Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா கைப்பற்றும் : விஞ்ஞானிகளின் ஆய்வில் காகங்கள் எதிர்வுகூறல்
2014-07-10 18:18:50

உலகின் மிக அறிவான பறவைகளில் ஒன்றாகக் கருதப்படும் காகத்தினால் 7 வயது சிறுவர்களின் அறிவாற்றலுடன் செயற்பட முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 


காகங்களின் ஆற்றல்கள் குறித்து நியூஸிலாந்தின் ஒக்லாந்து பல்கலைகழகத்தின் மொழி, கலாசார மற்றும் உணர்வுகள் ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு ஸ்கொட்லாந்து நிலப்பரப்பில் வாழும் காகங்களுக்கு பல்வேறுபட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


இவ்வாய்வு நிலையத்தில் மிகச் சிக்கலான விடயங்களுக்கு கூட காகங்கள் தீர்வளிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலகமே கால்பந்தில் மூழ்கியிருப்பதால் அது குறித்து காகங்களை பயிற்றுவித்து அதன் மூலம் வெற்றியாளரைத் எதிர்வுகூறச்செய்ய முடியமா என வேடிக்கையான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

 


காகங்களுக்கென கால்பந்தாட்ட அமைப்பின் சிறிய மாதிரி உருவாக்ப்பட்டு பெனல்டி உதை மூலம் வெற்றியைக் எதிர்வுகூறச் செய்ய தீர்மானித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதற்காக றிகாலி (பெண்) மற்றும் கிரெக்ஸா (ஆண்) ஆகிய இரண்டு காகங்களைப் பங்குபற்றச் செய்யப்பட்டுள்ளன.


கால்பந்தினை சிறிய சாதனம் ஒன்றின் வழியாக கோல் கம்பத்தினுள் இக்காகங்கள் போட வேண்டும். இதன் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். ஜேர்மனிக்கும் பிரேஸிலுக்குமிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டிக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் காகங்களின் எதிர்கூறல்களின் அடிப்படையில் ஜேர்மனியும் ஆர்ஜென்டீனாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா கிண்ணத்தைக் கைப்பற்றும்.

 

 

காகங்கள் எதிர்வுகூறியது போல ஜேர்மனியும் ஆர்ஜென்டீனாவவும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிட்டன. இதனால் இறுதிப் போட்டியிலும் காகங்களின் எதிர்வுகூறலுக்கமைய ஆர்ஜென்டீனா கிண்ணத்தைக் கைப்பற்றுமா என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
hirzan hussain2014-07-20 01:14:40
kaahathuku anna therium azu azatku payitchi alikkappattazu pol seyzazu. kaaham aditha goalitkum german player aditha goalitkum anna sambandam
1
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.