Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தானில் 1000 வருடங்கள் பழைமையான கிராமம் கண்டுபிடிப்பு
2014-06-22 18:09:25

பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்திலுள்ள தெஹ்ஸில் கட்லாங்கிலுள்ள மியான் கான் பிரதேசத்தில் அண்மையில் 1000 வருடங்கள் பழைமையான கிராமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


இக்கிராமத்தினை மர்தான் அப்துல் வலி கான பல்கலைக்கழத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவினரே கண்டுபிடித்துள்ளனர். இதுவே கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள மிகப்பழைமையான கிராமம் என வெளிக்கள பணிப்பாளர் ஆபிதுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


பிரபல்யமான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டொக்டர் இஹ்ஷான் அலி தலைமையில் குறித்த பிரதேசத்தில் தொல்பொருள் ஆய்வுகள் கடந்த மே மாதம் 2ஆம் திதி ஆரம்பிக்கப்பட்டது.


பூமியில் மறைந்திருக்கும் கலாசாரம் தொடர்பிலான ஆய்வின் ஈடுபடுவதனை நோக்கமாகக் கொண்டே இவ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் பல்வேறு வெளிக்கள தொழில்நுட்ப பயிற்சிக்காக கலந்துகொண்டுள்ளனர்.


ஆரிய காலத்தில் பெரிய நகரமாகக் காணப்பட்ட மோரா நகரே இக்கிராமம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதேவேளை இப்பிரதேச்தில் பழைமையான நாணயங்கள், சிற்பங்கள், ஆபரணங்கள் மேலும் பல பொருட்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.