Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கண்டி கழகத்துக்கு 19ஆவது லீக் சம்பியன் பட்டம்
2016-03-01 11:28:46

இலங்கை றக்­பி ­கால்­பந்­தாட்ட ஒன்­றி­யத்­தினால் நடத்­தப்­பட்ட 2015 – 2016 பரு­வ கா­லத்­திற்­கான டயலொக் றக்பி லீக் போட்­டியில் கண்டி விளை­யாட்டுக் கழகம் முடி­சூடா மன்­னர்கள் என்­பதை மீண்டும் நிரூ­பித்­தது.

 

 

ஹெவ்லொக்ஸ் கழ­கத்­திற்கு எதி­ராக நித்­த­வ­ளையில் நேற்­று­ முன்­தினம் மாலை நடை­பெற்ற கடைசி லீக் போட்­டியில் 27 – 12 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­ பெற்ற கண்டி விளை­யாட்டுக் கழகம் ஒரு போட்­டி­யில்­தானும் தோல்வி அடை­யாத சம்­பி­ய­னா­னது.

 

பிர­தான றக்பி கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான முதல்­தர றக்பி லீக் போட்­டி­களில் கண்டி கழகம் சம்­பி­ய­னா­னது இது 19 ஆவது தட­வை­யாகும். முதல் சுற்று, மற்றும் இரண்டாம் சுற்­று­களைக் கொண்ட இந்த றக்பி லீக் போட்­டிகள் சுமார் மூன்­றரை மாதங்கள் நீடித்­தது.

 

 

ஒரு வாரத்­திற்கு முன்னர் கடற்­ப­டையை வெற்­றி­கொண்­டதன் மூலம் சம்­பியன் பட்­டத்தை உறுதி செய்­து­கொண்ட கண்டி விளை­யாட்டுக் கழகம், கடைசி லீக் போட்­டியில் ஹெவ்லொக்ஸ் கழ­கத்­திடம் பாரிய சவால் எத­னையும் எதிர்­கொள்­ளாமல் வெற்­றி ­கொண்­டது.

 

இதன்மூலம் தோல்வி அடை­யாத ஒரே ஒரு அணி என்ற பெரு­மையை கண்டி கழகம் பெற்­றுக்­கொண்­டது. இப் போட்­டி இடை­வே­ளை­யின்­ போது கண்டி கழகம் 10 க்கு 5 என முன்­னி­லையில் இருந்­தது.

 

கண்டி கழகம் சார்­பாக புவ­னேக்க உதங்­க­முவ, நைஜல் ரத்­வத்தே, றிச்சர்ட் தர்­ம­பால, விஷ்­வா­மித்ர ஜய­சிங்க, திலின விஜே­சிங்க ஆகியோர் தலா ஒரு ட்ரையை வைத்­தனர். 

 

ஒரு ட்ரைக்­கான மேல­திகப் புள்­ளி­களை நைஜல் ரத்­வத்தே பெற்­றுக்­கொ­டுத்தார். ஹெவ்லொக்ஸ் கழகம் சார்­பாக துஷ்­மன்த ப்ரிய­தர்­ஷன, கெவின் டிக்சன் ஆகியோர் ட்ரைகளை வதைத்ததுடன் ஒரு ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை ரிம்ஸி ஜமால்தீன் பெற்றுக்கொடுத்தார்.


(பட உதவி: திபப்பரெ.கொம்)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.