Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தான் அணியில் நீடிப்பதற்கு அவ்றிடி தகுதியற்றவர் - ஜாவேட் மியண்டாட்
2016-03-03 11:52:01

இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஆசிய கிண்ண (இரு­பது 20) கிரிக்கெட் லீக் போட்­டியில் பாகிஸ்தான் அடைந்த தோல்­விக்கு அணித் தலைவர் அவ்­றி­டிதான் காரணம் என பாகிஸ்­தானின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஜாவேட் மியண்டாட் கூறி­யுள்ளார்.

 

அப் போட்­டியில் பாகிஸ்தான் அணி­யினர் மிக மோச­மாக விளை­யாடி இந்­தி­யா­விடம் சர­ண­டைந்­த­தாக அவர் விமர்­சித்­துள்ளார்.

 

‘‘திறமை இல்­லாத ஒரு­வரை எவ்­வாறு அணியில் வைத்­தி­ருக்க முடியும்? நீண்ட காலத்­திற்கு முன்­னரே அவ்­றிடி அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டவர்’’ என தனியார் செய்தி ஊடகம் ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

 

‘‘திற­மை­யற்­றவர் என விப­ரிக்­கப்­பட்ட ஒரு­வரின் தலை­மையில் எவ்­வாறு வெற்றி பெறலாம் என எதிர்­பார்க்க முடியும்? என மியண்டாட் கேள்வி எழுப்­பினார்.

 

பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் பார­பட்சம், பக்க சார்­புகள் இருப்­பதன் கார­ண­மாக தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்லை என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

 

கிரிக்கெட் அரங்கில் என்ன நிகழ்­கின்­றது என்­ப­தையோ, கிரிக்­கெட்­டிற்கு என்ன நேர்­கின்­றது என்­ப­தையோ பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கண்­டு­கொள்­ளாமல் இருப்­ப­தாக மியண்டாட் தெரி­வித்தார்.

 

தெரிவுக் குழு­வி­னரும் திற­மையை வெளிப்­ப­டுத்­தாத கிரிக்கெட் வீரர்­களும் நீக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் பல வீரர்­களின் கிரிக்கெட் ஆர்­வமே இல்லை எனவும் அவர் கூறினார்.

 

விராத் கோஹ்லி 70 முதல் 80 வீதம் வரை திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­வ­தாக குறிப்பிட்ட மியண்டாட், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மிக அரிதாகவே பிரகாசிக்கின்றனர் என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.