Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வத்தளை, ஜா - எல, வெலிசறை, களனி உட்பட்ட பகுதிகளில் முகமூடி கொள்ளையர் நடமாட்டம்: பொது மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை
2017-01-12 09:46:05

(ரெ.கிறஸ்ணகாந், எம்.எப்.எம்.பஸீர்)

 

களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட வத்தளை, ஜா எல, வெலிசறை, கிரிபத்கொடை உள்ளிட்ட பிரதேச  பாதையில் பயணிப்போரின் உடமைகளை கொள்ளையிடும்  ஆயுதம் தரித்த முகமூடி கொள்ளையர்கள் நடமாடுவ தாகவும் அதனால் அப்பகுதி மக்கள் மிக அவதானத்துடன் இருக்கு மாறும் பொலிஸ் தலைமையகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 

இந்தக் கொள்ளை கோஷ்டியானது பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்­பு­பட்­டுள்­ளமை இதுவரை­யி­லான விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அந்த முக­மூடி கொள்­ளை­யர்­களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

 

இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் மேற்­படி கொள்ளைக் கோஷ்­டி­யா­னது  இரு­வரைக் கொண்­டது  என்­பதும் கறுப்பு நிற மோட்டார் சைக்­கிள்­களில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் மற்றும் ஜக்­கட்­டுக்­களை அணிந்­த­வாறு இவர்கள் கொள்­ளை­களில் ஈடு­ப­டு­வதும் தெரிய வந்­துள்­ளது. 

 

குறிப்­பாக வத்­தளை, ஜா எல,  வெலி­சறை, கிரி­பத்­கொடை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் இவர்­களின் கைவ­ரிசை அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் பாத­சா­ரி­களின் உடைமை­களை இவர்கள் கொள்­ளை­யிட்டுச் சென்ற பல சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். 

 

ஆயு­தங்­க­ளுடன் நட­மாடும் இக்­கொள்ளைக் கோஷ்­டி­ எரி­பொருள் நிரப்பு நிலை­யங்கள்,  நிதி நிறு­வ­னங்­களில் இடம்பெற்ற கொள்ளைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அதனால் பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி எச்சரித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.