Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து?
2014-10-06 12:20:39

எமது சூரிய குடும்­பத்­தி­லுள்ள கோள்­களில் (கிர­கங்­களில்) ஒன்­றாக புளூட்டோ மீண்டும் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


1930 ஆம் ஆண்டு கண்­டுபி­டிக்­கப்­பட்ட புளூட்டோ, 9 கிரங்­களில் மிகச் சிறிய கிர­க­மாக (கோள்)  புளூட்டோ கரு­தப்­பட்­டது. ஆனால், கிர­கங்­க­ளுக்­கான தன்­மையை புளூட்டோ கொண்­டி­ருக்­க­வில்லை என பலர் விமர்­சித்து வந்­தனர்.


 அதை­ய­டு­தது சர்­வ­தேச வானி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்­டோவை கோள் அந்­தஸ்­தி­லி­ருந்து நீக்­கி­யது.


சூரி­யனை சுற்றி வருதல், ஏறத்­தாழ கோள வடி­வ­மாக இருத்தல், சூரி­யனை சுற்­றி­வரும் தனது பாதை­யி­லுள்ள ஏனைய பொருட்­களை அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொள்ளும் தன்மை ஆகி­யன கிர­கங்­க­ளுக்கு இருக்க வேண்டும் என  சர்­வ­தேச வானி­ய­லா­ளர்கள் ஒன்­றியம் கூறி­யது.


அதன்பின், புதன், வெள்ளி,  பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்­ரியூன் ஆகிய 8 கோள்­களே சூரிய குடும்­பத்தில் இருப்­ப­தாக வானி­ய­லா­ளர்­களால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் குறிப்­பி­டப்­பட்­டது.


எனினும் இத்­தீர்­மா­னத்­துக்கும் பலர்­ஆட்­சேபம் தெரி­வித்து வந்­தனர். விஞ்­ஞா­னி­களில் சிலரும் இந்த தர­மி­றக்­க­லுக்கு அதி­ருப்தி தெரி­வித்­தனர்.


இந்­நி­லையில், அமெ­ரிக்­காவின் ஹார்வாட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற விவா­த­மொன்றின் பின் நடை­பெற்ற வாக்­கெ­டுப்­பின்­போது, புளூட்­டோவை மீண்டும் கிர­க­மாக அங்­கீ­க­ரிக்க வேண்டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.


கிரங்கள் தொடர்­பான தற்­போ­தைய வரை­வி­லக்­கணம் போது­மா­ன­தல்ல என  ஹார்வார்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் திமேத்தர் சசேலோவ் கூறி­யுள்ளார்.


இதை­ய­டுத்து மீண்டும் புளூட்டோ ஒரு கிர­க­மாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.


பூமியின் சந்திரனை விட புளூட்டோ சிறியதாகும்.  அதன் ஈர்ப்பு சக்தி குறைவாகையால் தனது பாதையிலுள்ள பல விண் கற்களை அகற்றிக்கொள்ள அதனால் முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.