Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆசிய கிண்ண கிரிக்கெட்: பங்களாதேஷிடம் இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வி
2016-02-28 22:29:31

ஆசிய கிண்ண இருபது20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி 23 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

 

148 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்க 124 ஓட்டங்களையே பெற்றது.


 

 

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.

 

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மொஹம்மத் மிதுன், சௌம்ய சர்கார் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமல் முறையே மெத்யூஸ், நுவன் குலசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

 

முஸ்பிகுர் ரஹ்மானும் 4 ஓட்டங்களுடன் ரண் அவுட்டானார். எனினும், ஷபீர் ரஹ்மான் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்ட்றிகள் உட்பட 80 ஓட்டங்களைக் குவித்தார்.


ஷகீப் அல் ஹசன் 32 ஓட்டங்களையும் மொஹம்மத் மஹ்மதுல்லா 12 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.  

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் துஷ்மந்த சமீர 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஏஞ்சலோ மெத்யூஸ், நுவன் குலசேகர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8  விக்கெட் இழப்புக்கு124  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

 

இலங்கை அணியின் சார்பில் ஆகக்கூடுதலாக தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 21 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

கடைசி ஓவரில் 32 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது. நான்கு விக்கெட்டுகள் கைவசமிருந்தன. ஆனால், அந்த ஓவரில் மேலும் இரு விக்கெட்களை  வீழந்த நிலையில் மேலும் 8 ஓட்டங்களையே இலங்கை அணி பெற்றது.

 

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் அல் அமீன் ஹொஸைன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  ஷகீல் அல் ஹசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அதனால் ஏஞ்சலோ மெத்யூஸ் இன்றைய போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை  தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

இலங்கை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும் தருணம் இது: குமார் சங்கக்கார

 

இதேவேளை இப்போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இலங்கை அணிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

 

"தவறிழைக்காமல் கற்றுக்கொள்ள முடியாது. இலங்கை அணிக்கு உங்கள் ஆதரவு உண்மையில் தேவைப்படும் தருணம் இது. அவர்கள் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இலங்கை ரசிகர்களும் நம்பிக்கை கொள்வார்கள் என நம்புகிறேன்" என டுவிட்டரில் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
imran2016-03-02 13:26:59
நாங்கள் இலங்கை அணி. எவ்வளவு போட்டிகளிலும் எங்கள் அணி தோற்றாலும் நாங்கள் கடைசி வரைக்கும் இலங்கை அணி. இலங்கை அணி ஆசியாக் கிண்ணதிலும் மற்றும் T20 உலக கித்திலும் வெற்றி பெற வாழ்துகிறோம்.
0
0
safni2016-02-29 11:04:33
நாங்கள் இலங்கை அணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைதுள்ளோம்.எவ்வளவு போட்டிகளிலும் எங்கள் அணி தோற்றாலும் நாங்கள் கடைசி வரைக்கும் இலங்கை அணிக்கு ஆதரவாக இருப்போம்.இலங்கை அணிஆசியாக்கிணித்திலும் மற்றும் T20 உலக கித்திலும் வெற்றி பெற வாழ்துகிறோம்.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.