Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆசிய கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணியை 5 விக்கெட்களால் வென்றது இந்தியா
2016-03-01 22:29:06

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களால் வென்றது.

 

பங்களாதேஷின் மீர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களைப் பெற்றது.

 

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்புச் செய்யத் தீர்மானித்தது.


அதன்பின் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறியது. தினேஷ் சந்திமால் 4 ஓட்டங்களுடனும் ஷெஹான் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

 

பின்னர், சாமர கப்புகெதர 32 பந்துகளில் 30 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 17 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

 

 

சாமர கப்புகெதர துடுப்பெடுத்தாடுகிறார்.


 

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 19 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை வீரர்  திசர பெரேரா 6 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சர்ச்சைக்குரிய விதமாக ஆட்டமிழந்தார்.  நுவன் குலசேகர 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றார்.

 

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்நதிரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  ஜஸ்பிரிட் பம்ராஹ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி இந்திய அணி  16 ஓட்டங்களுக்குள் முதல் இரு விக்கெட்களை இழந்தது.   எனினும் விராத் கோஹ்லி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

 

யுவ்ராஜ் சிங் 18 பந்துகளில் 35 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா  26 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். 

 

அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி 4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களைப் பெற்றார்.  இதன் மூலம் 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது இந்திய அணி.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் நுவன் குலசேகர 21 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களை வீழ்த்தினார்.  இப்போட்டியின் ஆட்டநாயகனாக கோஹ்லி தெரிவானார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
Nethra2016-03-02 10:20:54
It is high time the International cricket board should take stern action against the impairs make big blunders giving out to Tissara Perera which cost the Sri Lanka team heavily. Please sack them.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.