Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புத்தளம் விம்பிள்டன் கழகத்தை தில்லையடி நியூ பிரண்ட்ஸ் கழகம் வென்றது
2016-03-02 21:24:25

(முஹம்­மது சனூன்)

 

புத்­தளம் கால்­பந்­தாட்ட லீக் நடத்தி வரும் ட்ரகன்ஸ் வெற்­றிக்­கிண்ண கால்­பந்­தாட்ட தொடரின் போட்­டி­­யொன்றில், புத்­தளம் விம்­பிள்டன் கழ­கத்தை தில்­லை­யடி நியூ பிரண்ட்ஸ் கழகம் 1–0 கோல் விகி­தத்தில் வெற்றி பெற்­றுள்­ளது.

 

புத்­தளம் ஸாஹிரா தேசிய கல்­லூரி மைதா­னத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை இப்­போட்டி நடை­பெற்­றது.

 

 

 

புத்­த­ளத்தின் பிர­ப­ல­மான லிவர்பூல் அணி­யினை கடந்த வாரம்  தோற்­க­டித்த விம்­பிள்டன் கழகம், சில தினங்­களில்  தில்­லை­யடி நியூ பிரண்ட்ஸ் அணி­யிடம் வீழ்ந்­துள்­ளது.

 

இப் போட்டி ஆரம்­பித்த நிமி­டத்­தி­லி­ருந்து இரு அணி­களும் தமது திற­மை­களை மைதா­னத்தில் வெளிக்­காட்­டின. இடை­வே­ளைக்கு முன்னர் இரு அணி­களும் எவ்­வித கோல்­க­ளையும் பெற­வில்லை.

 

இடை­வே­ளைக்கு பின்னர் தில்­லை­யடி நியூ பிரண்ட்ஸ் அணிக்கு கிடைத்த பெனல்டி உதை ஒன்­றினை அவ் அணியின் வீரர் எப்.பர்மான் கோல் ஆக்­கினார்.  அந்த ஒரு  கோல் அவ்­வ­ணியின் வெற்றி கோலாக அமைந்­தது. 

 

போட்­டியின் கடைசி 15  நிமி­டங்­களில் விம்­பிள்­ட­னுக்கு கிடைக்­கப்­பெற்ற 31 ப்ரீ கிக் மற்றும் கோனர் கிக்கள் கோல் கம்­பத்தில் பட்டு தெரித்­தமை மற்றும் நியூ பிரண்ட்ஸ் அணியின் கோல்  காப்­பாளர் ஹிஜாஸ் அஹ­மதின் அபார திற­மையால் தடுத்து நிறுத்­தப்­பட்­டன.

 

இப்­போட்­டியில் விம்­பிள்டன் அணி தோல்­வியை தழு­வி­னாலும் மொத்­த­மாக 6 புள்­ளி­க­ளோடு இத்­தொ­டரின் நோக் அவுட் சுற்­றுக்குள் அக்­க­ழகம் பிர­வே­சித்­துள்­ளது.

 

 

நியூ பிரண்ட்ஸ் அணி இப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற போதிலும் 3 புள்­ளி­களை மாத்­திரம் பெற்று நொக் அவுட் சுற்­றுக்குள் பிர­வே­சிக்க முடி­யாமல் தொட­ரி­லி­ருந்து விடை பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

மேற்­படி போட்­டிக்கு நடு­வர்­க­ளாக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர் எஸ்.ஆர்.எம். ஆஸாத், எம்.எஸ். இனாஸ் மற்றும் ஏ.எம். சபீக் ஆகியோர் கடமையாற்றினர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.