Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘‘பொறுமை காக்க பொருத்தமான நேரமல்ல இது’’ - ஏஞ்சலோ மெத்யூஸ் கூறுகின்றார்
2016-03-03 09:39:37

இந்­தி­யா­வு­ட­னான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்­டி யில் தோல்வியடைந்த பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது ஏஞ்­சலோ மெத்யூஸ் சோர்­வ­டைந்­த­வ­ராகக் காணப்­பட்­ட­துடன் இது பொறுமை காக்க பொருத்­த­மான நேர­மல்ல எனவும் குறிப்­பிட்டார்.

 

இலங்­கையின் மோச­மான துடுப்­பாட்­டமே வீழ்ச்­சிக்கு காரணம் என மெத்யூஸ் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் குறிப்­பிட்டார்.

 

இன்­னிங்ஸின் கடைசிக் கட்­டத்தில் வேக­மாக பெறப்­பட்ட ஓட்­டங்­களே இலங்­கையின் மொத்த எண்­ணிக்­கையை 9 விக்கெட் இழப்­புக்கு 138 ஓட்­டங்­க­ளாக உயர்த்­தி­யது.

 

தினேஷ் சந்­திமால், திலக்­க­ரட்ன டில்ஷான் ஆகியோர் பிர­கா­சிக்­க­வில்லை. சாமர கப்­பு­கெ­த­ரவின் ஆரம்பம் சிறப்­பாக அமைந்­த­போ­திலும் பின்னர் அவர் விக்­கெட்டைத் தாரை­வார்த்தார்.

 

பின்­வ­ரி­சையில் திசர பேரேரா அதி­ர­டியில் இறங்­கி­ய­போ­திலும் மத்­தி­யஸ்­தரின் தவ­றான ஸ்டம்ப் முறை தீர்ப்பால் களம் விட்­ட­க­ல­நே­ரிட்­டது.  இந்தத் தீர்ப்பு இலங்கை அணியின் மொத்த எண்­ணிக்­கையில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது எனலாம்.

 

இந்தத் தோல்வி குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த ஏஞ்­சலோ மெத்யூஸ், ‘‘நான் ஒரே விட­யத்தை மீண்டும் மீண்டும் கூறு­கின்றேன். இங்கு எமது சிறந்த அணியே வந்­துள்­ளது.

 

ஆனால் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சிரேஷ்ட வீரர்­க­ளி­லேயே நாங்கள் எந்­நே­ரமும்  தங்­கி­யி­ருக்க பார்க்­கின்றோம். சிரேஷ்ட வீரர்கள் பிர ­கா­சிக்க தவ­றும்­போ­தெல்லாம் எமது அணி தடு­மா­று­கின்­றது.

 

ஆசிய கிண்ணம், உலகக் கிண்ணம் போன்ற போட்­டி­க­ளின்­போது அணியில் அதி­க­ள­வான சிரேஷ்ட வீரர்கள் இருக்­க­ வேண்டும். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக நாங்கள் பிர­கா­சிக்­க­வில்லை.

 

இளம் வீரர்கள் பிர­கா­சிப்­ப­தற்கு சில காலம் செல்லும். எனவே பொறு­மை ­காக்­க­ வேண்டும். ஆனால் இது பொறு­மை ­காப்­ப­தற்கு பொருத்­த­மான நேர­மல்ல’’ என்றார் மெத்யூஸ்.

 

‘‘முத­லா­வ­தாக சிரேஷ்ட வீரர்கள் மட்டும் பிர­கா­சித்தால் போது­மா­ன­தாக அமை­யாது. தெரி­வா­­ளர்­களால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அனை­வரும் தத்­த­மது ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­த­வேண்டும்.

 

இது ஒரு மிகப் பெரிய சுற்­றுப்­போட்டி. இங்­கு­வந்து பயில முடி­யாது. மாறாக திற­மையை வெளிப்­ப­டுத்­த­ வேண்டும். இலங்கை கிரிக்கெட் அணிக்கு டில்ஷான் சிறந்த சேவை­யாற்­றி­யள்ளார்.

 

இப்­போது பெரும் மாற்றம் தேவை என நான் கரு­த­வில்லை. நான் வெறும் பதில் தலைவன். தெரி­வா­ளர்­களும் அணித் தலை­வரும் என்ன நினைக்­கின்­றார்கள் என்­பது எனக்கு உண்­மையில் தெரி­யாது.

 

எனினும் பொறு­மை ­காக்­கு­மாறு கோரும் அதே­ வேளை அடுத்த போட்­டியில் எமது துடுப்­பாட்டம் ஜொலிக்கும் என நான் நம்­பு­கின்றேன்’’ என மெத்யூஸ் மேலும் தெரி­வித்தார்.

 

இலங்கை அணி­யி­னரின் நம்­பிக்கை குறைந்­துள்­ளது என்­பதையும் மெத்யூஸ் சுட்­டிக்­காட்­டினார்.

 

‘‘நம்­பிக்­கையும் உற்­சா­கமும் குறைந்தால் பாதிப்புதான் ஏற்படும். தொடர்ந்து தோல்விகளைத் தழுவினால் அதனை ஜீரணிப்பது இலகுவல்ல. எனவே உலக இருபது 20 போட்டி அண்மிக்கும் நிலையில் குறைகளை நிவர்த்தி செய்து திறமையை வெளிப்படுத்த முழுஅளவில் முயற்சிக்க வேண்டும்’’ என்றார் ஏஞ்சலோ மெத்யூஸ்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.