Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமியார்; உறங்கி கொண்டிருந்த போது மருமகளால் கொலை!
2016-02-22 17:08:00

சொந்த கணவன், மனைவி இருக்க வேறொ­ரு­வ­ருடன் முறை­யற்ற உறவு வைத்­தி­ருப்­பதால் ஏற்­படும் விளை­வுகள், சம்­ப­வத்­துடன் தொடர்பு பட்­ட­வர்­களை மட்டும் பாதிக்­காது ஒட்டு மொத்த குடும்­பத்­தையுமே பாதிக்­கின்­றது.

 

தவ­றான உற­வு­க­ளுக்கு இடை­யூ­ராக இருப்­ப­வர்­களை பலி எடுக்கும் நிலையும் அதி­க­ரித்து வரு­கின்­றது.  

 

அந்த உற­வுக்­காக அவர்கள் சொந்த தாய், தந்தை, கணவன், மனைவி,  சொந்த பிள்­ளைகள், மாமனார் மாமியார், தாத்தா, பாட்டி என எந்த உறவுகளையும் பார்க்­காமல் உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மை­யாகி இவ்­வாறு செய்து வரு­வது வேத­னைக்­கு­ரிய ஒன்றே. இவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் கடந்த வாரம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

 

தமி­ழ­கத்தின் சிதம்­பரம் ஜவகல் தெருவை சேர்ந்­தவர் அந்­தோனி சார்லஸ் (38). இவ­ரது மனைவி சோபி­யா­ ஷைனி (29) இவர்­க­ளுக்கு திரு­ம­ண­மாகி 9 ஆண்­டுகள் ஆகின்­றன. இரு  மகன்கள் உள்­ளனர்.

 

அந்­தோனி சார்லஸ் சிதம்­பரம் வடக்கு­ரத வீதியில் மளிகைக் கடை நடத்தி வரு­கிறார். காலை 7 மணிக்கு மளிகைக் கடைக்கு செல்லும் அந்­தோனி சார்லஸ் வியா­பாரம் முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்­பு­வது வழக்கம்.

 

இதற்­கி­டையே அதே பகு­தியை சேர்ந்த இளை­ஞர் ஒ­ருவருடன் சோபி­யா ­ஷை­னிக்கு கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது.

 

இதனை அறிந்த அந்­தோனி சார்லஸ் மனை­வியை கண்­டித்­துள்ளார். ஆனாலும் சோபி­யா ­ஷைனி கள்­ளத்­தொடர்பை கைவி­ட­வில்லை.

 

கணவன் மளிகைக் கடைக்கு சென்ற பின்னர் கள்­ளக்­கா­த­லனை வீட்­டுக்கு வர­வ­ழைத்து சந்­தோ­ஷ­மாக இருந்­துள்ளார்.

 

இதை­ய­டுத்து கள்­ளக்­கா­த­ல­னுடன் மனைவி பழ­கு­வதைத் தடுக்க கணவர் அந்­தோனி சார்லஸ் தனது தாயார் ராஜ­ரீக மேரியை (62) தனது வீட்­டுக்கு அழைத்து சென்று வைத்­துள்ளார்.

 

இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை காலை வழக்கம் போல அந்­தோனி சார்லஸ் மளிகைக் கடைக்கு சென்­றுள்ளார். அவ­ரது மகன்­களும் பாட­சா­லைக்குச் சென்­றுள்­ளனர்.

 

வீட்டில் சோபி­யா­ ஷை­னியும், ராஜரீக மேரியும் இருந்­துள்­ளனர். இந்த நிலையில் பகல் 12 மணி­ய­ளவில் சோபி­யா­ ஷைனி கண­வ­னுடன் தொடர்பு­கொண்டு மாமியார் கட்­டிலில் இருந்து தவறி கீழே வீழ்ந்து விட்­ட­தா­கவும், தற்­போது ராஜ­ரீ­க­மேரி மயங்­கிய நிலையில் உள்­ள­தாக கூறி­யுள்ளார்.

 

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த அந்­தோனி சார்லஸ் வீட்­டுக்குச் சென்­றுள்ளார். அப்­போது முகத்தில் படு­கா­யத்­துடன் தாய் இறந்து கிடப்­பதை பார்த்து அந்­தோனி சார்லஸ் அதிர்ச்சி அடைந்­துள்ளார். தாயாரின் மூக்­கி­லி­ருந்தும் இரத்தம் வடிந்­திருந்தது. 

 

தனது தாய் கொலை செய்­யப்­பட்டிருக்­கலாம் என சந்­தேகமடைந்த அந்­தோனி சார்லஸ் இது­கு­றித்து சிதம்­பரம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

 

இத­னை­ய­டுத்து, பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று உடலை கைப்­பற்றி பிரேத பரி­சோ­த­னைக்­காக சிதம்­பரம் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.

 

பின்னர் சோபி­யா ­ஷை­னி­யாவை கைது செய்து விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். விசா­ர­ணையில் ராஜ­ரீக மேரியை கொலை செய்­ததை சோபியா ஷைனி ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

 

இந்த கொலை குறித்து அவர் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, "சில மாதங்­க­ளுக்கு முன்பு எனக்கும், என்­னு­டைய வீட்டினருகே வசித்து வந்த இளை­ஞ­ருக்­கு­மி­டையே கள்­ளக்­காதல் ஏற்­பட்­டது.

 

தினமும் கணவர் கடைக்கு சென்­றதும், அந்த வாலி­பரை போனில் அழைத்து வீட்­டுக்கு வர­வ­ழைத்து இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்து வந்தோம்.

 

இதை என்­னு­டைய கண­வரும், அவ­ரு­டைய தாயார் ராஜ­ரீ­க­மே­ரியும் கண்­டித்­தனர். மேலும், அந்த இளைஞர் வீட்­டுக்கு வந்து செல்­வதை எனது கண­வ­ரிடம் அவ­ரு­டைய தாயார் கூறி­வந்தார்,

 

இதனால் என்­னு­டைய கணவர் கோபம் அடைந்து, என்­னுடன் தக­ராறில் ஈடு­பட்டு வந்தார்.

 

இது அவ­ரு­டைய தாயார் மீது எனக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எனது கள்­ளக்­கா­த­லுக்கு இடை­யூ­றாக இருந்த அவ­ரு­டைய தாயாரை, தூங்கிக் கொண்­டி­ருந்­த­போது அவ­ரு­டைய தலையை தலை­ய­ணையால் அமுக்கி பிடித்து கொலை செய்ய முயன்றேன்.

 

அப்­போது, நீண்ட நேரம் ஆகியும் அவரது­ உயிர் போகவில்லை. இதனால், அவரது முகத்தில் இரும்பு கம்பியை வைத்து தாக்கினேன். இதில் அவருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து சோபியா ஷைனியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.