Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
45,000 அடி உயரத்தில் வெடித்துச் சிதறியது ஸ்பேஸ்ஷிப் 2; வேர்ஜின் நிறுவனத்தின் தனியார் விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கு பின்னடைவு
2014-11-03 11:38:47

 

வேர்ஜின் கலெக்டிக் நிறு­வ­னத்தின் விண்­வெளி ஓடம் 45,000 அடி உய­ரத்தில் வெடித்துச் சித­றி­ய­துடன் விமா­னி­யொ­ருவர் கொல்­லப்­பட்ட சம்­பவம் தனியார் விண்­வெளிப் பயணத் திட்­டத்­திற்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


 அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் மஜோவ் பாலை­வ­னத்­துக்கு மேலாக இடம்­பெற்ற இவ்­வி­பத்தில் விமா­னி­யொ­ருவர் உயி­ரி­ழந்­த­துடன் மற்­றொரு விமானி படு­கா­ய­ம­டைந்த நிலையில் பரசூட் மூலம் கீழி­றங்­கினார்.

 

 


வேர்ஜின் கலெக்டிக் நிறு­வ­ன­மா­னது, பிரித்­தா­னிய கோடீஸ்­வ­ரரும் விண்­வெளி மற்றும் சாகச ஆர்­வ­ல­ரு­மான சேர் ரிச்சர்ட் பிரான்­ஸுக்குச் சொந்­த­மான வேர்ஜின் குழும நிறு­வ­னத்தின் ஓர் அங்­க­மாகும்.

 

 

2015 ஆம் ஆண்டு மக்­களை விண்­வெ­ளிக்குச் உல்­லாசப் பயணம் அழைத்துச் செல்லும் திட்­டத்தை நோக்கி வேமாக முன்­னேறி வரும் இந் நிறுவனம் இதற்­காக ஸ்பேஸ்ஷிப் 2 எனும் விசேட விண்­வெளி ஓடத்­தையும் தயா­ரித்­தது.

 

அதை விண்­வெ­ளிக்கு அனுப்­பு­வ­தற்­காக வழக்­க­மான ரொக்கெட் முறை­மையை பயன்­ப­டுத்­தாமல்,  விசேட வடி­வி­லான விமா­னத்தை அதை ஏவு­வ­தற்­காக வைட் நைட் 2 எனும் கல­மொன்­றையும் தயா­ரித்­துள்­ளது. வைட் நைட் 2 விமா­னத்தின் மத்­திய பகு­தியில் பொருத்­தப்­பட்­ட­வாறு ஸ்பேஸ் ஷிப் விண்­வெளி ஓடம் ஏவப்­படும். 

 

குறிப்­பிட்ட உய­ரத்­துக்குச் சென்­ற­வுடன் ஸ்பேஸ் ஷிப் கலம் தனி­யாக பிரிந்து செல்லும். அதற்­குள்­ளேயே விமா­னி­களும் பய­ணி­களும் இருப்பர்.


35 ஆவது தட­வை­யாக நேற்­று­முன்­தினம் இவ்­விண்­கலம் விண்­வெ­ளிக்கு அனுப்பி சோதனை மேற்­கொள்ளத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

 


கலி­போர்­னியா மாநி­லத்தில் பேக்­கர்பீல்ட் நக­ருக்கு அருவில் வைத்து  இவ்­விண்­கலம் விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்­டது. இரு விமா­னிகள் இதில் பயணம் செய்­தனர். இதன்­போது வைட் நைட் 2 இலி­ருந்து பிரிந்து தனி­யாக பய­ணத்தை ஆரம்­பித்த சில விநா­டி­களில் ஸ்பேஸ்  ஷிப் 2 கலம் வெடித்துச் சித­றி­யது.

 


இதனால் விமா­னி­களில் ஒருவர் உயி­ரி­ழந்தார். மஜோவ் பாலை­வ­னத்தில் சிதறி விழுந்த விண்­க­லத்தின் பாகங்­க­ளுக்­ கிடையில் ஆச­னத்­துடன் இணைக்­கப்­பட்­டா­வறு அவரின் உடல் காணப்­பட்­டது. மற்­றொரு விமானி பரசூட் மூலம் குதித்­த­ போ­திலும் அவர் படு­கா­ய­ம­டைந்தார். நேற்று அவ­ருக்கு உணர்வு திரும்­பி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இது­வரை இறப்பர் அடிப்­ப­டை­யி­லான எரி­பொருள் இவ்­விண்­வெளி ஓடத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் நேற்­று­முன்­தினம் பிளாஸ்டிக் அடிப்­ப­டை­யி­லான நவீன எரி­பொ­ரு­ளொன்று இவ்­விண்­க­லத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த எரி­பொருள் பூமியில் தீவி­ர­மான சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போ­திலும் முன்­னொ­ரு­போதும் விண்­க­லங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.


இந்த அனர்த்தம் கார­ண­மாக, விண்­வெ­ளிக்கு மனி­தர்­களை சுற்­று­ல­ா ­அ­ழைத்துச் செல்லும் வேர்ஜின் நிறு­வ­னத்தின் திட்­டத்தின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.


இவ்­வெளிப் பய­ணத்­துக்­கான டிக்கெட் பெறு­மதி தலா 250,000 டொலர் (சுமார் 3 கோடியே 23 லட்சம் ரூபா) ஆகும். பிர­பல நடிகர் லிய­னார்டோ டி கெப்­ரியோ, இசைக்­க­லை­ஞர்­க­ளான லேடி காகா, ஜஸ்டின் பைபர், கெத்தி பெரி உட்­பட சுமார் 500 பேர் ஏற்­கெ­னவே இப்­ப­ய­ணத்­துக்கு முன்­ப­தி­வு­செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இவ்­வெளி பய­ணத்­திட்டம் குறித்து மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்ள சேர் ரிச்சர்ட் பிரான்ஸன் தானும் முத­லா­வது பய­ணத்தில் அங்கம் வகிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

 

இப்­பின்­ன­ணியில் நேற்­று­ முன்­தினம் இடம்­பெற்ற விபத்து குறித்து, அமெ­ரிக்க போக்­கு­வ­ரத்து பாது­காப்பு சபை விசா­ரணை நடத்தி வரு­கி­றது. இவ்­வி­சா­ரணை பூர்த்திய­டை­வ­தற்கு சுமார் 12 மாதங்கள் செல்லும் என அச்­சபையின் தலைவர் கிறிஸ்­டோபர் ஹார்ட் தெரித்­துள்ளார்.


இதனால் வேர்ஜின் நிறு­வ­னத்தின் தனியார் விண்­வெளி சுற்றுலாத் திட்டத்தை பல வருடங்கள் தாமத்திக்கச் செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

 


இதேவேளை, இவ்விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சேர் ரிச்சர்ட் பிரான்ஸன், தனது தனியார் விண்வெளி சுற்றுலா கனவுத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக இவ்விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு தான் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.