Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தான் எதிர் சீனா டேவிஸ் கிண்ண டென்னிஸ்; முதல் தடவையாக இலங்கை அரங்கேற்றுகின்றது
2016-03-03 11:30:35

(நெவில் அன்­தனி)

 

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்­டி­களில் முதல் தட­வை­யாக ஆசிய கடல்சூழ் பிராந்­தி­யத்­திற்­கான முதலாம் பிரி­வுக்கு பத்து வரு­டங்­களின் பின்னர் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ள பாகிஸ்தான், இவ்வார இறு­தியில் சீனாவை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

பாகிஸ்தான் டென்னிஸ் சங்­கத் தின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய இலங்கை டென்னிஸ் சங்கம் இப் போட்­டியை கொழும்பில் நடத்­த­வுள்ளது.

 

 

உலக டென்னிஸ் அரங்கில் இரண்டு பலம்­வாய்ந்த நாடுகள் நடு­நி­லை­யான இலங்­கையில் போட்­டி­யி­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். 

 

பாகிஸ்­தா­னுக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான போட்டி அட்­ட­வணை இலங்கை டென்னிஸ் சங்க மண்­ட­பத் தில் நேற்­றுக்­காலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.

 

இதன் பிர­காரம் வெள்­ளி­யன்று இரண்டு ஒற்­றையர் ஆட்­டங்­களும் சனிக்­கி­ழ­மை­யன்று இரட்­டையர் ஆட்­டமும் ஞாயி­றன்று இரண்டு மாற்று ஒற்­றையர் ஆட்­டங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

கடந்த வருடம் ஆசிய கடல்சூழ் பிராந்­தி­யத்­திற்­கான இரண்டாம் குழு­விற்­கு­ரிய முதலாம் சுற்றில் இலங்­கையை பாகிஸ்தான் வெற்­றி­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அந்த வெற்றி அணியில் இடம்­பெற்ற வீரர்­களே இம்­முறை சீனாவை முதல் சுற்றில் எதிர்­கொள்­கின்­றனர்.

 

பாகிஸ்தான் அணியில் அய்சாம் குரேஷி (தலைவர்), அக்கீல் கான், முஹம்மத் அபித், யசிர் கான் ஆகி­யோரும் சீன அணியில் டி வு, ஸே ஸங், யன் பய், மாஓ சின் கொங் ஆகி­யோரும் இடம்பெறுகின்றனர். 

 

சீனாவின் விளையாடாத அணித் தலை வராக (Non-Playing Captain ) வெய் ஜியாங் செயற்படுகின்றார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.