Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கால்பந்தாட்டத்துறையில் ஐக்கியத்தை நிலைநாட்ட ஃபீஃபாவின் புதிய தலைவர் ஜியானி கங்கணம்
2016-02-29 10:39:40

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்கள் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) கௌர­வத்தை மீள நிலை­நாட்­டு­வதே தனது தலை­யாய பணி­யாக இருக்கும் என சம்­மே­ள­னத்தின் புதிய தலை­வ­ராக தெரி­வான சுட்­ர்­லாந்தின் ஜியானி இன்ஃ­பன்­டினோ தெரி­வித்­துள்ளார்.

 

 

‘‘அத்­துடன் கால்­பந்­தாட்­டத்­ து­றையில் காணப்­படும் பிள­வு­களை சீர்­செய்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­த­ வேண்டும். தவிர, சுவர்­களை எழுப்பி விரி­சலைப் பெரி­து­ப­டுத்­தக்­கூ­டாது.

 

கால்­பந்­தாட்­டத்­ து­றை­யினால் ஐக்­கி­யத்தை உரு­வாக்க முடியும் எனவே கால்­பந்­தாட்­டத்தில் அக்­கறை செலுத்­துவேன்’ என்றார் அவர். உலக கால்­பந்­தாட்­டத்­ து­றையை ஆளுமை செய்யும் உலக அமைப்பின் (ஃபீஃபா) ஒன்­ப­தா­வது தலை­வ­ராக ஜியானி இன்ஃ­பன்­டினோ, கடந்த வெள்­ளி­யன்று நடை­பெற்ற சம்­மே­ள­னத்தின் அதி­வி­சேட பொதுக் ­கூட்­டத்­தின்­போது தெரி­வானார்.

 

1998 முதல் நான்கு வரு­டங்­களைக் கொண்ட நான்கு தவ­ணை­களில் தொடர்ச்­சி­யாக தலை­வ­ரான செப் ப்ளட்டர், 2014 தேர்­த­லுக்குப் பின்னர் இலஞ்ச ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்ட குற்­றத்­தின்­ பேரில் பதவி நீக்­கப்­பட்டு எட்டு வருடத் தடைக்­குட்­பட்­டதை அடுத்து புதிய தலை­வ­ராக ஜியானி இன்ஃ­பன்­டினோ தெரி­வானார்.

 

கடந்த சில வரு­டங்­களில் ஃபீஃபாவின் உயர் அதி­கா­ரிகள் சிலர் கைது செய்­யப்­பட்­ட­துடன் சிலர் தடைக்­குள்­ளான சம்­ப­வங்கள் சம்­மே­ள­னத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­தாக அமைந்­தது.

 

எனினும் நடந்த தவ­று­களைத் திருத்தி சம்­மே­ள­னத்தின் கௌர­வத்தை மீண்டும் நிலை­நாட்டி ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தா­கவும் புதிய தலைவர் ஜியானி இன்ஃ­பன்­டினோ உறுதியளித்­துள்ளார். 

 

‘‘கடும் உழைப்பு, அர்ப்­ப­ணிப்­புத்­தன்மை ஆகி­ய­வற்றின் இழந்த கௌர­வத்தை மீளப் பெறுவோம். அத்­துடன் வியக்­கத்­தக்­கதும் விறு­வி­றுப்­பா­ன­து­மான கால்­பந்­தாட்­டத்­தின்பால் கவனம் செலுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

 

ஃபீஃபா துய­ரங்­களைக் கடந்­து­வந்­துள்­ள­துடன் சர்ச்­சை­க­ளிலும் சிக்­கி­யது. ஆனால் அவை அனைத்தும் முடிந்த கதை. இனி நடப்­பவை நல்­ல­தாக அமை­யட்டும்.

 

தவ­று­களைத் திருத்தி உலக கால்­பந்­தாட்­டத்தின் புக­ழுக்­காக நல்­லதை செய்வோம்’’ என 45 வய­து­டைய புதிய தலைவர் ஜியானி இன்ஃ­பன்­டினோ தெரி­வித்தார். ஃபீஃபாவின் தலை­வ­ராக தெரி­வா­ன­வர்­களில் ஜியா­னியே வயது குறைந்­த­வ­ராவார்.

 

‘‘கால்­பந்­தாட்­டத்தின் பங்­கு­தா­ரர்கள், தேசிய சங்­கங்­களின் உறுப்­பி­னர்கள், லீக்­கு­களின் உறுப்­பி­னர்கள், கழ­கங்­களின் உறுப்­பி­னர்கள், வீரர்கள் மற்றும் ர­சி­கர்கள் ஆகி­யோ­ருக்கு நான் சொல்­வ­தென்­ன­வென்றால், நீங்கள் ஃபீஃபா குறித்து பெருமை அடை­வீர்கள், கால்­பந்­தாட்­டத்­திற்­காக ஃபீஃபா செய்­யப்­போ­வ­தை­யிட்டு பெருமை அடை­வீர்கள்’’ எனவும் இன்ஃ­பன்­டினோ தெரி­வித்தார்.

 

‘‘நான் இப்­போது தலை­வ­ராக தெரி­வா­கி­யி­ருக்­கின்றேன். இனி­மேலும் நான் ஐரோப்­பா­வி­னதோ, இன்னும் ஒரு பகு­தி­யி­னதோ வேட்­பா­ள­ரல்லர். நான் கால்­பந்­தாட்­டத்தின் வேட்­பாளர். கால்­பந்­தாட்டம் என்­பது உல­க­மெங்கும் நிறைந்­த­தாகும்’’ என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

 

வெள்­ளி­யன்று நடை­பெற்ற தலைவர் பத­விக்­கான தேர்­தலில் 207 நாடு­களின் பிர­தி­நி­திகள் வாக்­க­ளித்­தனர். தேர்­தலில் போட்­டி­யி­ட­வி­ருந்த தென் ஆபி­ரிக்­காவின் டொயோட்டே செக்ஸ்வேல் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்­ற­துடன் குவைத், ஈரான் ஆகிய நாடு­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

முதல் சுற்று வாக்­கெ­டுப்பில் ஜியானி இன்ஃ­பன்­டி­னோ­வுக்கு 88 வாக்­கு­களும் ஷெய்க் சல்மான் பின் ஈப்­ராஹிம் அல் காலிஃ­பா­வுக்கு 85 வாக்­கு­களும் கிடைத்­தன.

 

இதில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­கா­ததால் இரண்டாம் சுற்று வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. அதில் இன்ஃ­பன்­டி­னோ­வுக்கு 115 வாக்­கு­களும் அல் காலிஃ­பா­வுக்கு 88 வாக்­கு­களும் கிடைத்­தன.

 

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் அரைவாசிக்கும் மேல் இன்ஃபன்டினோவுக்கு கிடைத்ததால் அவர் தலைவராகத் தெரிவானார்.

 

வாக்கெடுப்பின் முதல் சுற்றுடன் இளவரசர் அலி பின் ஹுசெய்ன் (27 வாக்குகள்), ஜெரோம் சேம்பாஞே (7 வாக்குகள்) ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இந்த வாக்கெடுப்பில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.