Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கை – ஜேர்மனி நட்புறவு கால்பந்தாட்டம்
2016-03-01 10:21:01

(நெவில் அன்தனி)


இலங்கைக்கு வருகைதந்த ஜேர்மனியின் ப்ரோமெட்லின்க் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரிகளும் இணைந்து இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணியினருடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினர்.

 

 

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

 

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப் போட்டியில் ஜேர்மன் தூதரகத்தின் பிரதி தூதுவர் மைக்கல் டோர்மனும் பங்குபற்றி சிறப்பித்தார்.

 

 

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டதுடன் இரண்டு அணியினரும் அவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். 

 

 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா, செயலாளர் அன்டன் பாலேந்த்ரா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

 

இப் போட்டியில் இலங்கையின் முன்னாள் வீரர்களைக் கொண்ட அணி 5 க்கு 0 என வெற்றி பெற்றது. கசுன் ஜயசூரிய (2), ஈ. பி. சன்ன, கிருஷான்த அபேசேகர, எம். என். எம். இஸதீன் ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.