Thursday  27 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
‘ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை’ விருதை வென்று கொமர்ஷல் வங்கி வரலாற்று சாதனை
2016-02-17 12:16:02

அண்­மையில் சர்­வ­தேச அரங்கில் கொமர்ஷல் வங்கி மேலும் ஒரு விருதை வென்­றுள்­ளது. 2014 ஆம் ஆண்­டுக்­கான அதன் வரு­டாந்த அறிக்­கைக்கு ‘ஆசி­யாவின் சிறந்த ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட அறிக்கை’ என்ற விருது கிடைத்­துள்­ளது.

 

கொமர்ஷல் வங்கிக்கான விருது அதன் நிதி பிரிவு தலைவர் எம்.பி.தர்மசிறியிடம் சிங்கப்பூரில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய காலநிலை மாற்ற மற்றும் சக்தி வலையமைப்பு பிரிவின் தென் கிழக்கு ஆசிய பணிப்பாளர் டேவிட் வின்சட்டினால் கையளிக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்


 

சிங்­கப்­பூரில் இடம்­பெற்ற ஆசிய நிலைத்­தன்மை அறிக்­கை­யிடல் விருது வழங்கும் விழா­வி­லேயே இந்த விருது கிடைத்­துள்­ளது.

 

இந்த பெரு­மைக்­கு­ரிய விழாவில் விரு­தொன்றை வென்ற ஒரே இலங்கை நிறு­வ­ன­மாக கொமர்ஷல் வங்கி திகழ்­கின்­றது. 14 வகை­யான வகைப்­ப­டுத்­தலின் கீழ் ஒவ்­வொரு வகையின் கீழும் ஒரு வெற்­றி­யா­ளரைப் பிர­க­டனம் செய்து கம்­ப­னி­க­ளுக்கு உரிய அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது.

 

சிங்­கப்­பூரின் முன்­னணி நிலைத்­தன்மை ஆலோ­ச­கர்­களும், ஆராய்ச்­சி­யா­ளர்­களும் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளு­மான CSR Works இன்­டர்­நே­ஷனல் என்ற அமைப்பே இந்த விருது விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

 

ஹொங்கொங், சீனா, ஜப்பான், இந்­தியா, தாய்வான், மலே­ஷியா, தாய்­லாந்து, இலங்கை, மத்­திய கிழக்கு, இந்­தோ­னே­ஷியா, சிங்­கப்பூர், பிலிப்பைன்ஸ் என பல பாகங்­களில் இருந்து 180 நிறு­வ­னங்கள் இதில் பங்­கேற்­றன.

 

இவை அனைத்­துமே ஆசி­யாவில் மிகவும் பிர­ப­ல­மான நிறு­வ­னங்கள் என பட்­டி­ய­லி­டப்­பட்­டவை. அத்­தோடு அந்­த­ந்தப் பிரி­வு­களில் முன்­னணிக் கம்­ப­னி­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

 

மே பேங்க் மலே­ஷியா, இயஸ் பேங் இந்­தியா, ஹொங்கொங் விமான நிலைய அதி­கார சபை, தாய்­வானின் சங்­குவா டெலிகொம் போன்ற துறைசார் ஜாம்­பவான் நிறு­வ­னங்கள் இறுதித் தெரி­வுக்­காக பட்­டியல் இடப்­பட்­டி­ருந்­தன.

 

“நிலைத்­தன்மை வெளிப்­பா­டு­க­ளுக்­கான ஆசி­யாவின் தலை­மைத்­துவ அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளமை பெரும் மகிழ்ச்சி அளிக்­கின்­றது” என்று கூறினார் வங்­கியின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஜெகன் துரை­ரட்ணம்.

 

நிலைத்­தன்­மைக்கு பங்­க­ளி­பபுச் செய்த எல்லா கார­ணிகள் பற்­றியும் விரி­வான அறிக்­கை­யிடல் சிக்­க­லா­னதும் அதிக கால நேரம் தேவைப்­படும் ஒரு விட­ய­மா­கவும் உள்­ளது.

 

ஆனால் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு அது மிக அவ­சி­ய­மாக தேவைப்­ப­டு­கின்ற நிலையும் அதி­க­ரித்து வரு­கின்­றது. ஆசி­யாவின் மிகச் சிறந்த ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட அறிக்­கை­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தா­னது மிகவும் விசே­ட­மா­னது.

 

அந்த வகையில் எமது அறிக்­கையை தயா­ரிப்­பதில் ஒரு குழு­வாக ஈடு­பட்ட பிரி­வி­ன­ருக்கு நாம் பாராட்டைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.


CSR Works இன்­டர்­நே­ஷனல் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் ராஜேஷ் சபாரா இந்த விருது பற்றி குறிப்­பி­டு­கையில், “உல­க­ளா­விய மனப்­பாங்­கு­ட­னான போக்கில் ஆசி­யாவின் மேலும் பல கம்­ப­னிகள் நிலைத்­தன்மை அறிக்­கை­யி­டலை நோக்கி நகர்ந்து வரு­கின்­றன. இதனை ஊக்­கு­வித்து உற்­சா­கப்­ப­டுத்­து­வதே எமது இலக்­காகும்” என்றார்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.