Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஈரானிய கிராமமொன்றில் ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர்
2016-03-01 12:26:30

ஈரானில் ஒரு கிராமத்திலுள்ள வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் தூக்கிலடப்பட்டுள்ளனர்.

 

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான உப ஜனாதிபதி ஷஹின்டோக்த் மொலாவேர்தி இத் தகவலை தெரிவித்துள்ளார். 

 

ஈரானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் எனும் ஈரானிய மாகாணத்திலேயே இக் கிராமம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஆணும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

 

தற்போது அரசாங்கத்தின் உதவி இல்லாவிட்டால், அவர்களின் பிள்ளைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 

தமது தந்தையின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அல்லது தமது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுவதற்காக இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடபடக்கூடும் என உப ஜனாதிபதி ஷஹின்டோக்த் மொலாவேர்தி கூறியுள்ளார். 

 

எனினும், மேற்படி கிராமத்தின் ஆண்கள் எப்போது தூக்கிலிடப்பட்டார்கள், ஒரே தடவையில் தூக்கிலிடப்பட்டார்களா அல்லது ஒரு குறித்த காலப்பகுதியில் தூக்கிலிடப்பட்டார்களா என்பது தெரியவில்லை. 

 

மரண தண்டனை வழங்குவதால் போதைப் பொருள் கடத்தல் குறைந்துவிடவில்லை என்பதை ஈரானிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.  

 

ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு தொடர்ந்தும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என ஈரானிய மனித உரிமைகள் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 

 

2011 ஆம் ஆண்டு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டோரில் 74 சதவீதமானோர் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என மனித உரிமைகளுக்கான ஈரானிய பேரவை தெரிவித்துள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.