Tuesday  25 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
பிரபுதேவா-தமன்னா நடிக்கும் 'தேவி' ட்ரெய்லர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
டோக்கியோ சீமெந்து Super Quiz பருவம் 3 இல் களுத்துறையிலிருந்து 3 இறுதி போட்டியாளர்கள் தெரிவு
2016-02-15 16:01:25

மாண­வர்கள் மத்­தியில் அறிவுத் தாகத்தை ஊக்­கு­விக்கும் வகையில் டோக்­கியோ சீமெந்து நிறு­வ­னத்தின் மூலம் களுத்­துறை மாவட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த டோக்­கியோ சீமெந்து Super Quiz போட்­டியில் இறுதிச் சுற்றின் வெற்­றி­யா­ள­ராக களுத்­துறை சி.டபிள்யூ.டபிள்யூ கன்­னங்­கர மத்­திய மகா­வித்­தி­யா­லயம் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 

 

புதிய விட­யங்­களை அறிந்து கொள்­வ­தற்கு நூல­கத்தை பயன்­ப­டுத்­து­வது மற்றும் ஒன்­லைனில் தேடிப் பயில்­வது போன்ற செயற்­பா­டு­களின் மூல­மாக தமக்கு இந்த வெற்­றியை பெற்றுக் கொள்ள முடிந்­தது என சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கர மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் வினா அணித் தலைவர் ல­க் ஷித நான­யக்­கார தெரி­வித்தார். 

 

ல­க்ஷித நாண­யக்­கார தொடர்ந்து கூறு­கையில், கடந்த ஆண்டு Super Quiz போட்­டியின் போது தமது அணி பெற்றுக் கொண்ட அனு­பவம், தமது அணி­யினர் ஒன்­றாக செய­லாற்­றி­யி­ருந்­தமை போன்­றன படிப்­ப­டி­யாக டோக்­கியோ சீமெந்து Super Quiz பருவம் 3 இன் சம்­பி­யன்­க­ளாக வெற்­றி­யீட்ட தம்மை தயார்ப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக தெரி­வித்தார்.

 

களுத்­துறை (மத்­து­கம) சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கர மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் வினா அணியில் ல­க்ஷித நாணயக்­கா­ர­வுடன், ரவிந்து தனன்­ஜய, கவீஷ ரங்­கன விதான, எச்.ஏ.டி.டி.எஸ். ஜய­சே­கர மற்றும் டி.கே.பியு­மாலி ஆகியோர் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.

 

இவர்கள் டோக்­கியோ சீமெந்து Super Quiz பருவம் 3 இன் ஆரம்­ப­கட்ட போட்­டி­களில் ஏனைய 18 அணி­களை வெற்றி கொண்­டதன் மூலம் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தி­ருந்­தனர். இவர்கள் கொழும்பில் நடை­பெறும் அகில - இலங்கை வினா போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­கான தகை­மையைப் பெற்­றனர்.

 

இந்த போட்­டிகள் தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்பு செய்­யப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தச் சுற்றில் 32 இறு­திச்­சுற்று அணிகள் 5 மில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான பணப் பரி­சுக்­காக போட்­டி­யிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

அத்­துடன், வெற்­றி­யா­ளர்­க­ளுக்கும், இரண்டாம் மற்றும் மூன்­றா­மி­டங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வோ­ருக்கு கவர்ச்­சி­க­ர­மான பரி­சு­களும் வழங்­கப்­படும். கடந்த இரண்டாண்டு காலப்­ப­கு­தியில், மடிக்­க­ணி­னிகள் மற்றும் டப்­லெட்கள் போன்­ற­னவும் அரை இறுதிச் சுற்­றுக்கு தெரி­வா­ன­வர்­க­ளுக்கு பரி­சு­க­ளாக வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 

 

சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கர மத்­திய  மகா வித்­தி­யா­லயம், களத்தில் 19 அணி­க­ளுடன் தமது திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. களுத்­துறை மாவட்­டத்­தி­லி­ருந்து புளத்­சிங்­கள, மத்­து­கம, ஹொரண, பேரு­வளை, வாத்­துவ, பாணந்­துறை போன்ற பிர­தே­சங்­களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன.

 

ஆச்­ச­ரி­ய­மூட்டும் வகையில், இந்த சுற்­று­போட்­டி­களில் முதல் தட­வை­யாக தேஷஸ்­தர பெண்கள் வித்­தி­யா­லயம் (களுத்­துறை) மற்றும் ஹொர­வல நவோ­தய மஹா வித்­தி­யா­லயம் (மத்­து­கம) ஆகிய பாட­சாலை அணி­களும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன.

