Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியா
2016-03-03 10:29:28

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் மூன்­றா­வது தொடர்ச்­சி­யான அரைச் சதத்தை விராத் கோஹ்லி குவிக்க, 5 விக்­கெட்­களால் வெற்­றி­யீட்­டிய இந்­தியா, ஆசிய கிண்ண இறுதி ஆட்­டத்தில் விளை­யாடும் தகு­தியைப் பெற்­றுக்­கொண்­டது.

 

மிர்­பூரில் திங்­க­ளன்று நடை­பெற்ற ஆசிய கிண்ண (இரு­பது 20) லீக் போட்­டியில் இலங்­கையை 139 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­திய இந்­தியா 16 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களை இழந்து தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்­தது. 

 

ஆனால் நான்­கா­வது ஓவரில் ஆடு­களம் நுழைந்த விராத் கோஹ்லி, மூன்­றா­வது விக்­கெட்டில் சுரேஷ் ரெய்­னா­வுடன் 54 ஓட்­டங்­க­ளையும் நான்­கா­வது விக்­கெட்டில் யுவ்ராஜ் சிங்­குடன் 51 ஓட்­டங்­க­ளையும் பகிர்ந்து இந்­தி­யாவின் வெற்­றியை இல­கு­வாக்­கினார்.

 

இப் போட்­டியில் இலங்கை துடுப்­பாட்­டக்­கா­ரர்­களின் கவனக் குறைவு, தவ­றான அடி தெரி­வுகள் ஆகியன அதன் துடுப்­பாட்ட சரி­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.

 

அது­மட்­டு­மல்­லாமல் துடுப்­பாட்ட வரி­சையில் செய்­யப்­பட்ட மாற்­றங்­களும் இலங்­கைக்கு பாத­க­மாக அமைந்­தது. சாமர கப்­பு­கெ­தர, மிலிந்த சிறி­வர்­தன ஆகிய இரு­வரும் ஐந்­தா­வது விக்­கெட்டில் பகிர்ந்த 43 ஓட்­டங்­களே இலங்கை அணி 100 ஓட்­டங்­களைக் கடக்க உத­வி­யது.

 

பின்­வ­ரி­சையில் திசர பெரேரா, நுவன் குல­சே­கர ஆகி­யோரும் இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்று இலங்கை அணியின் மொத்த எண்­ணிக்­கைக்கு ஓர­ளவு வலு சேர்த்­தனர்.

 

முன்­ன­தாக டில்ஷான், மெத்யூஸ் ஆகி­யோரும் இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்ற போதிலும் அவர்­களால் நீடித்­தி­ருக்க முடி­யாமல் போனது.

 

139 ஓட்­டங்­களை வெற்றி இலக்­கா­கக்­கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தி­யாவின் மொத்த எண்­ணிக்கை நான்­கா­வது ஓவரில் 2 விக்கெட் இழப்­புக்கு 16 ஓட்­டங்­க­ளாக இருந்­தது.

 

தொடர்ந்து 12ஆவது ஓவரில் சுரேஷ் ரெய்னா ஆட்­ட­மி­ழந்­த­போது இந்­தியா 3 விக்கெட் இழப்­புக்கு 70 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

அதா­வது எஞ்­சிய 53 பந்­து­களில் இந்­திய அணியின் வெற்­றிக்கு மேலும் 69 ஓட்­டங்கள் தேவைப்­பட்­டது.

 

ஆனால் 13ஆவது ஓவரில் ரங்­கன ஹேரத்தின் பந்­து­வீச்சில் யுவ்ராஜ் சிங் அடித்த அடுத்­த­டுத்த இரண்டு சிக்­சர்கள் இந்­தி­யா­வுக்கு தெம்­பூட்­டு­வ­தாக அமைந்­த­துடன் அதன் பின்னர் ஓட்­டங்கள் சுல­ப­மாகப் பெறப்­பட்டு வெற்றி இலக்கைக் கடந்­தது.

 

தோனி மைல்கல்


இப் போட்­டியில் மிலிந்த சிறி­வர்­த­னவின் பந்­து­வீச்சில் அபார சிக்சர் ஒன்றை விளா­சிய தோனி, சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 200ஆவது சிக்­சரைப் பதிவு செய்தார்.

 

இதன் மூலம் 200 சிக்­சர்­களை விளா­சிய முத­லா­வது கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெரு­மையை தொனி பெற்­றுக்­கொண்டார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்:


இலங்கை 20 ஓவர்­களில் 138 க்கு 9 விக். (சாமர கப்­பு­கெ­தர 30, மிலிந்த சிறி­வர்­தன 22, திலக்­க­ரட்ன டில்ஷான் 18, ஏஞ்­சலோ மெத்யூஸ் 18, திசர பெரேரா 17, நுவன் குலசேகர 13, அஷ்வின் 26 க்கு 2 விக்., பாண்டியா 26 க்கு 2 விக்., பும்ரா 27 க்கு 2 விக்.)


இந்தியா 19.2 ஓவர்களில் 142 க்கு 5 விக். (விராத் கோஹ்லி 56 ஆ.இ., யுவ்ராஜ் சிங் 35, சுரேஷ் ரெய்னா 25)


ஆட்டநாயகன்:  விராத் கோஹ்லி.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.