Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்­கையின் மாபெரும் நவீன மருந்­துப்­பொருட்கள் உற்­பத்தி பகு­தியை நிர்­மா­ணிக்கும்
2016-02-11 14:55:51

LAUGFS  பார்­ம­சி­யுட்­டிகல் லிமிட்டெட் (பிரை) லிமிடட் நிறு­வ­ன­மா­னது இலங்­கையின் மாபெரும் மருந்­துப்­பொ­ருட்கள் உற்­பத்தி நிலை­ய­மொன்­றினை 30 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் முத­லீட்டில் கொக்­கல ஏற்­று­மதி வல­யத்தில் நிறு­வு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­துடன், அதற்­கான அடிக்­கல்லும் நாட்­டப்­பட்­டது. 

 

 

LAUGFS ஹோல்டிங்ஸ் மற்றும் பிரீ­மியம் இன்­டர்­நெ­ஷனல் பிரைவட் லிமிட்டெட் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில், வாய்­மூல திண்ம மருந்துப் பொருட்கள் உற்­பத்தி ஆலையை நிறுவி செயற்படுத்த இவ்­விரு நிறு­வ­னங்­களும் முன்­வந்­தி­ருந்­தன.

 

உலகின் வெவ்வேறு நாடு­க­ளுக்கு மருந்துப் பொருட்­களை ஏற்­று­மதி செய்­யக்­கூ­டிய வகை­யி­ல­மைந்த முத­லா­வது சர்­வ­தேச சான்றைப் பெற்ற உற்­பத்தி ஆலை­யாக இந்த ஆலை திக­ழ­வுள்­ளது. 

 

உள்­நாட்டு மருந்­தாக்கல் துறை என்­பது, அதி­க­ளவு வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­களை கொண்­டுள்­ளது. குறிப்­பாக, பொது மற்றும் தனியார் துறை­களில் 12 முதல் 17 சத­வீத வளர்ச்சி பதி­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

ஆனாலும், இலங்­கையின் 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான தேவையை நிவர்த்தி செய்­வ­தற்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களில் பெரு­ம­ளவில் தங்­கி­யுள்­ளது. 

 

கொக்­கல பகு­தியில் நிறு­வப்­படும் LAUGFS உற்­பத்தி ஆலையின் மூல­மாக, நாட்டின் சுகா­தார பரா­ம­ரிப்பு மற்றும் மருந்­தாக்கல் துறையில் புரட்சி ஏற்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன், தொழில்­நுட்ப மாற்­றத்தின் மூலமும் திறன் விருத்தி மூலமும் உள்­நாட்டு சுகா­தார பரா­ம­ரிப்பு துறையில் முன்­னேற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்­ப­துடன், உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்­துக்கும் நுகர்­வோ­ருக்கும் பெரு­ம­ளவு அனு­கூ­லங்­களைப் பெற்றுக் கொடுக்கும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

 

இந்­ நி­கழ்வின் போது அங்கு கருத்து தெரி­வித்த LAUGFS நிறு­வ­னத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகா­பிட்­டிய,  “உள்­நாட்டில் படிப்­ப­டி­யாக உயர்ந்த நிறு­வனம் எனும் வகையில், சுகா­தாரத் துறை­யிலும் காலடி பதிப்­ப­தை­யிட்டு நாம் மிகவும் பெருமை கொள்­கிறோம்.

 

இந்த புதிய அறி­மு­கத்­துடன், எம்மால் உயர் தரம் வாய்ந்த, சகா­ய­மான மருந்துப் பொருட்­களை உள்­நாட்டு சந்­தையில் விநி­யோ­கிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும். வெளி­நா­டு­க­ளுக்கு செல்லும் பெரு­ம­ள­வான பணத்தை மீதப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வு­மி­ருக்கும்.

 

 

எமது அயல் நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், மருந்­துப்­பொ­ருட்கள் இறக்­கு­ம­தியில் இலங்கை வெளி­நா­டு­களில் தங்­கி­யி­ருக்கும் தன்மை மிகவும் அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது.

 

நாட்டின் தேவையில் 10 சத­வீதம் மட்­டுமே உள்­நாட்டில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது. உதா­ர­ண­மாக, பங்­க­ளா­தேஷை எடுத்துக் கொண்டால், எமது நாட்டின் மருந்­தாக்கல் சந்தைப் பெறு­ம­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் மூன்று மடங்­காக அமைந்­துள்­ளது. 

 

அந்­ நாட்டின் உள்­நாட்டு உற்­பத்தி மூல­மாக உள்­நாட்டுத் தேவையின் 97 சத­வீ­தத்தை நிவர்த்தி செய்­கி­றது. பாகிஸ்தான் சுய உற்­பத்தி மூல­மாக 70 சத­வீ­தத்தை நிவர்த்தி செய்­கி­றது” எனத் தெரி­வித்தார்.  

 

LAUGFS குழும முகா­மைத்­துவ பணிப்­பாளர் திலக் டி சில்வா கருத்து தெரி­விக்­கையில், “இலங்­கை­யர்­க­ளுக்கு உயர்தரம் வாய்ந்த மருந்துப் பொருட்­களை சாதா­ர­ண­மாக கிடைக்கச் செய்ய முடியும் என்­ப­துடன், சக­ல­ருக்கும் சகா­ய­மான சுகா­தார பரா­ம­ரிப்பை பெற்றுக் கொடுக்க முடியும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

அத்­துடன், உள்­நாட்டில் உற்­பத்தி செய்­யப்­படும் மருந்­துப்­பொ­ருட்கள் மூல­மாக, வைத்­தி­ய­சா­லை­களில் நிலவும் மருந்துப் பொருட்­க­ளுக்­கான தட்­டுப்­பா­டு­களை நிவர்த்தி செய்­யக்­கூ­டிய வாய்ப்பு காணப்­ப­டு­கி­றது.

