Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பொருளாதார தடை; மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா
2016-03-04 10:24:54

ஐ.நா. பொரு­ளா­தாரத் தடை விதித்­துள்ள நிலையில் மீண்டும் வட­கொ­ரியா ஏவு­கணை சோதனை நடத்­தி­யது என தென்­கொ­ரிய பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

 

 

வட­கொ­ரியா கடந்த ஜன­வரி, பெப்­ர­வரி மாதங்க­ளில் ஏவு­கணை சோத­னை­களை நடத்­தி­யது.  இதை­ய­டுத்து ஐ.நா. பாது­காப்பு சபையில் வரைவு தீர்­மானம்  அண்­மையில் அமெ­ரிக்கா கொண்டு வந்­தது.

 

ஐ.நா. பாது­காப்பு சபையில் விவா­தத்தை அடுத்து வாக்­கெ­டுப்பு நடந்­தது. இதில் 15 உறுப்­பி­னர்கள் கொண்ட ஐ.நா. பாது­காப்பு சபையில் தீர்­மா­னத்தை எதிர்ப்­பின்றி நிறை­வேற்­றப்­பட்டு பொரு­ளா­தாரத் தடை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 

கடந்த இரண்டு தசாப்த காலங்­க­ளுக்கு பின்னர் வட­கொ­ரியா மீது விதிக்­கப்­பட்­டுள்ள மிகக் கடு­மை­யான பொரு­ளா­தார தடை இது என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இப்­பொ­ரு­ளா­தாரத் தடையின் பிர­காரம் வட­கொ­ரி­யா­வி­லி­ருந்து ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து பொருட்­களும் சோத­னை­யி­டப்­ப­டு­வ­துடன், 16 புதிய தனி­ந­பர்கள் மற்றும் 12 நிறு­வ­னங்கள் என்­பன ஏற்­கத்­த­கா­தது என பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளது.

 

இந்­நி­லையில், வட­கொ­ரியா இவ்­வா­றான ஆபத்­தான திட்­டங்­களை கைவிட்டு, மக்­க­ளுக்கு சிறப்­பான வழி­மு­றையை ஏற்­ப­டுத்திக் கொடுக்க முன்­வர வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி  ஒபாமா தெரி­வித்­துள்ளார்.

 

இதே­வேளை, வட­கொ­ரியா தனது மக்­களின் அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்­வ­தை­விட, அதன் அணு­சக்தி மற்றும் ஏவு­கணை திட்­டங்­க­ளி­லேயே அதிக கவனம் செலுத்தி வரு­கி­றது என பாது­காப்பு சபையில் உரை­யாற்­றிய ஐ.நா.விற்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்நிலையிலேயே வடகொரியா பல்வேறு குறுகிய தூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.