Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
செவ்வாயில் திரவநிலையில் தண்ணீர் உள்ளது - நாசா அறிவிப்பு
2015-09-30 10:08:44

செவ்வாய் கிர­கத்தில் நீர் இருப்­ப­தற்­கான வலு­வான ஆதா­ரங்கள் கிடைத்­துள்­ள­தாக அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான நாசா தெரி­வித்­துள்­ளது.

 

செவ்வாய் கிர­கத்­திற்கு நாசா­வினால் அனுப்­பப்­பட்ட மார்ஸ் ரெக்­க­னைசன்ஸ் ஓர்­பிட்டர் (எம்.ஆர்.ஓ) எனும் விண்­ணு­லாவி மூலம், செவ்­வாயில் நீர் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக  வொஷிங்டன் டி.சி. நகரில் நேற்று­முன்­தினம் நடை­பெற்ற  செய்­தி­யாளர் மாநாட்டில் விஞ்­ஞா­னிகள்  தெரி­வித்­தனர்.

 

செவ்வாய்கிரக ஆராய்ச்­சியில் மிக முக்­கிய கண்­டு­பி­டிப்­பாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

 

“செவ்வாய் கிர­க­மா­னது கடந்த காலத்தில் நாம் எண்­ணி­யதைப் போல் வறண்ட கிர­க­மல்ல.

 

சில சூழ்­நி­லை­களில் கோடைகாலத்திலேனும் திரவ நிலை நீர் காணப்­ப­டு­கி­றது” என நாசாவின் கிர­க­வியல் விஞ்­ஞான பணிப்­பா­ள­ரான ஜிம் கிறீன் தெரி­வித்தார். 

 

இக்­கண்­டு­பி­டிப்­பா­னது, செவ்வாய் கிர­கத்­துக்­கான மனி தப் பயணத் திட்­டத்தை இல­கு­வாக்­கு­கி­றது என விண்­வெளி நிபு­ண­ரான ஜோன் குருன்ஸ்பீல்ட் கூறினார்.

 

செவ்வாய் கிர­கத்தின் சரி­வான தளங்­களில், காணப்­ப டும் கோடுகள் பேர்­கு­ளோ ரேட்ஸ் எனும் உப்பு கனிப்­பொ­ரு­ளினால் ஏற்­பட்ட இழை­வரிக் கோடு­க­ளாக இருக்­கலாம் என விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.  

 

செய்தியாளர் மாநாட்டில் நாசா விஞ்ஞானிகள் ஜோன் குருன்பீல்ட், ஜிம் கிறீன், மைக்கல் மேயர்

.....................................................................................................................................

 

இந்த உப்புக் கனிமம் நீர்­மூ­லக்­கூ­று­களைக் கொண்­டுள்­ள­தாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. 

 

செவ்வாய் கிர­கத்தின் வடக்கு அரைக்­கோ­ளத்தின் அரைப்­ப­குதி முன்னர் ஒரு காலத்தில் சமுத்­தி­ர­மாக காணப்­பட்­ட­தா­கவும் அதன் ஆழம் சுமார் 1.6 கிலோ­மீற்­ற­ருக்கு (1 மைல்) அதி­க­மாக இருந்­த­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நாசா தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

செவ்வாய் கிர­கத்தின் மேற்­ப­ரப்பின் கீழ் திர­வ­நிலை நீர் இருந்தால், பக்­ரீ­றியா மற்றும் நுண்­ணு­யிர்கள் வாழக்­கூ­டிய சூழல் அங்கு இருக்­கலாம் என விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர். 

 

 

பூமிக்கு அப்பால் உயி­ரி­னங்கள் உள்­ள­னவா என்­ப­தற்கு பதில் கூறும் நிலையில் நாம் இல்லை.

 

ஆனால், செவ்வாயில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்துசெவ்வாயில் இது குறித்து ஆராய்வதற்கு பொருத்தமான இடத்தை நாம் அடைந்துள்ளோம் என எண்ணுகிறேன்” என ஜிம் கிறீன் கூறினார். 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.