Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும் விமானம் முதல் தடவையாக உலகை சுற்றும் பயணத்தை அபுதாபியிலிருந்து ஆரம்பித்தது
2015-03-10 21:36:03

 

சூரிய சக்­தியால் இயங்கும் விமா­ன­மொன்று, முதல் தட­வை­யாக உலகைச் சுற்­றி­வரும் சாதனைப் பய­ணத்தை நேற்று அபு­தா­பியில் இருந்து தொடங்­கி­யுள்­ளது.


விமானப் போக்­கு­வ­ரத்தில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாசு ஏற்­ப­டுத்­தாத தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்­கத்­துடன் இந்த விமானம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விமானம், இந்­தியா, ஓமன், மியான்மர், சீனா ஆகிய நாடு­க­ளுக்கு பயணம் மேற்­கொள்­ள­வுள்­ளது.


சுவிட்­ஸர்­லாந்து நாட்டைச் சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறு­வனம் தயா­ரித்த, முற்­று­முழு­தாக சூரிய சக்­தியால் மட்­டுமே இயங்கும் விமா­னத்­துக்கு ‘சோலார் இம்பல்ஸ்2’( Solar Impulse 2)  என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

சுமார் 17 ஆயிரம் சூரி­ய­சக்திக் கலங்கள் கொண்ட சூரி­ய­சக்தி தகடு மூலம் இவ்­வி­மானம் பறப்­ப­தற்­கான எரி­சக்தி பெறப்­ப­டு­கி­றது. சூரி­ய­சக்­தியால் இயங்கும் முன்னைய விமா­னங்­களால்  இரவில் பறப்­பது சிர­மாக இருந்­தது அந்தத் தடை­யையும் தகர்த்து இர­விலும் பறக்கும் திறனை ‘சோலார் இம்பல்ஸ்’ விமானம் கொண்­டுள்­ளது.

 


பகலில் சூரிய சக்தி மூலம் பறந்­த­படி, மேல­திக மின்­சாரம் பற்­ற­ரி­களில் சேமிக்­கப்­படும். அந்த பற்­றரி மூலம் இரவில் தொடர்ந்து பறக்கும். இவ்­வி­மா­னத்தின் எடையில் மூன்றில் இரண்டு பங்கு பற்­ற­ரி­க­ளாகும்.


சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த விமா­னி­க­ளான பேர்னார்ட் பிக்கார்ட் மற்றும் அன்ட்ரே போர்ஸ்பேர்க் ஆகியோர் இவ்­வி­மா­னத்தை இயக்­கு­கின்­றனர்.


இவ்­வி­மா­னத்தின் அகலம் 72 மீற்­றர்­க­ளாகும். போயிங் 747 ரக விமா­னத்­தை­விட இது அகலம் கூடி­யது.


இந்த உலக சாதனை பய­ணத்தின் முதல் கட்­ட­மாக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அபு­தா­பி­யி­லி­ருந்து ஓமான் நாட்டின்  மஸ்கட் நகரை நோக்கி நேற்று காலை இவ்­வி­மானம் புறப்­பட்­டது. 

 

400 கிலோ­ மீற்றர் தூரம் கொண்ட இப்­ப­ய­ணத்தை நிறைவு செய்­வ­தற்கு சுமார் 12 மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பப்பட்டன. அவ்விமானம் இன்று செவ்வாய்க்கிழமை ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டது.

 


இவ்­வி­மானம் பின்னர் அரபிக் கடலை கடந்து இந்­தி­யாவை சென்­ற­டையும். இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தில் இவ்­வி­மானம் இறங்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. பின்னர் மியன்மார், சீனா, ஹவாய், நியூயோர்க், ஆகிய இடங்­களில் இறங்­க­வுள்ள இவ­வி­மானம் அதன்பின் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்து ஐரோப்பா அல்­லது வட ஆபி­ரிக்­கா­வுக்கு ஊடாக மீண்டும் அபு­தா­பியை வந்­த­டையும் முழுப்­ப­ய­ணத்­தையும் நிறைவு செய்­வ­தற்கு சுமார் 5 மாதங்கள் செல்லும். இக்­கா­லத்தில் அது வானில் பறக்கும் மொத்த நேரம் சுமார் 25 நாட்­க­ளாக இருக்கும்.


சீனாவின் நான்ஜிங் நக­ரி­லி­ருந்து பசுபிக் சமுத்­தி­ரத்­தி­ரத்­தி­லுள்ள ஹவாய் தீவு வரை­யான 8,500 கிலோ­மீற்றர் தூரமே இவ்­வி­மானம் தொடர்ச்சியாக பறக்கவுள்ள அதிகூடிய தூரமாகும். அத்தூரத்தை கடப்பதற்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகலிலும் இரவிலும் இவ்விமானம் பறக்க வேண்டியிருக்கும்.  இந்த உலக சாதனைப் பயணத்தில் மிக சவாலான கட்டமாக அது கருதப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.