 

களுத்­துறை மாவட்ட சி.டபிள்யூ.டபிள்யூ கன்­னங்­கர மத்­திய மகா வித்­தி­யா­லயம், ஏனைய மாவட்ட வெற்­றி­யா­ளர்­க­ளான காலி (மஹிந்த கல்­லூரி மற்றும் ரிச்மன்ட் கல்­லூரி), மாத்­தறை (புஹூ வெல்ல மத்­திய மகா வித்­தி­யா­லயம்), பொலன­றுவை (விஜித மத்­திய மகா வித்­தி­யா­லயம்), அநு­ரா­த­புரம் (அநு­ரா­த­புரம் மத்­திய மகா வித்­தி­யா­லயம்), கேகாலை (புனித. ஜோசப் பெண்கள் மகா வித்­தி­யா­லயம்), இரத்­தி­ன­புரி (பலாங்­கொட மத்­திய மகா வித்­தி­யா­லயம்), ஹம்­பாந்­தோட்டை (ராஜ­பக் ஷ மத்­திய மகா வித்­தி­யா­லயம்), பதுளை (பதுளை மத்­திய மகா வித்­தி­யா­லயம்), மொன­ரா­கலை (ரோயல் மத்­திய மகா வித்­தி­யா­லயம்) மற்றும் நுவ­ரெ­லியா (ஸ்ரீ பாத மத்­திய மகா வித்­தி­யா­லயம்) ஆகி­ய­வற்­றுடன் இணைந்­துள்­ளது.

 

இறுதிச் சுற்று போட்­டிகள் 2016 மார்ச் மாதம் சுவர்­ண­வா­ஹினி தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்பு செய்­யப்­ப­ட­வுள்­ளன. நாடு முழு­வ­தையும் சேர்ந்த எந்­த­வொரு அணிக்கும் இந்த போட்டித் தொடரில் வெற்­றி­யீட்­டு­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 

தேசத்­துக்கு இந்த போட்­டியின் மூலம் வழங்­கப்­படும் பங்­க­ளிப்பு தொடர்பில் மேல் மாகாண சமூக விஞ்­ஞான பணிப்­பாளர் திரு­மதி. வஜிரா சில்வா கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையின் தேசிய கல்வி கட்­ட­மைப்­புக்கு டோக்­கியோ சீமெந்து Super Quiz பங்­க­ளிப்பு வழங்­கி­யி­ருந்­த­மைக்கு மேல­தி­க­மாக, போட்­டி­யா­ளர்­க­ளுக்கு வெளி உலகில் காணப்­படும் மன­நி­லையை உறுதி செய்யும் வகையில் அமைந்­துள்­ளது.

 

உலகின் குடி­மக்கள் எனும் வகையில் அவர்­க­ளுக்கு காணப்­படும் வாய்ப்­புகள் மற்றும் சர்­வ­தேச வாய்ப்­புகள் ஆகி­யன தொடர்பில் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக அமைந்­துள்­ளது.

 

டோக்­கியோ சீமெந்து, இலங்­கையின் முன்­னணி சீமெந்து மற்றும் கொங்­கிறீற் உற்­பத்­தி­யாளர் எனும் வகையில், 2013 இல் Super Quiz போட்­டி­களை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. மூன்­றா­வது ஆண்­டாக முன்­னெ­டுக்­கப்­படும் டோக்­கியோ சீமெந்து Super Quiz போட்­டிகள் மூல­மாக 5 மில்­லியன் ரூபாய் பெறு­மதி வாய்ந்த பணப்­ப­ரி­சுகள் வரு­டாந்தம் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

மேலும், நாடு முழு­வதும் கல்­விசார் செயற்­பா­டு­களை ஊக்குவிக்கும் வகையில் பெருமளவான தொகையை டோக்கியோ சீமெந்து நிறுவனம் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

உண்மையில் பாரிய சமூக பொறுப்புணர்வு செயற்பாடாக அமைந்துள்ள இந்த போட்டிகளில் கடந்த ஆண்டு சுமார் 632 பாடசாலைகள் ஆரம்ப சுற்றில் போட்டியிட்டிருந்தன. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவான பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

2015 ஆம் ஆண்­டுக்­கான சிறந்த இணை­யத்­த­ளங்­க­ளுக்­கான விருது வழங்கு விழாவில், வணிக வகை ­சார்ந்த சிறந்த இணை­யத்­த­ளத்­திற்­கான 2015 ஆம் ஆண்டு விரு­தினை Edoctor Consultation Pvt Ltd ­நி­று­வனம் தனது www.edoctor.lk என்ற இணை­யத்­த­ளத்­திற்­காக பெற்றுக் கொண்­டது.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.