Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் குரோ 53 ஆவது வயதில் இன்று காலமானார்
2016-03-03 09:41:13

நியூ­ஸி­லாந்தின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலை­வரும், எழுத்­தாளர், வர்­ண­னை­யாளர் மற்றும் ஆலோ­ச­க­ரு­மான மார்ட்டின் குரோ, இன்று காலை தனது 53 ஆவது வயதில் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்தார்.

 

 

நியூ­ஸி­லாந்தின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலை­வரும், எழுத்­தாளர், வர்­ண­னை­யாளர் மற்றும் ஆலோ­ச­க­ரு­மான மார்ட்டின் குரோ தனது 53 ஆவது வயதில் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்தார்.

 

2012 இல் நீர்ச் சுரப்பிப் புற்­று­நோயால் பீடிக்­கப்­பட்ட மார்ட்டின் குறோவின் உயிர் இன்று ­காலை பிரிந்­த­தாக ஆழாத்­து­யரில் ஆழ்ந்­துள்ள அவ­ரது குடும்­பத்­தினர் அறி­வித்­தனர்.

 

கடந்த சில மாதங்­க­ளாக நோய் முற்­றி­யதன் கார­ண­மாக பொது நிகழ்ச்­சி­களில் கலந்து கொள்­வதை அவர் தவிர்த்­துக்­கொண்­டி­ருந்தார்.

 

நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் வர­லாற்றில் அதி சிறந்த துடுப்­பாட் டக்காரர் எனக் கரு­தப்­பட்ட மார்ட்டின் குரோ, தனது 19 ஆவது வயதில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக 1982 இல் நடை­பெற்ற போட்டியின் மூலம் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்­து­வைத்தார்.

 

அதன் பின்னர் வேக­மாக முன்­னே­றிய மார்ட் டின் குரோ விரைவில் அதி சிறந்த துடுப்­பாட்­டக்­கா­ர­ரானர்.

 

17 டெஸ்ட் சதங்­களைப் பூர்த்­தி­செய்த அவர், வெலிங்­டனில் இலங்­கைக்கு எதி­ராக 1991 இல் நடை­பெற்ற போட்­டியில் 299 ஓட்­டங்­களைப் பெற்று நியூ­ஸி­லாந்து சார்­பாக தனி­ந­ப­ருக்­கான அதி­கூடிய எண்­ணிக்­கையைப் பதிவு செய்­தி­ருந்தார்.

 

அவ­ரது இந்த சாத­னையை இந்­தி­யா­வுக்கு எதி­ராக அதே பேசின் ரிசேர்வ் அரங்கில் ப்றெண்டன் மெக்­கலம் (302) அந்த எண்­ணிக்­கையைக் கடந்­தி­ருந்தார்.

 

மார்ட்டின் குரேவின் புத்­தாக்­க மும் உத்­வே­கமும் நிறைந்த கிரிக்கெட் காலம் 1992 உலகக் கிண்ணப் போட்­டி­க­ளின்­போது பதி­வா­னது. 

 

தனக்கு கிடைத்த சுமா­ரான நியூ­ஸி­லாந்து அணியை அரை இறுதி ஆட்டம் வரை வழி­ந­டத்தி கிரிக்கெட் உலகைப் பிர­மிக்க வைத்த பெருமை மார்ட்டின் குரோவை சாரு­கின்­றது.

 

அரை இறு­தியில் நியூ­ஸி­லாந்தை வீழ்த்­திய இம்ரான் கான் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தை வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னாகி­யி­ருந்­தது.

 

அப் போட்­டி­களின் ஆரம்பப் போட்­டியில் மார்ட்டின் குரோ கடைப்­பி­டித்த அணு­கு­மு­றைகள் அப்­போ­தைய பலம்­வாய்ந்த அணி­யான அவுஸ்­தி­ரே­லி­யாவை மண்­டி­யிட வைத்­தது.

 

1992 ஆம் ஆண்டின் உலக கிண்ணத் தொடரில் அணித்தலைவர்கள்: ஸிம்பாப்வேயின் டேவிட் ஹுட்டன், தெ.ஆபிரிக்காவின் கெப்லர் வெசல்ஸ், இந்தியாவின் எம். அஸாருதீன், மே.இ.தீவுகளின் ரிச்சி ரிச்சர்ட்ஸன், இலங்கை அணித்தலைவர் அரவிந்த டி சில்வா,  அவுஸ்திரேலியாவின்; அலன் போர்டர், இங்கிலாந்தின் கிரஹம் கூச், பாகிஸ்தானின் இம்ரான் கான் ஆகியோருடன் நியூஸிலாந்;து அணித்தலைவர் மார்ட்டின் குரோ (அமர்ந்திருப்பவர் இடது).


 

முழங்­காலில் ஏற்­பட்ட உபாதை கார­ண­மாக 33 ஆவது வயதில் கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து ஓய்வுபெற்ற அவர், அதன் பின்னர் தொலைக்­காட்சி வர்­ண­னை­யா­ள­ராகப் பணி­யாற்­றினார்.

 

மார்ட்டின் குரோ அறி­மு­கப்­ப­டுத்த விளைந்த கிரிக் கெட் மெக்ஸ் என்ற கிரிக்கெட் போட்­டியே இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்கு வித்­திட்­டதாம்.

 

77 டெஸ்ட் போட்­டி­களில் 5,444 ஓட்­டங்­க­ளையும் 143 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4 சதங்கள் அடங்கலாக 4,704 ஓட்டங்களையும் மார்ட்டின் குரோ பெற்றார். 

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போற்றற்கரிய வீரர்கள் பட்டியலில் 2015 இல் மார்ட்டின் குரோ உள் ளடக்கப்பட்டிருந்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.