மற்றும் புதிய கண்­டு­பி­டிப்­புக்கள் என்­ப­ன­வற்றில் சாதனை படைத்த எட்டு பேரும் தமக்­கான புல­மைப்­ப­ரி­சில்­களைப் பெற்றுக் கொண்டனர்.

 

இந்த சுற்று பிரணாம திட்டத்தின் மூலம் இதுவரை இந்தப் புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளது.


 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.