Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உள்ளாடையுடன் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு பரீட்சை: விளக்கமளிக்குமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
2016-03-03 11:58:08

இந்­திய பீஹார் மாநி­லத்தில் இரா­ணு­வத்­துக்கு ஆட்சேர்ப்­புக்­கான எழுத்துப் பரீட்­சையில் கலந்து கொண்­ட­வர்­கள் உள்­ளா­டை­யுடன் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பாக விளக்­க­ம­ளிக்க வேண்­டு­மென இந்­திய பாது­காப்பு அமைச்­ச­கத்­துக்கு பாட்னா மேல் ­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

 

 

பீஹார் மாநிலம், முசா­பர்­பூரில் அண்­மையில் நடை­பெற்ற இரா­ணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 1,159 பேர் கலந்து கொண்­டனர்.

 

அவர்கள் அனை­வ­ரையும் உள்­ளா­டை­யுடன் அமர வைத்து எழுத்துப் பரீட்சை நடத்­தி­யதைப் போன்ற புகைப்­ப­டங்கள் நாளி­தழ்­களில் வெளி­யா­னதைத் தொடர்ந்து, இதனை ஆதா­ர­மாகக் கொண்டு தீனுகுமார் என்ற சட்­டத்­த­ரணி, பாட்னா மேல் நீ­தி­மன்­றத்தில் பொதுநல வழக்கு தொடுத்­துள்ளார்.

 

 

இது­ தொ­டர்­பான மனுவை, பாட்னா மேல்­ நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி இக்பால் அஹ­மது அன்­சாரி, நீதி­பதி சக்ர­தாரி சரண் சிங் ஆகியோர் அடங்­கிய அமர்வு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­ட­போது, இது­ தொ­டர்­பாக எதிர்­வரும் ஏப்ரல் 5ஆம் திக­திக்குள் விளக்­க­ம­ளிக்க வேண்டும் என பாது­காப்புத் துறை அமைச்­ச­கத்­துக்கு உத்­த­ர­விட்­டனர்.

 

மேலும், பாது­காப்புத் துறை அமைச்­ச­கத்­துக்கு மனு அனுப்­பவும் நீதி­ப­திகள் உத்­த­ர­விட்டுள்­ளனர்.

 

இந் ­நி­லையில், இரா­ணு­வத்­துக்­கான ஆட்சேர்ப்பு முகாமில் உள்­ளா­டை­யுடன் எழுத்துப் பரீட்சை நடத்­தப்­பட்­டமை தொடர்­பாக இரா­ணு­வத்தின் தலைமை தள­பதி தல்பீர் சிங் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்­திய பாது­காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

 

ஆனால், இரா­ணுவ அதி­காரி வி.எஸ்.கோத்ரா கூறும்­போது, ' பரீட்­சையில் விடைத் துணுக்­குகள், செல்­போன்­களைக் கொண்டு மோச­டி­களைத் நடை­பெ­று­வதைத் தடுக்­கவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

பரீட்­சையில் பங்­கேற்­ற­வர்­களே இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கா­த­போது, வெளி­யாட்கள் ஏன் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர்?"  என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.