Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைகளின் உருவாக்கத்துக்கு அனுமதிக்கும் உலகின் முதல் நாடாகியது பிரிட்டன்
2015-02-06 12:46:25

மூன்று நபர்­களின் மர­ப­ணுக்களின் (டி.என்.ஏ.) மூலம் குழந்­தை­களை உரு­வாக்­கு­வ­தற்கு அனு­ம­திக்கும் சட்டத் திருத்­தத்­துக்கு  பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அங்­கீ­காரம் அளித்­துள்­ளனர். இதன் மூலம் 3 பெற்­றோர்­களின் மர­ப­ணுக்கள் மூலம் குழந்தை உரு­வாக்­கு­வ­தற்கு அனு­ம­திக்கும் உலகின் முதல் நாடா­கி­யுள்­ளது பிரிட்டன்.


பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தின் பிர­தி­நி­திகள் சபையில் இச்­சட்­டத்­தி­ருத்தம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது அதற்கு ஆத­ர­வாக 382 எம்.பிகளும் எதி­ராக 128 எம்.பிகளும் வாக்­க­ளித்­தனர்.


 இச்­சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, in-vitro fertilisation (IVF) முறை­மையில் உரு­வாக்­கப்­படும் குழந்­தையின் முளை­ய­மா­னது தாய், தந்­தை­யி­ட­
மி­ருந்து வழக்­க­மான கரு டி.என்.ஏ உடன் மற்­றொரு ஆரோக்­கி­ய­மான கொடை­யா­ளி­யான பெண்­ணொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து பெறப்­பட்ட எம்.டி.என்.வின்  (mDNA) எனும் Mitochondria DNA  வின் சொற்ப அள­வையும் கொண்­டி­ருக்­கலாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


பாரிய நோய்­களை கொண்­டி­ருக்கும் குழந்­தையின் பரா­ம­ரிப்­புக்கு மைட்­டோ­கொன்ட்­ரியல் டொனேஷன் முறை­மையை தெரி­வு­செய்­வ­தா என்­பதை குடும்­பங்கள் தீர்­மா­னிக்கும் என ஹெல்த்தி சரிட்டி வெல்கம் ட்ரஸ்ட் எனும் அமைப்பின் பணிப்­பா­ள­ரான ஜெரமி பரார் தெரி­வித்­துள்ளார்.


இச்­சட்­டத்­தி­ருத்தம் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்­றத்தின் பிர­புக்கள் சபையில் இம்­மாத இறு­தியில் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 3 பெற்­றோரைக் கொண்ட குழந்­தை­களை உரு­வாக்கும் செயன்­மு­றைகள் அடுத்த வருட முற்­ப­கு­தியில் ஆரம்­ப­மாகும்.


ஆரோக்­கி­ய­மான குழந்­தை­களை உரு­வாக்­கு­வதற்கு இம்­மு­றைமை உதவும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­வேளை, எதிர்­கா­லத்தில் பெற்றோர் தாம் விரும்­பிய வகை­யி­லான குழந்­தை­களை (டிஷைனர் பேபி) உரு­வாக்க முற்­ப­டு­வ­தற்கு இந்த சட்­டத்­தி­ருத்தம் வழி­வ­குக்­கலாம் என சிலர் விமர்­சிக்­கின்­றனர்.


இந்த வாக்­க­ளிப்பு பெறு­பேறு குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக பிரிட்டனின் மருத்துவ விஞ்ஞான அக்கடமியின் தலைவர் ஜோன் டூகே தெரிவித்துள்ளார். பல வருட கால விஞ்ஞான மற்றும் பொதுமக்களுக்கிடையிலான விவாதங்களின் விளைவே இவ்வாக்கெடுப்பின் பெறுபேறாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.