Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தொடர்ச்சியாக 340 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்
2016-03-03 09:44:35

சுமார் ஒரு வருட காலம் சர்வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யி­ருந்த அமெ­ரிக்க விண்­வெளி வீர­ரான ஸ்கொட் கெலி, மிகெய்ல் கோர்­னி­யென்கோ ஆகியோர் நேற்று புதன்­கி­ழமை பூமிக்குத் திரும்­பி­யுள்­ளனர்.  

 

 

கடந்த வருடம் மார்ச் 27 ஆம் திகதி இவர்கள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு அனுப்­ப­ப்பட்­டனர். அதன்பின் 340 நாட்கள் இவர்கள் தங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 

ரஷ்­யாவின் சோயுஸ் ரி.எம்.ஏ.18எம் (Soyuz TMA-18M)  விண்­க­லத்தின் மூலம் ஸ்கொட் கெலி, மிகெய்ல் கோர்­னி­யென்கோ மற்றும் ரஷ்­யாவின் சேர்ஜி வோல்கோ ஆகியோர் பூமிக்கு வந்­தனர்.

 

 

கஸ­கஸ்­தானின் டிஸெஸ்­கஸ்கன் நகரில் நேற்று இவர் தரை­யி­றங்­கினர். சேர்ஜி வோல்கோ கடந்த செப்­டெம்பர் 3 ஆம் திக­தி­யி­லி­ருந்து சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

ஸ்கொட் கெலி இதற்கு முன்­னரும் 3 தடவை விண்­வெ­ளிக்குச் சென்­றவ­ராவார். 52 வய­தான அவர் ஒரு பொறி­யி­ய­லாரும் அமெ­ரிக்க கடற்­ப­டையின் ஓய்வு பெற்ற கெப்­டனும் ஆவார். 

 

 

கடந்த ஒரு வரு­ட ­கா­ல­மாக சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்­த­வாறு பூமியை வலம் வந்­த­போது, உலகின் பல நக­ரங்கள், பிராந்­தியங்­களை அவர் படம்­பி­டித்து டுவிட்­டரில் வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

செவ்வாய் கிர­கத்­துக்­கான பயணம் போன்ற நீண்­ட­கால விண்­வெளி ஆய்வுத் திட்­டங்­க­ளுக்குத் தேவை­யான தர­வு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஸ்கொட் கெலியும் மிகெய்ல் கோர்­னி­யென்­கோவும் விண்­வெ­ளியில் சுமார் ஒரு வரு­ட ­காலம் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

 

 

52 வய­தான கெல்லி ஸ்கொட் விண்­வெ­ளியில் தொடர்ச்­சி­யாக நீண்­ட­காலம் தங்­கி­யிருந்த அமெ­ரிக்­க­ராக சாதனை படைத்­துள்ளார்.

 

எனினும், ரஷ்­யாவைச் சேர்ந்த 55 வய­தான மிகெய்ல் கோர்­னி­யென்கோ இவ்­ வி­ட­யத்தில் புதிய ரஷ்ய சாத­னையை படைக்­க­வில்லை. 

 

 

சோவியத் ஒன்­றி­யத்­தினால் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட மீர் விண்வெளி நிலையத்தில் ரஷ்யரான வலேரி பொலியெகோவ் தொடர்ச்சியாக 437 நாட்கள் தங்கியிருந்ததன் மூலம் நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருலுந்த  உலக சாதனையாளராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.