 

 

இந்த முத­லீ­டு­களின் மூல­மாக எமது பெறு­மதி சங்­கி­லியில் புதிய தொழில் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்த முடியும் என்­ப­துடன், பயிற்­சிகள் மற்றும் சர்­வ­தேச துறைக்­கான வெளிப்­ப­டுகை மூல­மாக எமது உள்­நாட்டு நிபு­ணர்­க­ளுக்கு ஆளு­மை­க­ளையும் அறிவு மேம்­ப­டுத்­த­லுக்­கான வாய்ப்­பையும் வழங்கும்.

 

இலங்­கையின் பாரம்­ப­ரிய பன்­முக நிறு­வனம் எனும் வகையில், எமது வெற்­றியை சமூக மற்றும் பொரு­ளா­தார பங்­க­ளிப்­புகள் ஊடாக நாட்­டுடன் பகிர்ந்து கொள்­வதை நாம் முக்­கிய இலக்­காக கொண்­டுள்ளோம்” என்றார்.

 

பிரீ­மியம் இன்­டர்­நெ­ஷனல் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரியும், முகா­மைத்­துவ  பணிப்­பா­ள­ரு­மான பிர­சாந்த குல­ரட்ன கருத்து தெரி­விக்­கையில், “இந்த ஆலையின் செயற்­பா­டுகள் ஆரம்­ப­மா­கிய பின்னர், இலங்­கையில் காணப்­படும் நவீன தொழில்­நுட்ப வச­திகள் நிறைந்த மற்றும் மிகப்­பெ­ரிய மருந்­துப்­பொ­ருட்கள் உற்­பத்தி ஆலை­யாக திகழும்.

 

நாட்டில் இது­வ­ரையில் உற்­பத்தி செய்­யப்­ப­டாத, சிக்­க­லான மருந்­துப் ­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­யக்­கூ­டிய வச­தி­களை நாம் கொண்­டி­ருப்போம்.

 

சர்­வ­தேச ஆலோ­ச­கர்கள் மற்றும் தொழில்­நுட்ப வல்­லு­நர்­களின் ஆலோ­ச­னை­களின் பிர­காரம் வடி­வ­மைக்­கப்­பட்டு நிர்­மா­ணிக்­கப்­படும் இந்த ஆலை, கடு­மை­யான சர்­வ­தேச தரங்­க­ளுக்­க­மை­வா­ன­தாக திகழும் என எதிர்­பார்க்­கிறோம்.

 

இவற்றில் UK’s Medicines and Healthcare Products Regulatory Agency (MHRA), ஐரோப்­பிய ஒன்­றி­யத்தி ன்Good Manufacturing Practice (GMP)  மற்றும் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தர நிய­மங்­க­ளையும் நிவர்த்தி செய்­வதும் உள்­ள­டங்­கி­யி­ருக்கும்.

 

சகல உள்­ளம்­சங்­களும் கட்­ட­மைப்­பு­களும் GEP, GAMP மற்றும் ASME போன்ற உயர் சர்­வ­தேச தர நிர்­ண­யங்­க­ளுக்­க­மைய வடி­வ­மைக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­படும்” என்றார்.

 

16 மாதங்­களில் நிர்­மாணப் பணிகள் பூர்த்தி செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன், வெவ்வேறு வகை­யான வில்­லைகள், கப்­சி­யுல்கள் மற்றும் உலர்ந்த பவுடர் மருந்து வகைகள் போன்­றன உற்­பத்தி செய்­யப்­படும்.

 

beta lactam (penicillin based)  மற்றும்  non-beta lactamவகைகள் போன்­றன இவற்றில் அடங்­கி­யி­ருக்கும். LAUGFS பார்­ம­சி­யுட்­டிகல்ஸ் என்­பது, ஹோல்டிங்ஸ் LAUGFS குழு­மத்தின் முழு அங்­கீ­கா­ரத்தைப் பெற்ற துணை நிறு­வ­ன­மாகும்.

 

இலங்­கையில் 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட நம்­பிக்­கையை வென்ற நாம­மான LAUGFS, 20 துறை­களில் தனது செயற்­பா­டு­களை விஸ்­த­ரித்­துள்­ளது. உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் பிர­சன்­னத்தைக் கொண்­டுள்ள இந் ­நி­று­வனம், வலு மற்றும் சக்தி, விற்­பனை, தொழிற்­துறை, சேவைகள், விடு­முறை, சரக்குக் கையாள்கை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளது. 4000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

 

பிரீமியம் இன்டர்நெஷனல் பிரைவட் லிமிட்டெட் என்பது, இலங்கையின் ஒரே ஒன்றிணைக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு விருத்தி நிறுவனமாகும். 2003 இல் ஸ்தாபிக்கப்பட்ட இந் நிறுவனம், பன்முகப்படுத்தப்பட்ட சுகாதார பராமரிப்பு தீர்வுகளை வழங்குகிறது. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.