Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவரது கருத்து நகைப்புக்குரியது என்கிறார் மஹேல ஜயவர்தன
2016-02-29 12:22:59

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்­பான தக­வல்­களை அறிந்­து­கொள்­வ­தற்கு இங்­கி­லாந்து தன்னை அமர்த்­த­வில்லை. அவர்­க­ளிடம் பகுப்­பாய்­வா­ளர்­களும் பயிற்­று­நர்களும் இருக்­கின்­றார்கள் என இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன கூறியுள்ளார்.

 

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் ஆலோ­ச­க­ராக பத்து தினங்­க­ளுக்கு தான் பதவி வகிப்­பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்  நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால கடு­மை­ யாக விமர்­சித்­தி­ருப்ப­தற்கு பதி­ல­ளிக்கும் வகையில் மஹேல ஜய­வர்­தன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

 

‘‘இலங்­கை அணியின் முன்னாள் தலை­வ­ராக இருந்து மஹேல ஜய­வர்­தன மிக நீண்ட காலம் அணியில் விளை­யா­டி­யவர். அப்­ப­டி­யான அவருக்கு இலங்கை அணியின் பலம், பலவீனம், அணியின் உத்திகள் அனைத்தும் நன்கு தெரியும்.

 

இவ்வளவு விடயங்களைத் தெரிந்த அவர், தனது நாட்டிற்கு எதிராக விளையாடும் மற்றொரு அணிக்கு ஆலோசகராக செயற்படுவது நியாயத்திற்கு புறம்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்’’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந் நிலையில் தனது ஒழுக்­க­வியல் குறித்து சும­தி­பால கேள்வி எழுப்­பி­யி­ருப்­பது நகைப்­புக்­கு­ரி­யது எனவும் மஹேல ஜய­வர்­தன கூறி­யுள்ளார்.
இங்­கி­லாந்து வீரர்­களின் கிரிக்­கெட்டை மேம்­ப­டுத்­து­வதே தனது பணி எனவும் தந்­தி­ரோ­பாயத் தக­வல்­களை வழங்­கு­வ­தல்ல எனவும் அவர் கூறினார்.

 

‘‘சுழல்­பந்து வீச்­சா­ளர்­களை எவ்­வாறு எதிர்­கொள்­ள­வேண்டும் என்­பது உட்­பட சவால்­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­ப­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வதே எனது பணி.

 

இங்­கி­லாந்து என்னை அழைத்­த­போது உலக இரு­பது 20 போட்­டிக்­கான குழுக்கள் அறி­விக்­கப்­பட்டிருக்­க வில்லை. இலங்கை அணி தொடர்­பான தக­வல்­களைப் பெறு­வ­தற்­காக இங்­கி­லாந்து என்னை ஆலோ­ச­கராக அமர்த்த­வில்லை. அதற்­கென பகுப்­பாய்­வா­ளர்­களும் பயிற்று­நர்­களும் இருக்­கின்­றனர்.

 

நியா­ய­மாகக் கூறு­வதென்றால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் வெளி­யிட்டுள் கருத்­துக்கள் பெரும் ஏமாற்றம் அளிக்­கின்­றன’’ என மஹேல ஜய வர்தன குறிப்பிட்டார்.

 

‘‘உலக இரு­பது 20 ஆரம்­ப­மா­கும்­போது சர்­வ­தேச ஒருநாள் கிரிக் கெட் அரங்­கி­லி­ருந்து நான் ஓய்வு பெற்று ஒரு வரு­ட­மா­கி­யி­ருக்கும். இரு­பது 20 இலி­ருந்து ஓய்வு பெற்று சுமார் இரண்டு வரு­டங்கள் ஆகி­யி­ருக்கும்.

 

நான் அணியில் இடம்­பெற்ற காலங்­களில் வீரர்கள் மத்­தியில் காணப்­பட்ட அணு­கு­மு­றைகள் மாறாமல் அத­னையே அவர்கள் பின்­பற்­று­வ­தாக இருந்தால் அது பிரச்­சி­னை தான். அப்­ப­டித்­தானே?. இலங்கை அணியில் தற்­போது பல புதி­ய­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளுடன் நான் விளை­யா­டி­ய­தில்லை'' என அவர் மேலும் கூறினார்.

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் என்ற வகை யில் இங்­கி­லாந்தின் ஆலோ­ச­க­ராக ஜய­வர்­தன பதவி வகிப்­பது அவ­ரது  கொள்­கை­யற்றத் தன்­மையைக் காட்­டு­கின்­றது என திலங்க சும­தி­பால சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 

அதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஜய­வர்­தன, ‘‘அப்­ப­டி­யா னால் கிரஹம் போர்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அமர்த்­தி­ய­மையும் கொள்­கை­யற்­றதா என கேள்வி எழுப்பினார்.

 

‘‘எனது இத­யத்தில் இலங்­கைக்கு உய­ரிய இடத்தைக் கொடுத்­துள்ளேன். ஆனால், நான் தொழில்சார் கிரிக்கெட்­ து­றையைச் சேர்ந்­தவன்’’ என்றார் ஜய­வர்­தன.

 

‘‘உள்ளூர் கிரிக்கெட் விளை­யாட்டின் மேம்­பாட்டை முன்­னிட்டு 12 மாதங்கள் ஊதி­ய­மின்றி நான் வேலை செய்து ஒரு திட்­டத்­தையும் முன்­வைத்தேன். ஆனால், சும­தி­பால நிரு­வா­கத்­தினால் அந்தத் திட்டம் அகற்­றப்­பட்­டுள்­ளது’’ எனவும் அவர் கூறினார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.