Sunday  23 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
2016 ஆம் ஆண்­டுக்­கான களனி விசுர பயிற்சித் திட்­டத்தை கொழும்­பி­லி­ருந்து ஆரம்­பித்­துள்ள களனி கேபிள்ஸ்
2016-02-19 11:20:44


நாடு முழு­வ­தையும் சேர்ந்த மின்­சார கட்­ட­மைப்­பு­க­ளுக்­கான வயர்­களை பதிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­படும் இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான வழி­காட்டல் செயற்றி­ட்­ட­மான ‘களனி விசுர’ நிகழ்ச்­சித்­திட்­டத்தை சுமார் ஒரு தசாப்த காலப்­ப­கு­திக்கு முன்னர் இலங்­கையில் களனி கேபிள்ஸ் பி.எல்.சி. அறி­முகம் செய்­தது.

 

களனி கேபிள்ஸ் பி.எல்.சி. விற்பனை பொறியியலாளர் சஞ்ஜீவ குணதிலக, 2016 இன் முதலாவது “களனி விசுர” திட்டத்தை முன்னெடுக்கிறார்.


 

புது­வ­ரு­டத்தின் முத­லா­வது “களனி விசுர” பயிற்­சிப்­பட்­ட­றைகள் கொழும்­பி­லி­ருந்து ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன.

 

ஆமர் வீதி மற்றும் மெசென்ஜர் வீதி ஆகிய பகு­தி­களில் வசிக்கும் இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், பிரைட்டன் ஹோட்­டலில் நடை­பெற்ற பயிற்­சிப்­பட்­ட­றையில் கலந்து கொண்டு இலத்­தி­ர­னியல் வயர்­களை பதிதல் தொடர்பில் பின்­பற்­றப்­படும் நவீன வழி­மு­றைகள் பற்றி அறிந்து கொண்­டனர். 

 

களனி கேபிள்ஸ் பி.எல்­.சி.யின் விற்­பனை பொறி­யி­ய­லாளர் சஞ்­ஜீவ குண­தி­ல­க­வினால் களனி விசுர பயிற்­சிப்­பட்­டறை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இதில் 150க்கும் அதி­க­மான இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் பங்­கு­பற்­றினர்.


பாது­காப்­பான இல்­லங்கள் மற்றும் கட்­ட­டங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான தரம் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்ட வயர்­களை தெரிவு செய்­வது, தூரத்தை கவ­னத்தில் கொண்டு இல்­லங்கள் மற்றும் கட்­ட­டங்­களில் ப்ளக் பொயின்ட்­க­ளையும் சுவிட்ச்­க­ளையும் பொருத்­துதல், விளக்­கு­களின் எண்­ணிக்­கையை பொறுத்து வயர்­களை தெரிவு செய்தல், முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­திகள் தொடர்பில் கவனம் செலுத்தல் மற்றும் வயர்­களை பதிதல் பற்­றிய விட­யங்கள் பற்றி விளக்­கங்கள் வழங்­கப்­பட்­டன.

 

இந்த ஒரு நாள் பயிற்­சிப்­பட்­ட­றையில் பங்­கு­பற்­றி­ய­வர்­க­ளுக்கு உணவு வேளைகள் மற்றும் பான வகைகள் போன்­றன வழங்­கப்­பட்­டி­ருந்­த­துடன், பங்­கு­பற்­று­நர்­க­ளுக்கு சான்­றி­தழ்கள் மற்றும் அன்­ப­ளிப்­புகள் வழங்­க­லுடன் நிறை­வ­டைந்­தி­ருந்­தன.

 

"களனி விசுர” திட்­டத்தின் முக்­கிய அம்­ச­மாக, ஒவ்­வொரு பங்­கு­பற்­று­ந­ருக்கும் வீடுகள் அல்­லது கட்­ட­டங்­க­ளுக்கு அவ­சி­ய­மான வயர்­களை பதிதல் தொடர்­பி­லான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்­தி­ருந்­த­துடன், இதன் மூல­மாக போட்­டி­க­ரத்­தன்மை வாய்ந்த சூழலில் பங்­கு­பற்­றிய இலத்­தி­ர­னி­ய­லா­ளர்­க­ளுக்கு மின்­கட்­ட­மைப்­பு­களை பொருத்தும் ஆளுமை சேர்க்­கப்­படும்.

 

நாடு முழு­வ­தையும் சேர்ந்த இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்­சி­களை வழங்கும் முன்­னணி பயிற்­சிப்­பட்­ட­றை­யாக “களனி விசுர” அமைந்­துள்­ளது. இந்த திட்­டத்தின் மூல­மாக மொத்­த­மாக 17,000 இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் இது­வரை அனு­கூலம் பெற்­றுள்­ளனர்.

 

களனி கேபிள்ஸ் பி.எல்.சி. கொழும்பு நக­ரங்­க­ளிலும் ஏனைய நக­ரங்­க­ளிலும் இந்த களனி விசுர பயிற்­சிப்­பட்­ட­றை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­துடன், நாட்டின் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

 

குறிப்­பாக, கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், வவு­னியா, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, அம்­பாறை மற்றும் மொன­ரா­கலை ஆகி­யன மாவட்­டங்­க­ளிலும் இவை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த பிர­தே­சங்­களைச் சேர்ந்த பெரு­ம­ள­வானோர் ‘களனி விசுர’ திட்­டத்தின் மூலம் பயன்­பெற்­றி­ருந்­தனர்.

 

நிபு­ணத்­துவ வாழ்க்­கையில் பங்­க­ளிப்பு செலுத்­து­வ­துடன், இந்த மாவட்­டங்­களைச் சேர்ந்த குடும்­பங்­களின் சமூக நிலை­களை மேம்­ப­டுத்தும் வகை­யிலும் “களனி விசுர” சமூக பொறுப்­பு­ணர்வு செயற்­திட்டம் அமைந்­துள்­ளது.

 

களனி கேபிள்ஸ் பி.எல்.சி. வர்த்­தக நாம அபி­வி­ருத்தி முகா­மை­யாளர் சன்ன ஜய­சிங்க கருத்து தெரி­விக்­கையில், “வயர் என்றால் களனி எனும் வர்த்­தக நாம தொட­ருக்­க­மைய, களனி கேபிள்ஸ் சந்­தையில் உயர் தரம் வாய்ந்த பல தயா­ரிப்­பு­களின் மூலம் ஆதிக்கம் செலுத்­து­கி­றது.

 

பாது­காப்­பான இலத்­தி­ர­னியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் விற்பனையில் களனி கேபிள்ஸ் முன்னணி ஸ்தானத்தை பேணி வருகிறது” என்றார். களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.