Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தான் அணிக்கு புதிய துடுப்பாட்டப் பயிற்றுநரை நியமிக்குமாறு ஹனிவ் முஹம்மத் வலியுறுத்தல்
2016-03-04 10:16:43

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்­பாட்டப் பயிற்­றுநர் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு பாகிஸ்தான் கிரிக்கெட்  சபை­யிடம் அந் நாட்டின் முன்னாள் துடுப்­பாட்ட விற்­பன்னர் ஹனிவ் முஹம்மத் (81) வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

 

அண்­மைக்­கா­ல­மாக பாகிஸ்தான் துடுப்­பாட்­டக்­கா­ரர்­களின் அசி­ரத்­தையை சுட்­டிக்­காட்­டியே அவர் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

தற்­போ­தைய அணி பயிற்­றுநர் வக்கார் யூனிஸூக்கு துடுப்­பாட்டப் பயிற்­சியை வழங்க முடி­யாது என்­பதால் புதிய துடுப்­பாட்டப் பயிற்­றுநர் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு அவர் கோரு­கின்றார்.

 

“துடுப்­பாட்டப் பயிற்­றுநர் பாகிஸ்­தா­னி­ய­ராக இருத்தல் அவ­சியம். அப்­போ­துதான் அவரால் வீரர்­களை சமா­ளிக்க முடியும்” என அவர் மேலும் தெரி­வித்தார்.

 

இந்­தி­யா­வு­ட­னான ஆசிய கிண்ண (இரு­பது 20) லீக் போட்­டியில் பாகிஸ்தான் துடுப்­பாட்ட வீரர்கள் பிர­கா­சிக்­கா­ததால் குறைந்த மொத்த எண்­ணிக்­கையை தக்­க­வைத்­துக் ­கொள்ள பந்­து­வீச்­சா­ளர்­களால் முடி­யாமல் போனது என அவர் குறிப்­பிட்டார்.

 

“முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்து 20 ஓவர்­க­ளையும் பாகிஸ்தான் தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் போனது துர­திர்ஷ்டம்” என்று அவர் தெரி­வித்தார்.

 

ஆரம்பத் துடுப்­பாட்­டத்தில் முஹம்மத் ஹவீ­சுக்குப் பதி­லாக குரம் மன்சூர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் நல­மாக இருந்­தி­ருக்கும் எனக் கூறிய ஹனிவ் முஹம்மத், ஹவீஸ் மூன்­றா­மி­லக்­கத்தில் பிரகா­சிக்­கக்­கூ­டி­யவர் என்றார்.

 

“ஷஹித் அவ்­றிடி ஒரு சிறந்த தலைவர். ஆனால் அவ­ரது துர­தி­ர்ஷ்டம் இந்­தி­யா­வு­ட­னான போட்­டியில் ரன் அவுட் ஆனார். அல்­லது அவர் கணி­ச­மான ஓட்­டங்­களைப் பெற்­றி­ருப்பார்” என்றார் ஹனிவ் முஹம்மத்.

 

1952 முதல் 1969 வரை பாகிஸ்தான் சார்­பாக 55 டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்த ஹனிவ் முஹம்மத், 12 சதங்கள், 15 அரைச் சதங்கள் அடங்­க­லாக 3,915 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றி­ருந்தார்.

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக பிறிஜ்­ட­வுனில் 1958இல் நடை­பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் அவர் பெற்ற 337 ஓட்­டங்­களே ஓர் இன்­னிங்ஸில் அவர் பெற்ற அதி­கூ­டிய எண்­ணிக்­கை­யாகும்.

 

அப் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் குவித்த 579 ஓட்­டங்­க­ளுக்கு பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் 106 ஓட்­டங்­க­ளுக்கு சரிந்­தது.

 

ஆனால் இரண்­டா­வது இன்­னிங்ஸில் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்­தா­னுக்கு ஹனிவ் முஹம்­ம­துவின் 337 ஓட்­டங்கள் பெரிதும் கைகொ­டுத்­த­துடன் டெஸ்ட் போட்­டியும் வெற்­றி­ தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

 

இதன் மூலம் எத்­த­கைய அழுத்­தத்­திற்கு மத்­தியில் தன்னால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்­பதை அவர் நிரூ­பித்­தி­ருந்தார்.

 

பாகிஸ்தான் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 8 விக்­கெட்­களை இழந்து 657 ஓட்­டங்­களைப் பெற்று துடுப்­பாட்­டத்தை நிறுத்­திக்­கொண்­டி­ருந்­தது.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

 

ஹனிவ் முஹம்மத், அவரது சகோதரர்களான முஸ்தாக், சாதிக் ஆகிய மூவரும் ஏககாலத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றவர்கள் என்பது விசேட அம்சமாகும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.