Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டேவிஸ் கிண்ண டென்னிஸ்: தாய்லாந்தை வெற்றிகொள்ளுமா இலங்கை?
2016-03-04 10:32:19

இவ் வருடத்துக்கான டேவிஸ் கிண்ண உலகக் குழு 2 ஆசியகடல்சூழ் பிராந்தியத்திற்குரிய முதலாம் சுற்று டென்னிஸ் போட்டியில் தாய்லாந்தை இன்று முதல் மூன்று தினங்களுக்கு இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

 

 

தாய்லாந்தை இதற்கு முன்னர் வெற்றிகொண்டிராத இலங்கை இம்முறை வெற்றிகொள்ளுமா? அல்லது அதன் தோல்வி தொடருமா ? என்பதற்கு இன்னும் இரண்டு தினங்களில் விடை கிடைக்கவுள்ளது.

 

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலாம் சுற்றுப் போட்டி தாய்லாந்தின் நொந்தாபூரி தேசிய டென்னிஸ் அபிவிருத்தி நிலைய அரங்கில் நடைபெறவுள்ளது.

 

இப் போட்டியை முன்னிட்டு இலங்கை டென்னிஸ் அணியில் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

சிரேஷ்ட வீரரும் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமுமான ஹர்ஷன கொடமான்ன, இலங்கையின் முதல்தர வீரர் தினேஷ்காந்தன் தங்கராஜா, வெகுவாக முன்னேறிவரும் ஷார்மல் திசாநாயக்க, இளம் வீரர் யசித்த டி சில்வா ஆகியோர் அணியில் இடம்பெறுகின்றனர்.

 

இவர்களில் ஹர்ஷன ஒற்றையர் மற்றும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களிலும் இரட்டையர் ஆட்டத்திலும் விளையாடுவது உறுதி.

 

இரட்டையர் ஆட்டத்தில் இவருடன் ஷார்மல் திசாநாயக்க ஜோடி சேருவார் என பெரிதும் நம்பப்படுகின்றது.

 

தினேஷ்காந்தன் தங்கராஜா பெரும்பாலும் ஒற்றையர் மற்றும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்.

 

இலங்கை அணியின் விளையாடாத அணித் தலைவராக ரொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

தாய்லாந்து அணியில் புரிவாத் சட்பட்ச்சரோன், ப்ருச்சியா இசாரோ, ரட்டிவட்டானா இரட்டை சகோதரர்களான சன்ச்சய மற்றும் சொன்ச்சாட் ஆகியோர் இடம்பெறுகின்றனர். முன்னாள் வீரர் பராடொன் ஸ்ரீசப்பன் விளையாடாத அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இன்றைய தினம் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களும் நாளைய தினம் இரட்டையர் ஆட்டமும் நடைபெறும். ஞாயிறன்று மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் இடம்பெறும்.

 

இதுவரை இரண்டு நாடுகளும் ஆறு தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவை அனைத்திலும் தாய்லாந்தே வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இரண்டு நாடுகளும் 2012இல் சந்தித்திருந்தன.

 

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதுடன் தோல்வியுறும் அணி தரமிறக்கலுக்கான தீர்மானமிக்க போட்டியில் விளையாடும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.