Friday  28 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
அச்சம் என்பது மடமையடா ட்ரெய்லர்-2
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
இமாலய முதலமைச்சரின் செயல் கவலை தருகிறது; இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறுகின்றார்
2016-03-03 10:48:16

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் தாரம்­ச­லாவில் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யின்­போது பாது­காப்பு வழங்­கு­வது சிர­ம­மான காரியம் என இமா­லய பிர­தேச முத­ல­மைச்சர் கடி­த­மூலம் அறி­வித்­தி­ருப்­பது கவலை அளிப்­ப­தாக இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை செய­லாளர் அநுராக் தக்கூர் தெரி­வித்­துள்ளார். 

 

 

 

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் நடை­பெ­ற­வுள்ள லீக் போட்­டிக்கு பாது­காப்பு அளிக்க முடி­யாது என மத்­திய உள்­துறை அமைச்­சுக்கு எழுத்­து­மூலம் வட மாநில காங்­கிரஸ் அரசின் தலை­வ­ராக செயற்­படும் முத­ல­மைச்சர் விர்­பத்­தரா சிங் அறி­வித்­துள்ளார்.

 

பாகிஸ்தான் தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலில் பலி­யான இந்­திய இரா­ணுவ வீரர்­களின் நினை­விடம் தாரம்­சலா மைதா­னத்­திற்கு அரு­கி­லேயே அமைந்­துள்­ளது.

 

அதன் கார­ண­மாக பலி­யான இரா­ணுவ வீரர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­களின் உணர்­வு­களை இப் போட்டி புண்­ப­டுத்தும் என அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 

எனவே இப் போட்டி அங்கு நடை­பெ­று­வதை நமது இரா­ணுவ வீரர்கள் விரும்­பா­விட்டால் அதனை இமா­லய பிர­தேச கிரிக்கெட் சங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என முத­ல­மைச்சர் தனது கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

 

உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் எட்டு போட்­டிகள் தாரம்­ச­லாவில் நடை­பெ­ற­வுள்­ளன. அவற்றில் அவுஸ்­தி­ரேலி­யா­வுக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் 18ஆம் திக­தியும் இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் 19ஆம் திக­தியும் நடை­பெறும் போட்­டிகள் முக்­கியம் பெறு­கின்­றன.

 

தாரம்­ச­லாவில் போட்­டிகள் நடத்­தப்­ப­டு­வ­தற்கு இமா­லய பிர­தேசம் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. ஆனால் பாகிஸ்தான் அங்கு விளை­யா­டு­வ­தையே இமா­லய பிர­தேசம் எதிர்­க்கின்­றது என சிங் தெரி­வித்­துள்ளார்.

 

எவ்­வா­றா­யினும் விளை­யாட்­டுத்­து­றையை அர­சி­ய­லாக்­கக்­ கூ­டாது என தக்கூர் குறிப்­பிட்­டுள்ளார்.

 

‘‘சிங் தவ­றான போக்­குடன் செயல்­ப­டு­கின்றார். விளை­யாட்­டுத்­து­றை­யையும் அர­சி­ய­லையும் கலப்­பது பொருத்­த­மற்­றது’’ என ஆளும் பார­தீய ஜனதா கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அநுராக் தக்கூர் தெரி­வித்­துள்ளார்.

 

‘‘உலக இரு­பது 20 போட்­டி­க­ளுக்­கான மைதா­னங்கள் ஒரு வரு­டத்­திற்கு முன்பே தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­டன. இதன் அடிப்­ப­டை­யி­லேயே இர­சி­கர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் தங்­க­ளது முன்­ப­தி­வு­களை செய்­கின்­றனர்.

 

அவர்­க­ளுக்கு சகல வச­தி­க­ளையும் செய்­து­கொ­டுக்க நாங்கள் உறுதி பூண்­டுள்ளோம்.

 

கடைசி நேரத்தில் பாது­காப்பு வழங்க முடி­யாது எனக் கூறு­வ­தா­வது மாநி­லத்­திற்கும் நாட்­டிற்கு அவப்­பெ­ய­ரையே தேடிக்­கொ­டுக்கும். அர­சியல் தலை­யீடு இருக்­கக்­கூ­டாது என நான் கரு­து­கின்றேன்’’ என தக்கூர் மேலும் கூறி­யுள்ளார்.

 

‘‘அசாம் மாநி­லத்­தினால் தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவை நடத்த முடி­யு­மானால், நூற்­றுக்கும் மேற்­பட்ட பாகிஸ்­தா­னிய வீர, வீராங்­க­னை­களை பங்குபற்ற செய்ய முடியுமானால் இமாலய அரசுக்கு உலக இருபது 20 போட்டியை ஏன் நடத்தமுடியாது? அரசியல் எதுவும் இதில் இருக்கக்கூடாது என நான் கருதுகின்றேன்.

 

நாட்டின் தற்பெருமை காக்கப்படவேண்டும்’’ என இமாலய மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ப்ரேம் குமார் தமுலின் மகனான தக்கூர் குறிப்பிட்டார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.