Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
674 நாட்கள் விண்வெளியில் பறந்தபின் பூமிக்குத் திரும்பியுள்ள அமெரிக்காவின் இரகசிய விமானம்
2014-10-20 13:02:27

அமெரிக்க விமானப் படையின் இரகசிய விண்வெளி விமானமொன்று 22 மாதங்கள் விண்ணில் வலம் வந்தபின்னர் தற்போது மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ளது. இவ்வளவு காலம் இவ்விமானம் விண்வெளியில் என்ன செய்தது என்பது பெரும் மர்மமாகவுள்ளது. 

ஓ-37டீ எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளி விமானம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் 'ஷட்டில்' எனும் விண்வெளி ஓடங்களின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இவ்விமானம் 29 அடி (9 மீற்றர்) நீளமும் 15 அடி அகலமும் கொண்டது.


இறுதியாக 22.12.2012 ஆம் திகதி புளோரிடா மாநிலத்தின் கேப் கனாவெரல் விமானப் படைத் தளத்தில் வைத்து ரொக்கெட்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பட்டது. கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவ்விமானம் மீண்டும் பூமிக்குத் திரும்பி கலிபோர்னியா மாநிலத்தின் வான்டன்பேர்க் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது.


இவ்விமானத்தின் மூன்றாவது விண்வெளிப் பயணம் இதுவாகும். 2010 ஆம் ஆண்டு முதல் தடவையாக இவ்விமானம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 8 மாதங்களின் பின்னர் அது பூமிக்குத் திரும்பியது. அதன்பின் 2011 மார்ச் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 15 மாதங்களின்பின் மிக்கத் திரும்பியது.
இப்போது மூன்றாவது தடவையாக விண்வெளிக்குச் சென்று 674 நாட்களின் பின்னர் பூமிக்குத் திரும்பியுள்ளது.

இவ்வளவு காலம் இவ்வமானம் விண்வெளியில் என்ன செய்துகொண்டிருந்தது என்பது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது எனக் கூறப்படுகிறது. பல்வேறு வகையான பரிசோதனைகளில் இவ்விமானம் ஈடுபட்டபட்டதாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில், ஓ-37டீ விமானத்தின் பயணம் குறித்த பல்வேறு ஊகங்கள், வதந்திகள் பரவுகின்றன. உளவு பார்க்கும் பல இரகசிய கருவிகளை இவ்விமானம் விண்வெளிக்கு கொண்டு சென்றிருக்கலாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.  


வேறு சிலர் தெரிவிக்கும் ஊடகங்கள் ஜேம்ஸ்பொண்ட் திரைப்படக் கதைகளைப் போன்றவை  ஏனைய நாடுகளின் செய்மதிகளை கைப்பற்றும் ஆற்றலை இவ்விமானம் கொண்டிருக்கலாம் என்பது அத்தகைய ஒரு ஊகமாகும். இத்தகயை ஊகங்களுக்கு மத்தியில் அடுத்த வருடம் மீண்டும் இவ்விமானத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.