Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
துடிப்பு நிறுத்தப்பட்ட இதயத்தை பயன்படுத்தி முதலாவது இதயமாற்று சத்திரசிகிச்சை
2014-10-28 10:47:07

துடிப்பு நிறுத்­தப்­பட்ட, இறந்த இதயம்" ஒன்றை முதல் தட­வை­யாக இதயமாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்கு வெற்­றி­க­ர­மாக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய மருத்­து­வர்கள் அறி­வித்­துள்­ளனர்.


1967 ஆம் ஆண்­டி­லி­ருந்து இதயமாற்று சத்­தி­ர­சி­கிச்­சைகள் பல நாடு­களில் நடத்­தப்­பட்­டுள்­ளன. பொது­வாக ஒரு நபரின் மூளை இறந்த பின்­னரும் அவரின் இதயம் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் நிலை­யிலேயே அந்த இதயம் இதய சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்கம்.


ஆனால், முதல் தட­வை­யாக இயக்கம் நிறுத்­தப்­பட்ட இத­ய­மொன்று இத்­த­கைய சத்­தி­ர­சி­கிச்­சைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை மருத்­துவ வர­லாற்றில் புதிய சாத­னை­யாகும்.


சிட்­னி­யி­லுள்ள செயின்ற் வின்சென்ட் வைத்­தி­ய­சா­லையைச் சேர்ந்த சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்கள் குழு­வொன்றே இந்த­சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்­டுள்­ளது.


சுமார் 20 நிமி­டங்கள் துடிப்பு நிறுத்­தப்­பட்­டி­ருந்த இத­ய­மொன்றை வெற்­றி­க­ர­மாக மற்­றொ­ரு­வ­ருக்கு பொருத்தப்­பட்­ட­தாக மருத்­து­வர்கள் அறி­வித்­துள்­ளனர்.


57 வயதான மிஷெல் கிரி­பிலாஸ் எனும் பெண்­ணுக்கு வெற்­றி­க­ர­மாக இந்த இதயம் பொருத்­தப்­பட்­டுள்­ளது.


இந்த இதயம் பொருத்­தப்­பட்­டபின், பெண் தான் பல தசாப்­த­காலம் இள­மை­யா­ன­வ­ரா­கி­விட்ட உணர்வை பெற்­றுள்­ள­தா­கவும் இப்­போது தான் வித்­தி­யா­ச­மான ஒரு நப­ராக உணர்­வ­தா­கவும் மிஷெல் கூறி­யுள்ளார்.


இது­வரை மனித உடல் அங்­கங்­களில் இத­யத்­து­டிப்பு நிறுத்­தப்­பட்­டபின் மாற்றுச் சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டாத ஒரே அங்­க­மாக இதயம் இருந்­தது. மூளை­சா­வ­டைந்த நபர்­களில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் இதயம் அகற்றப்­பட்டு சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் வரை பனிக்­கட்­டியில் வைக்­கப்­பட்­டபின் மற்­றொ­ரு­வ­ருக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்­க­மாக இருந்­தது.


தற்­போது, துடிப்பு நிறுத்­தப்­பட்ட இத­யங்­களை  இயந்­தி­ர­மொன்றில் வைத்து அந்த இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்யும் தொழில்­நுட்­பத்தை சிட்­னி­யி­லுள்ள மேற்­படி மருத்­து­வர்கள் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இத்­தொ­ழில்­நுட்­ப­மா­னது "பெட்­டிக்குள் இதயம்" என அழைக்­கப்­ப­டு­கி­றது. பல்­வேறு நாடு­களில் இந்த பரி­சோ­தனை முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன.


செயின்ற் வின்சென்ட் வைத்­தி­ய­சா­லையில் இதயமாற்­று­சி­கிச்சைப் பிரிவுத் தலை­வ­ரான பேரா­சி­ரியர் பீட்டர் மெக்­டொனால்ட் இது குறித்து கூறு­கையில், இப்­பு­திய கண்­டு­பி­டிப்­பா­னது இத­யத்தை தான­மாக வழங்கும் கொடை­யா­ளி­க­ளுக்­கான பற்­றாக்­குறை பிரச்­சி­னைக்கு தீர்­வா­கலாம் எனக் கூறி­யுள்ளார். இத்­தொ­ழில்­நுட்­பத்தின் மூலம் மேலும் 30 சத­வீ­த­மான உயிர்­களை காப்­பாற்ற  முடியும் எனக் கருதப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.