Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சும்சுங் தொழில்சாலையில் 469 கோடி ரூபா பெறுமதியான இலத்திரனியல் சாதனங்கள் ஆயுதமுனையில் கொள்ளை : கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் 7 ட்ரக் வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது
2014-07-09 14:20:48

சம்சுங் தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் 36 மில்லியன் டொலர் (சுமார் 469 கோடி ரூபா) பெறுமதியான இலத்தினரியல் சாதனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.


பிரேஸில் நாட்டில் சாவோ பவ்லோ நகருக்கு அருகிலுள்ள கம்பினாஸ் எனுமிடத்திலுள்ள சம்சுங் இலத்திரனியல் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று முன்தினமிரவு தீடிரென தொழிற்சாலைக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய 20 பேர் கொண்ட குழுவொன்று 200 பணியாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உள்ளுர் பொலிஸார் ஏ.ஃப்.பிக்கு தெரிவித்துள்ளார்.


இதன்போது 40 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள், லெப்டொப்கள், டெப்லட் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் சாதனங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவற்றினை 7 ட்ரக் வண்டிகளில் நிரப்பிக்கொண்டு கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளானர்.


கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சும்சுங் பணியாளர்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருந்ததாகவும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பணியாளர்களின் தொலைபேசியின் மின்கலங்களை கழற்ற உத்தரவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.


இதேவேளை கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு பெறுமதியான பொருட்கள் இருந்த இடம் குறித்து நன்கு அறிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. 


கொள்ளை குறித்த அறிக்கையில் தென் கொரிய நிறுவனமான சம்சுங் தெரிவிக்கையில், 'இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. சம்சுங் நிறுவனம் விசாரணைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது' எனக் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.